கர்நாடக தேர்தல் 2023: இங்கயும் பி.கே பாய்ஸ் தான்… களமிறங்கிய பிரசாந்த் கிஷோர் சீடர்கள்!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பிடித்தது. அப்போது அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது ஐபேக் நிறுவனமும், பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்த வியூகமும் தான். அதன்பிறகு இவரது புகழ் தேசிய அளவில் பரவியது. இவரை சுருக்கமாக பி.கே அழைக்க தொடங்கினர். தேர்தல் வியூக நிறுவனங்கள் தேர்தல் வந்துவிட்டாலே கள நிலவரம், மக்களின் மனநிலை, சர்வேக்கள் நடத்துவது, பிரச்சார வியூகம், சமூக வலைதளங்கள் என பல்வேறு விஷயங்களை கையாள … Read more

டெல்லி அமைச்சரவையில் மணீஷ் சிசோடியா, சத்தியேந்தர் ஜெயின் ராஜினாமா செய்த நிலையில், சவுரவ் பரத்வாஜ், அதிசி பதவியேற்பு

டெல்லி: மணீஷ் சிசோடியா மற்றும் சத்தியேந்தர் ஜெயின் ராஜினாமா செய்த நிலையில், டெல்லி அமைச்சரவையில் சவுரவ் பரத்வாஜ் மற்றும் அதிசி ஆகியோர் இன்று ஆளுநர் முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அதிசி கல்வித்துறை அமைச்சராகவும், சவுரவ் பரத்வாஜ் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.

‘பயமா..எனக்கா..?’ – பிரதமர் மோடிக்கு சவால் விட்ட தெலங்கானா முதல்வர் மகள்.!

விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ். பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாம் கூட்டணியை உருவாக்க அவர் முயன்றுவருகிறார். இந்தநிலையில் டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்திவருகிறது. இந்த ஊழலில் தெலங்கான முதல்வரின் மகள் கவிதாவிற்கும் … Read more

அகமதாபாத்தில் இந்திய-ஆஸி. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஆஸி. பிரதமருடன் போட்டியை ரசித்த மோடி

அகமதாபாத்: அகமதாபாத்தில் இன்று தொடங்கிய இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி பார்வையிட்டார். ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவருடன் அமைச்சர்கள் உள்பட 27 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவும் வந்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். முதலில், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவரை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வரவேற்றார். அதைத் தொடர்ந்து ஆண்டனி  … Read more

பெங்களூரு சர்ஜாபூர் சாலையில், உள்ள மெத்தை குடோனில் திடீர் தீ விபத்து; 3 கடைகள் எரிந்து நாசம்!

பெங்களூரு: பெங்களூரு சர்ஜாபூர் சாலையில், உள்ள மெத்தை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் 3 கடைகள் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

அமெரிக்க உளவுத்துறை தகவல்; இந்திய எல்லையில் பதற்றம் அதிகரிப்பு… சண்டைக்கு ரெடி!

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான எல்லை பிரச்சினை என்பது சுதந்திர இந்தியாவில் இருந்தே தொடர் கதையாகி வருகிறது. பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவல், ராணுவத்தினர் அத்துமீறல், திடீர் தாக்குதல், அப்பாவிகள் பலி, ரகசிய ஆபரேஷன், போர் என பரபரப்பிற்கு பஞ்சமில்லை. சமீப காலமாக இந்தியா – சீனா எல்லை பிரச்சினை பெரும் தலைவலியாக மாறியது. இந்திய அரசு பேச்சுவார்த்தை இதுதொடர்பாக பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு நிலைமையை சுமூகமாக மாற்ற முயற்சிகள் நடைபெற்றன. மறுபுறம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும் … Read more

இந்தியாவில் பட்டம் பெற்றிருந்தால் ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்படும்; ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் அறிவிப்பு.!

அகமதாபாத்: இந்தியாவில் பட்டம் பெற்றிருந்தால் ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்படும் என்று அந்தோனி அல்பனிஸ் தெரிவித்துள்ளார். இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ், இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய கல்வி உறவு தொடர்பான திட்டங்களை உறுதி செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா-இந்தியா கல்வித் தகுதி அங்கீகார முறையை’ இறுதி செய்துள்ளதாக அறிவித்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய-இந்தியா கல்வி உறவு திட்டத்தில் உரையாற்றிய போது அல்பனிஸ் இந்த திட்டத்தை உறுதி செய்ததாக கூறினார். அவர் உரையாற்றியதாவது, இரு தரப்பு கல்வி உறவுகளில் … Read more

உடனே விண்ணப்பியுங்க..!! EPFO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!!

மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள அமலாக்க அதிகாரி (Enforcement Officer/Accounts Officer), உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (Assistant Provident Fund Commissioner) ஆகிய பதவிகளுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மார்ச் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. காலிப்பணியிடங்கள்: மொத்தம் 577 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு … Read more

மதுபானக்கொள்கை ஊழல் வழக்கு | சிறையிலிருக்கும் சிசோடியாவிடம் இன்று 2ஆம் கட்ட விசாரணை

புதுடெல்லி: மதுபானக்கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் சிறையில் வைத்து இன்று இரண்டாவது கட்ட விசாரணை நடத்துவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் மதுபான கொள்கை அமலாக்கத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ கடந்த பிப். 26ம் தேதி தெரிவித்திருந்தது. அவரிடம் நடந்த 8 மணிநேர விசாரணைக்கு பின் சிபிஐ, சிசோடியாவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. … Read more

இன்ஸ்டாகிராமில் Followers-களை அதிகரிப்பதாக கூறி, மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ரூ.55,000 மோசடி!

மும்பை: இன்ஸ்டாகிராமில் Followers-களை அதிகரிப்பதாக கூறி, மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ரூ.55,000 மோசடி செய்துள்ளனர். வங்கி கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் இழந்ததால், சிறுமியின் தந்தை போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். UPI ID-ஐ வைத்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.