என்னடா டெஸ்லா.. எங்க டாடா இருக்க என்ன கவலை.. புதிய அவின்யா கார்..!

இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் தீ பிடித்து எறிந்தாலும் மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது இருக்கும் மோகம் சற்றும் குறையவில்லை என்று தான் கூற வேண்டும். இதற்கு முக்கியக் காரணம் எலக்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் தான் பிரச்சனை என மக்கள் புரிந்துகொண்டனர். அனைத்திற்கும் மேலாகப் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்திருக்கும் நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே தீர்வாக உள்ளது. இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் மிகவும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு டெஸ்லா கார்களுக்குப் … Read more

அம்பேத்கர் புகைப்படம் நீக்கம்; அரசுக்கல்லூரி முதல்வர் பணியிட மாற்றம்; ராமதாஸ் கண்டனம்! நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள அய்யந்தோப்பு பகுதியில் இயங்கி வருகிறது ‘கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி’. இந்த கல்லூரி முதல்வர் அறையில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் புகைப்படம், கல்லூரி முதல்வராலேயே நீக்கப்பட்ட விவகாரம் அண்மையில் பெரும் பேசுபொருளுக்கு உள்ளானது. இதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன. இந்நிலையில், கோவிந்தசாமி அரசு கல்லூரி முதல்வர் நாமக்கல் மாவட்டத்திற்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அம்பேத்கர் இதன் பின்னணி குறித்து அந்த கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் … Read more

பிரபல நகைச்சுவை நடிகையான ரங்கம்மா பாட்டி காலமானார்

சென்னை: பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ரங்கம்மாள் பாட்டி உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். அவருக்கு வயது 85. கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட ரங்கம்மாள் பாட்டி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்து 1967ல் வெளி வந்த விவசாயி திரைப்படத்தில், தயாரிப்பாளர் சின்னப்பா தேவரால் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என தற்போது உள்ள அஜித், விஜய், விஷால், உதயநிதி ஸ்டாலின் வரை பல … Read more

நாகை அருகே கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

நாகை: திருமருகல் அருகே கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்துள்ளார். தேரானது தெற்கு வீதியில் திரும்பும் போது சக்கரத்தில் சிக்கி இளைஞர் தீபராஜன் இறந்துள்ளார். இளைஞர் தீபாராஜன் உயிரிழந்தது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் தெருவடைத்தான் தேரோட்டம் நள்ளிரவு நடந்துள்ளது.

மின்னணு வாக்கு இயந்திரத்தை தவறாக பயன்படுத்த முடியாது: தேர்தல் கமிஷனர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டில்லி: மின்னணு வாக்கு இயந்திரத்தை தவறாக பயன்படுத்த முடியாது என தேர்தல் கமிஷனர் சுஹில் சந்திரா தெரிவித்துள்ளார். டில்லியின் பக்தவார்பூர் பகுதியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் சுஹில் சந்திரா புதிதாக நிர்வாக கட்டிடம் ஒன்றை திறந்து வைத்தார். அப்போது சிறப்புரையாற்றிய அவர் தேர்தல் வாக்கு இயந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.மின்னணு வாக்கு இயந்திரம் தேர்தல் ஆணையத்தின் ஓர் முக்கிய மைல்கல்லாக திகழ்வதாகவும் கடந்த நான்கு பாராளுமன்ற … Read more

மாயமான பிரித்தானிய தாயார் தொடர்பில் வெளியான முதல் புகைப்படம்

பிரித்தானியாவில் ஏழு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படும் தாயாரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபரின் முதல் படம் வெளியிடப்பட்டுள்ளது. ஏழு நாட்களுக்கு முன்பு தமது வாகனத்தில் சென்ற Katie Kenyon என்பவர் அதன் பின்னர் குடியிருப்புக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் இவரது முன்னாள் காதலர் 50 வயதான Andrew Burfield என்பவரை சந்தேகத்தின் அடிப்படையி;ல் பொலிசார் கைது செய்தனர். 33 வயதான Katie Kenyon, இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான இவர் கடந்த வெள்ளிக்கிழமை பகல் சுமார் … Read more

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. … Read more

ஏப்-30: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எல்.ஐ.சி., பங்குகளை வாங்க 6 கோடி பாலிசிதாரர் தயார்| Dinamalar

பெங்களூரு: எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டின் போது, அதன் பங்குகளை வாங்க, ஆறு கோடிக்கும் அதிகமான பாலிசிதாரர்கள் ஆர்வமாக இருப்பதாக, முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை இயக்குனர் ராகுல் ஜெயின் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது: எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டின் போது, பங்குகளை வாங்க, கிட்டத்தட்ட ஆறு கோடிக்கும் அதிகமான பாலிசிதாரர்கள் தயாராக உள்ளனர்.பங்குகளை வாங்க விண்ணப்பிக்க ஏதுவாக, கிட்டத்தட்ட 6.48 கோடி பாலிசிதாரர்கள், தங்களுடைய பான் எண்ணை, பாலிசி தகவல்களுடன் இணைத்துள்ளனர். கடந்த … Read more

வேலையை விட்டுவிட்டு… உக்ரைன் வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கனேடிய குடும்பம்

கனடாவில் வசித்துவந்த உக்ரேனிய குடும்பம் ஒன்று தங்களின் வேலைகளை விட்டுவிட்டு, உக்ரேனிய வீரர்களுக்கு உதவும் பொருட்டு களமிறங்கியுள்ளனர். கனடாவில் வசித்து வந்த Fesiak குடும்பமே, தங்களின் வேலையை விட்டுவிட்டு, இராணுவத்தினருக்கு உதவும் பொருட்டு, உக்ரைனுக்கு திரும்பியவர்கள். 54 வயதான Alex Fesiak விற்பனைத் துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவரது காதலி Natalka உணவக உரிமையாளராக உள்ளார். ஒரே ஒரு மகள் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது இவர்கள் மூவரும் ஆளில்லா விமானங்களை இயக்கும் பணியிலும், பாதுகாப்பு உடைகளை … Read more