சொத்துவரியை உயர்த்தமாட்டோம் என்ற வாக்குறுதியை தி.மு.க. மீறிவிட்டது- ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், திருச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான 8 மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர்களான விருகை வி.என்.ரவி, வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ். … Read more