கர்நாடக தேர்தல் 2023: பாஜக தான் டாப்… ஆனா ஒரு பெரிய சிக்கல்- வெளியான சர்வே முடிவுகள்!

கர்நாடக மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் மே 24ஆம் தேதி உடன் முடிவுக்கு வருகிறது. அதற்குள் தேர்தலை நடத்தி புதிய ஆட்சி பொறுப்பேற்க வேண்டும். இதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது. அடுத்த சில வாரங்களில் அறிவிப்பு வெளியாகி தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அரசியல் கர்நாடகாவை பொறுத்தவரை காங்கிரஸ் , பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையில் தான் பிரதான போட்டியே. மொத்தமுள்ள … Read more

முதலில் DA உயர்வு..இப்பொது மற்றொரு ஜாக்பாட் செய்தி ஊழியர்களுக்கு

7வது சம்பள கமிஷன் புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி சமீபத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்திய மத்திய அரசு தற்போது வீட்டு வாடகை கொடுப்பனவையும் (HRA) அதிகரிக்கப் போகிறது. இதனிடையே மத்திய அரசு சமீபத்தில் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது, அதன் பிறகு தற்போது ஊழியர்களுக்கு 42 சதவீத விகிதத்தில் அகவிலைப்படி கிடைக்கும். மறுபக்கம் தற்போது வீட்டு வாடகை கொடுப்பனவையும் உயர்த்தப் போகிறது மத்திய அரசு. இது  தொடர்பான அறிவிப்பை கூடிய விரைவில் … Read more

மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம்

டெல்லி: மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கமிடுகின்றனர். ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கருப்பு உடையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம்

பில்கிஸ் பானோ பாலியல் குற்றவாளிக்கு அரசு விழாவில் முன்னுரிமை: குஜராத்தில் சர்ச்சை நிகழ்வு!

பில்கிஸ் பானோ என்ற கர்ப்பிணியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, 3 வயது குழந்தை உட்பட 7 பேரை கொடூரமாக கொன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற 11 பேரும் கடந்த ஆண்டு ‘முன்கூட்டியே’ விடுதலை செய்யப்பட்டனர். அதில் ஒருவரான சைலேஷ் சிமன்லால் குஜராத்தில் நடந்த அரசு விழாவில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு நிகராக மேடையில் அமர்ந்திருந்த நிகழ்வு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தகோட் மாவட்டத்தில் குடிநீர் விநியோக தொடர்பான நிகழ்ச்சி … Read more

ராகுல் தகுதி நீக்க விவகாரம்: கறுப்பு உடையுடன் திரிணமூல் காங். தந்த ஆச்சரியம்; வரவேற்ற காங்கிரஸ்!

புதுடெல்லி: எதிர்க்கட்சி முகாமில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக, காங்கிரஸ் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முதல் முறையாக திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.மேலும், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிராக நடந்த கறுப்பு உடைப் போரட்டத்திலும் கலந்து கொண்டனர். சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின் நாடாளுமன்றம் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு கூடியது. அப்போது, ராகுலின் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக கறுப்பு உடை போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. முன்னதாக … Read more

ரயில்வே ஸ்டேஷனில் இனி இந்த வேலையை செய்தால் ஃபைன் கட்டனும், எச்சரிக்கும் அரசு

ரயில் டிக்கெட்: இரயில்வே என்பது இந்தியாவில் போக்குவரத்துக்கான ஒரு வழியாகும், இதன் மூலம் ஏராளமான மக்கள் பயணிக்கின்றனர். நாட்டில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பாதையில் பயணிக்கின்றனர். அதே நேரத்தில், ரயில்வே டிக்கெட் முன்பதிவு செயல்முறையும் முன்பை விட எளிதாக உள்ளது. இதனிடையே இருப்பினும், இனி ரயில் நிலையத்திற்குச் செல்லும் முன், சில விதிகளை மனதில் கொள்ள வேண்டும். இந்த விதிகள் பின்பற்றப்படாவிட்டால், நீங்கள் அபராதம் கொடுக்க வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், ரயில் நிலையத்திற்குச் செல்லும்போது என்ன … Read more

பொன். மாணிக்கவேல் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: தன் மீது ஐகோர்ட் தெரிவித்த கருத்துகளை நீக்கக் கோரி பொன். மாணிக்கவேல் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கருத்துக்களை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாட பொன். மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது. பொன். மாணிக்கவேல் மனுவை மெரிட் அடிப்படையில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட்டுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபானம், காண்டம், 15 படுக்கைகள் : பள்ளிக்கு சீல் ..!!

பள்ளி ஒன்றில் திடீர் சோதனையின் போது மதுபானம் மற்றும் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக் குழுவின் உறுப்பினரும், மாவட்ட ஆட்சியருமான நிவேதிதா சர்மா கூறியதாவது,”வழக்கமான ஆய்வுக்காக நாங்கள் அங்கு சென்றபோது, ​​பள்ளியின் இரு மூலைகளும் உள்ளிருந்து எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டோம். அங்கு ஒரு அறையில் மது பாட்டில்கள், … Read more

சாவர்க்கரை குறிப்பிட்ட ராகுல் | “குதிரைப் பந்தயத்துக்கு ஏன் கழுதையை இழுக்கிறீர்கள்?” – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்

புதுடெல்லி: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் பிரச்சினையை நீதிமன்றம் வாயிலாக அணுகாமல் சாவர்க்கர் பற்றியும் மகாபாரதம் பற்றியும் பேசுவது ஏன் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், “தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை ராகுல் காந்தி சட்டபூர்வமாகத்தான் அணுக வேண்டும். வீர் சாவர்க்கர் பற்றியும் மகாபாரதம் பற்றியும் பேசுவதை விடுத்து ராகுல் காந்தி நீதிமன்ற நடவடிக்கையை நீதிமன்றம் வாயிலாகவே அணுக வேண்டும். ஆனால், … Read more

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு..!!

பெங்களூரு: கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசப்பட்டது. போராட்டக்காரர்கள் தடுப்புகளை தள்ளி, போலீசார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இடஒதுக்கீடு பிரிக்கப்பட்ட விதத்தில், தங்களின் பங்கு குறைக்கப்பட்டதாக பஞ்சாரா சமூகத்தினரின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தேர்தல் நெருங்கியுள்ள நேரத்தில் ஷிமோகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை இட ஒதுக்கீடு தொடர்பாக எடுத்த முடிவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.