வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பிய பாஜ நிர்வாகி தமிழக போலீசில் 10 நாளில் ஆஜராக உத்தரவு: டெல்லி ஐகோர்ட் அதிரடி
புதுடெல்லி: வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பிய பாஜ நிர்வாகி பிரசாந்த் குமார் உம்ராவ் பத்து நாட்களில் தமிழகத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. வதந்தி பரப்பியதாக உத்தரப்பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் … Read more