பாகிஸ்தான் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தம்பி ‘ஷெபாஸ் ஷெரீப்’ தேர்வு…

இஸ்லாமாபாத்: நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்த் நிலையில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக, எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் இன்று  தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியாவார்.  இதற்கு எதிர்ப்பதெரிவித்து, அவையில் இருந்து இம்ரான்கான் தனது ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்தார். பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக,  பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அவரது அரசை கவிழ்க்க முயற்சி செய்தன. இதற்கு ஆதரவாக இம்ரான்கான் ஆதரவு கட்சிகள் இரண்டு, … Read more

தென்மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வானிலை ஆய்வு மைய இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (12-ந் தேதி) தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு … Read more

பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படுவது கால சூழ்நிலை: திருச்செங்கோட்டில் சசிகலா பேட்டி

நாமக்கல்: பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படுவது கால சூழ்நிலை என சசிகலா திருச்செங்கோட்டில் பேட்டியளித்தார். பாஜக வளர நினைப்பதில் தவறில்லை; புது கட்சியை யார் தொடங்கினாலும் அவர்கள் வளரத்தான் நினைப்பார்கள் என சசிகலா தெரிவித்தார். 

லாபத்தினை அள்ளிய ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.. 2 வருடத்தில் 150% லாபம்.. நீங்க?

இந்தியாவின் பிரபல பங்கு சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களில் பிரபலமானவர். இவர் ஒரு பங்கினை விற்றாலும், வாங்கினாலும் அது கவனிக்க வேண்டிய பங்குகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. அந்த வகையில் கடந்த மார்ச் காலாண்டில் டிராக்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் பங்கினை விற்பனை செய்துள்ளார் என்பது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. இன்று காலை நேர நிலவரப்படி கூட இப்பங்கின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது. அதே … Read more

கும்பம் குருப் பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023 | Guru Peyarchi | Sakthi Vikatan #gurupeyarchi

கும்பம் guru peyarchi | ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்கள் குரு பகவான் 13-4-2022 அன்று கும்ப ராசியில் இருந்து தன் சொந்த வீடான மீன ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த ஓர் ஆண்டு குருபகவான் மீன ராசியில் இருந்து பலன் கொடுப்பார். இந்த குருப் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எப்படிப் பட்ட பலன்களைக் கொடுக்கும் என்று விளக்குகிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் #Kumbam #GuruPeyarchi #GuruPeyarchiPalan Source link

லண்டனில் இலங்கையருக்கு கிடைத்த கெளரவம்! மேடையில் சொந்த நாட்டின் நிலை குறித்து உருக்கம்

லண்டனில் நடைபெற்ற 2022 ஒலிவியர் விருதுகள் வழங்கும் விழாவில் இலங்கையின் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ நாடகத் தழுவலுக்காக ஹிரன் அபேசேகர பெற்றார். லைஃப் ஆஃப் பை நாடகம் சிறந்த புதிய நாடகமாகப் பெயரிடப்பட்டதுடன் பல தொழில்நுட்பரீதியிலான பரிசுகளையும் பெற்றது. விருது வாங்கிய பின்னர் ஹிரன் பேசுகையில், இந்த விருதினை என் சொந்த நாடான இலங்கைக்கு காணிக்கை செய்கிறேன். இப்போது இலங்கை கடுமையான சூழலில் இருக்கிறது, … Read more

ஊட்டி மலர் கண்காட்சி மே 20ந்தேதி தொடங்குகிறது…

நீலகிரி: ஊட்டி மலர் கண்காட்சி மே 20ந்தேதி 24ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு வருடங்களாக தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியை காண லட்சக்கணக்கானோர் ஊட்டியில் குவிவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் தொடங்கி உள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மக்கள் கோடை வாசஸ்தலங்களை நாடிச் செல்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான சூழலை … Read more

தமிழகத்தில் இந்தியை நுழைய விடமாட்டோம்- ஜெயக்குமார் பேட்டி

சென்னை: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சொத்து வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைக்கு மட்டுமே இடம் உண்டு. மும்மொழிக் கொள்கைக்கு இடம் இல்லை. உலகத்தின் முன்னோடி மொழியாக தமிழ் இருக்க தமிழகத்தில் இந்தி மொழியை எந்தவிதத்திலும் நுழைய விடமாட்டோம். தமிழ் மொழி அனைத்து மொழிகளையும் விட மூத்த மொழி. எனவேதான் பிரதமர் மோடி … Read more

பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஹெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஹெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி இழந்ததை அடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பிரதமர் தேர்தலை இம்ரான்கான் கட்சியினர் கூண்டோடு புறக்கணித்ததால் ஷாபாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு தேர்வானார்.