உக்ரைனிலிருந்து இரகசியமாக உணவைத் திருடும் புடினுடைய கேவலமான திட்டம் லீக்கானது

உலக நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள தடைகள் காரணமாக அந்நாட்டில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு உருவாகி வரும் நிலையில், தான் போர் தொடுத்துள்ள உக்ரைனிலிருந்து உணவைத் திருட புடின் இரகசியத் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. Krasnoyarsk நகரைச் சேர்ந்த புடின் ஆதரவு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரான Vladislav Zyryanov என்பவர், தங்கள் சட்டசபையின் இணையதளத்தில் இது தொடர்பான ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். அதாவது, உக்ரைனின் தெற்கு பகுதிகளிலிருந்து, அதாவது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைன் நகரங்களிலிருந்து உணவுப்பொருட்களை … Read more

பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள்  இயக்க நடவடிக்கை! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது நேரத்தின் போது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நிறுத்தப்பட்ட இடங்களில் மீண்டும் போக்குவரத்து தொடங்க வேண்டும், பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய  அமைச்சர் சிவசங்கர் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட வழித் தடங்களை ஆராய்ந்து, மீண்டும் … Read more

இலங்கை மக்களுக்கு தொடர்ந்து உதவ தயார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:l தீர்மானத்தின் மீது சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், ஈஸ்வரன், ஜவாஹிருல்லா, மாரிமுத்து, நாகை மாலி, ஷானவாஸ், நயினார் நாகேந்திரன், ஜி.கே.மணி, செல்வபெருந்தகை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பேசினார்கள். இந்த தீர்மானத்தை நிறைவேற்றி தருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:- இந்த வரலாற்று சிறப்பு மிக்க, மனிதநேய மிக்க தீர்மானத்தை ஆதரித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும், உறுப்பினர்கள் வரவேற்று, ஆதரித்து பேசியதற்கு நன்றி தெரிவித்துக் … Read more

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் 5 மாதங்களில் 20 மான்கள் இறந்துவிட்டதாக வந்த செய்திக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு..!!

சென்னை: சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் 5 மாதங்களில் 20 மான்கள் இறந்துவிட்டதாக வந்த செய்திக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஏப்ரல் 20ல் வெளியான செய்தியை மறுத்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் ஸ்டார் தோட்டத்தில் உள்ள உள்நாட்டு புல் தரையை மெக்ஸிகோ புல் தரையாக மாற்றவில்லை என்றும் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் மேலும் 3,377 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் மேலும் 3,377 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் நேற்று(ஏப்.,28) மேலும் 3,377 பேருக்கு கோவிட் உறுதியானது. 2,496 பேர் குணமடைந்தனர். 60 பேர் உயிரிழந்தனர். தற்போது 17,801 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,30,622 ஆனது. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,23,753 ஆனது.கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.74 சதவீதமாகவும், இறந்தவர்களின் விகிதம் 1.22 சதவீதமாகவும் உள்ளது. … Read more

தங்கம் விலை ஏப்ரலில் 1.7% வீழ்ச்சி.. இது வாங்க சரியான வாய்ப்பா.. இன்று குறைந்திருக்கா?

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்று மீண்டும் சற்று ஏற்றத்தினைக் கண்டுள்ளது. இது தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே 1900 டாலர்களுக்கு கீழாக குறைந்து வர்த்தகமாகி வந்த நிலையில், இது மீண்டும் 1900 டாலர்களுக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலையானது ஏப்ரல் மாதத்தில் இதுவரையில் கிட்டதட்ட 2 சதவீதம் சரிவினைக் கண்டுள்ளது. இதே வெள்ளி விலையும் 5% சரிவினைக் கண்டுள்ளது. இது வாங்க சரியான இடமா? இனியும் குறையுமா? தற்போது சர்வதேச சந்தையில் என்ன … Read more

“கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்!" – அரசுக்கு கோரிக்கை வைக்கும் விவசாயிகள்

தற்போது, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதிகளில் விவசாயிகள், பல ஏக்கர் நிலங்களில் மிளகு சாகுபடி செய்து வருகின்றனர். கொல்லிமலையில் மிதமான தட்பவெப்ப நிலை, ஈரப்பதம் அதிகம் உள்ளதால், மிளகு வளர்ச்சிக்கு உதவியாக அமைகிறது. மிளகு விவசாயிகள் உலகத்தரம் வாய்ந்த மிளகுகளை இங்கு சாகுபடி செய்து வருகின்றனர். உலக அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்குவது கொல்லிமலை மிளகு. `கருப்பு தங்கம்’ என அழைக்கப்படும் மிளகானது, கர்நாடகம், கேரளத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. … Read more

உக்ரைனை தொடர்ந்து டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் பதற்றம்! உடனே வெளியேற குடிமக்களுக்கு இஸ்ரேல் உத்தரவு

டிரான்ஸ்னிஸ்ட்ரியாவை விட்டு விரைவில் வெளியேறுமாறு மால்டோவாவுக்கான இஸ்ரேலிய தூதர் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மால்டோவாவிலிருந்து பிரிந்து சென்ற பிராந்தியமான டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் டிரோன்கள் தான் டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் தாக்குதல் நடத்தியதாக பிராந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேசமயம், உக்ரைன் மீது பழிபோட டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் ரஷ்யா போலி தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனிடையே, டான்பாஸை வைத்து உக்ரைன் மீது படையெடுத்தது … Read more

இந்தியாவில் வாழ விரும்புவோர் ஹிந்தியை நேசிக்க வேண்டும்! உ.பி. அமைச்சர் சர்ச்சை

லக்னோ: இந்தியா முழுவதும் இந்தி மொழி குறித்த அமித்ஷாவின் பேச்சு மீண்டும் விவாதப்பொருளாகி மாறி வரும் நிலையில், இந்தியாவில் வாழ விரும்புவோர் ஹிந்தியை நேசிக்க வேண்டும், இந்தியை நேசிக்காதவர்கள் வெளிநாட்டினர் என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஏப்ரல் 8ந்தேதி அன்று  நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியே இருக்க வேண்டும் … Read more

ஆன்லைன் சூதாட்டத்திற்கு முடிவு கட்டுவது எப்போது?- அன்புமணி ராமதாஸ் கேள்வி

சென்னை: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆன்லைன் சூதாடுவதற்காக கொலைகளை செய்து கொள்ளையடித்தனர். இப்போது தொடர் சங்கிலிப் பறிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை, கொள்ளைகளைத் தூண்டும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு முடிவு எப்போது? ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்படவில்லை என்றால், ஏராளமான குடும்பங்கள் தங்களின் குடும்ப தலைவர்களையும், உடமைகளையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விடும். வாழ வேண்டிய இளைஞர்கள் … Read more