இந்த முறை டார்கெட் மிஸ் ஆகாது.. மத்திய அரசு உறுதி..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த நிதியாண்டில் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ வெளியிட முடியாமல் போனது. மார்ச் மாத இறுதிக்குள் எப்படியாவது வெளியிட வேண்டும் நடப்பு கணக்கு பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தது. ஆனால் ரஷ்யா – உக்ரைன் போர் சர்வதேச சந்தையில் ஏற்படுத்திய தாக்கம் மத்திய அரசின் கனவு திட்டமான எல்ஐசி ஐபிஓ ஒத்தி வைக்கப்பட்டது. இது மத்திய அரசுக்கு மட்டும் அல்லாமல் பல லட்சம் ரீடைல் … Read more

5 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை; பொதுமக்களின் எதிர்ப்பால் மீண்டும் மூடல்!

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும், 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. அந்த டாஸ்மாக் கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக மதுப் பழக்கத்திற்கு அடிமையாவதாகவும், குடும்பங்கள் சீரழிவதாகவும் பொதுமக்கள் புகார் எழுப்பினர். அதையடுத்து, அந்த டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், மக்கள் ஒன்று திரண்டு 2017, மே.20-ம் தேதி மாதர் சம்மேளன மாவட்டத் தலைவர் இந்திராணி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் … Read more

கொல்லப்பட்ட உக்ரைன் மேயர் ரஷ்யா தொடர்பில் கூறிய கடைசி வார்த்தை

உக்ரைன் பெண் மேயர் ஒருவர் ரஷ்ய துருப்புகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படும் முன்னர் தமது கிராம மக்களுக்கு அளித்த செய்தி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உக்ரைன் நகர மேயரான Olga Sukhenko ரஷ்ய துருப்புகளால் கடத்தப்பட்டு, அவரது சடலமானது கணவர் மற்றும் மகன் உடல்களுடன் பள்ளம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. Olga Sukhenko வசித்துவந்த குடியிருப்பில் இருந்தே குடும்பத்துடன் ரஷ்ய துருப்புகளால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு, படுகொலை செய்து வனப்பகுதியில் ஒரு பள்ளத்தில் சடலத்தை வீசிச் சென்றுள்ளனர். ரஷ்ய துருப்புகளுக்கு … Read more

இந்த மாத இறுதியில் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்…

டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இரண்டு முறை அவரது இந்திய பயணம் கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவர் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியா-இங்கிலாந்து இடையேயான  வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி, இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ … Read more

தமிழகத்தில் 2023-ம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்- மு.க.ஸ்டாலின்

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் 110-வது விதியின்கீழ் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையில் தொழில் துறையை மீட்டெடுப்போம்”, “தொழில் வளர்ச்சியை பரவலாக்க கொள்கைகள் வகுக்கப்படும்”, “தொழில் தொடங்க முன்வருவோரை ஊக்குவிக்கக்கூடிய வகையில் ஒற்றைச் சாளர முறை மூலமாகத் தொழில் வளத்தைப் பெருக்குவோம்” என்று தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தோம். அந்த வாக்குறுதிகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இந்த அரசு … Read more

கும்மிடிப்பூண்டியில் ரூ.13,000 லஞ்சம் பெற்ற மின் வணிக ஆய்வாளர் கைது

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் ரூ.13,000 லஞ்சம் பெற்ற மின் வணிக ஆய்வாளர் ஜெகன் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய மின் இணைப்பு தர இந்திரஜித் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதுச்சேரியில் 4 நாட்களுக்கு கடற்கரை திருவிழா| Dinamalar

புதுச்சேரி : ‘புதுச்சேரியில் வரும் 13ம் தேதி முதல், 16ம் தேதி வரை கடற்கரை திருவிழா நடைபெற உள்ளது’ என அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டில் சிறந்த சுற்றுலா நகரமாக புதுச்சேரி மாறியுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்து வருகின்றனர். இதனால் பல்வேறு சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் கடந்த ஆண்டு களில் ஏற்படுத்தப் பட்டது. வம்பா கீரப்பாளையம் பாண்டி … Read more

தமிழ், தெலுங்கினை அதிகம் விரும்பும் மக்கள்.. ZEE5 எடுத்த சூப்பர் முடிவு.. 2022ல் களைகட்ட போகுது!

ZEE5 நிறுவனம் அதன் தமிழ் மற்றும் தெலுங்கு பிரிவுக்கு அதன் முதலீட்டில் கிட்டதட்ட மூன்று மடங்கு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜீ-பைவ்வின் சந்தாரர்கள் தலா 20% பங்களிக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு பிரிவுகளை மேம்படுத்த, கிட்டதட்ட அதன் முதலீடுகளை மூன்று மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைமை வணிக அதிகாரி மணிஷ் கல்ரா தெரிவித்துள்ளார். ஓடிடி பயனர்களின் விகிதமானது சிறு நகரங்களிலும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், நிறுவனம் பிராந்திய மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. தட்டி தூக்கிய டிசிஎஸ்.. … Read more

BB Ultimate 66: உக்கிரமாக டாஸ்க் ஆடிய பாலா; `நான் மட்டும் கேம்ல இருந்திருந்தா…' அனிதாவின் அனத்தல்!

அல்டிமேட் சீசனைக் கடைசி வாரத்திலாவது சுவாரஸ்யப்படுத்தலாம் என்று ஒரு புதிய போட்டியாளர் களத்தில் இறங்கியிருக்கிறார். அது பிக் பாஸேதான். ஆம், நேற்றைய எபிசோட் சற்றாவது சுவாரஸ்யம் அடைந்ததற்கு பிக் பாஸின் சேட்டைகளும் ஒரு முக்கிய காரணம். ஆனால் இன்னொரு பக்கம் டெரர் முகத்தையும் பிக் பாஸ் காட்டினார். அவருக்கு என்னதான் ஆச்சு?! நாள் 65-ல் நடந்தது என்ன? ‘சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்’ என்று காலையில் ஒலித்த அட்டகாசமான பாடலுக்கு பரதநாட்டியம் அறிந்த அபிராமி இன்னமும் கூட … Read more

வெளிநாடு ஒன்றிலிருந்து பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்ட வாழைப்பழங்கள்: பரிசோதித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொலம்பியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த வாழைப்பழங்கள் அடங்கிய பார்சல்களைத் திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ஆம், அந்த பார்சல்களுக்குள், வாழைப்பங்களுக்கு இடையே எக்கச்சக்கமான போதைப்பொருள் அடங்கிய பொட்டலங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படையும், தேசிய குற்றவியல் ஏஜன்சியும் இணைந்து மேற்கொண்ட ஆபரேஷனில் சிக்கிய, சுமார் 3.7 டன் எடை இருந்த அந்த போதைப்பொருளின் மதிப்பு, 302 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இது குறித்து பேசிய பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல், … Read more