36 செயற்கைக் கோளை சுமந்து சென்ற இஸ்ரோவின் எல்விஎம்-3 ராக்கெட் பயணம் வெற்றி

சென்னை: இங்கிலாந்து ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களும் இஸ்ரோவின் எல்விஎம்-3 ராக்கெட்மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவன செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 (எல்விஎம்-3)ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த, இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (Newspace India Limited) நிறுவனம் சுமார் ரூ.1,000 கோடியில் ஒப்பந்தம் செய்தது. முதல்கட்டமாக, 36 செயற்கைக் கோள்கள் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த அக்.23-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன. 2-வதுகட்டமாக 36 செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான பணிகள் தொடங்கின. ஆந்திர … Read more

புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி பாஜக பிரமுகர் கொலை.. போலீசார் விசாரணை!

புதுச்சேரி வில்லியனூரில் பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். கணுவாப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமரன் என்பவர் அங்குள்ள பேக்கரி கடையில் நின்று கொண்டிருந்த போது, அங்குவந்த மர்ம கும்பல் திடீரென அவர் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் நிலைகுலைந்து கீழே சரிந்த அவர், சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்த போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றாவாளிகளை தீவிரமாக … Read more

மபியில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜ வெல்லும்: ஜே.பி.நட்டா உறுதி

போபால்: மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜ அறுதி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உறுதிபட தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜவின் 15 ஆண்டுகால ஆட்சியை அகற்றி விட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதல்வராக பதவியேற்றார். ஆனால் உள்கட்சி பூசல் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்கள் 22 பேருடன் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். இதையடுத்து பாஜ மீண்டும் ஆட்சியமைக்க … Read more

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் முர்மு 2 நாள் சுற்றுப்பயணம்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் அரசு முறைப் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குடியரசுத் தலைவர் முர்முமேற்கு வங்கத்தில் திங்கள்கிழமை (இன்று) முதல் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது, கொல்கத்தாவில் யூகோ வங்கியின் 80 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விழாவில்பங்கேற்கும் அவர், விஸ்வபாரதியின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சாந்திநிகேதனுக் கும் செல்ல உள்ளார். கொல்கத்தாவில் உள்ள நேதாஜி பவனுக்கு … Read more

போஜ்புரி பட நடிகை ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை? இன்ஸ்டாவில் அழுதுகொண்டே வீடியோ வெளியிட்ட நிலையில் விபரீதம்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போஜ்புரி நடிகை ஆகான்ஷா துபே, ஹோட்டல் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டில் ‘மேரி ஜங் மேரா பைஸ்லா’ படத்தின் மூலம் அறிமுகமான ஆகான்ஷா, அதன்பின் போஜ்புரியில் வெளியான முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்திலும், வீரோன் கே வீர், பைட்டர் கிங், கசம் பைதா கர்ணே கி 2 மற்றும் பிற படங்களிலும் நடித்துள்ளார். அகான்ஷா தற்கொலை செய்துகொள்வதற்கு சில மணி நேரங்கள் முன்பு, கண்ணீர் சிந்தியபடி … Read more

ஒரே நாளில் 1,890 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,890 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  நாட்டில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை  கொஞ்சம்,கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை நெருங்கியுள்ளது மக்களை அதிர்ச்சி  அடைய செய்து உள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  கடந்த 149 நாட்களில் … Read more

ட்விட்டரில் பயோவை மாற்றிய ராகுல் காந்தி..!

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி … Read more

பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் மாநில கட்சிகளை காங். ஆதரிக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ் வேண்டுகோள்

லக்னோ: பாஜகவுக்கு எதிரான போராட்டத் தில் மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத்தின் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதன்காரணமாக மக்களவை உறுப்பினர் பதவியை அவர் இழந்துள்ளார். அவருக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. காங்கிரஸ், பாஜக அல்லாத 3-வது கூட்டணியை உருவாக்க முயற்சித்து வரும் … Read more

100 நாள் வேலை உறுதி திட்ட ஊதியம் உயர்வு: ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் 2023-24ம் ஆண்டுக்கான ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 2023-24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில், 100 நாள் வேலை உறுதி திட்டத்துக்கான ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.73 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட … Read more

கேரளாவில் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது..!

கேரளா மாநிலம் கொச்சி அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டரில் எதிர்பாராதவிதமாக தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது, ஓடுதளத்துக்கு வெளியே நொறுங்கி விபத்துக்குள்ளானது. முதற்கட்ட தகவலின் படி, விமானி ஒருவர் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளதகாவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் நடந்த இடத்தில், மீட்பு படையினர் மீட்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு … Read more