நாடாளுமன்ற துளிகள்….

* 2.78லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு ஒன்றிய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதில்: நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களில் பதிவு அதிகரித்துள்ளது. 2021ம்ஆண்டு 3,29,808 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. 2022ம் ஆண்டில் இது 10,20,679 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 2.78லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. * சிபிஐ அனுமதியை திரும்ப பெற்ற 9 மாநிலங்கள் மாநிலங்களவையில் ஒன்றிய … Read more

மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல் பேச்சு, அதானி விவகாரத்தால் மக்களவை மாலை 6 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

மக்களவையில் விவாதமின்றி பட்ஜெட் ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல்! என்ன காரணம்? சபாநாயகர் விளக்கம்

இந்த வருட பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கான ஒப்புதலை மக்களவை அளித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மக்களவை கூடி குரல் வாக்கெடுப்பு மூலம் பட்ஜெட் ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளித்தது. நேரமின்மை காரணமாக விவாதம் இன்றி ஒப்புதல் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என சபாநாயகர் ஓம் பிர்லா குறிப்பிட்டார். பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதம் தொடங்கிய நாளிலிருந்து தினமும் பாஜக – எதிர்க்கட்சிகள் மோதல் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் … Read more

தமிழ்நாட்டில் வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும்

டெல்லி: தமிழ்நாட்டில் வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில், ‘உடான்’ திட்டத்தின் கீழ் விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என நாடாளுமன்றத்தில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து 16.80 கோடி பேரின் தகவல்கள் விற்பனை! எப்படி திருடப்பட்டது? பகீர் பின்னணி

இந்தியாவிலிருந்து 16.80 கோடி பேரின் ரகசிய தகவல்களைத் திருடி விற்பனை செய்திருக்கும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று கை விரல்களுக்குள்ளேயே விஞ்ஞானம் விரிவடைந்திருந்தாலும் அதனால் ஏராளமான ஆபத்துகளும் வளர்ந்திருக்கின்றன. நாம் அடிக்கடி பயன்படுத்தும் செல்போன், கணினி, மடிக்கணினி உள்ளிட்ட சாதனங்களில்தான் நம்முடைய பல்வேறு ரகசியமான தகவல்களைச் சேமித்து வைக்கிறோம். குறிப்பாக வங்கி சம்பந்தப்பட்ட கடவுச்சொல்களையும் சேமித்து வைக்கிறோம். ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து நம்மில் பலர் சிந்திப்பதில்லை. … Read more

நீதிமன்ற தண்டனையால் எம்.பி பதவியை இழப்பாரா ராகுல் காந்தி? – ஒரு சட்டபூர்வ பார்வை

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழக்கலாம் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் … Read more

அரசு நிறுவனங்கள், பொதுமக்கள் என சுமார் 17 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடிய கும்பல் கைது..!

தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில், பாதுகாப்பு துறையைச் சேர்ந்த  இரண்டரை லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் உட்பட சுமார் 17 கோடி பேரின் தகவல்களை திருடி விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் விசாரணையில், அரசு மற்றும் முக்கிய நிறுவனங்கள், தனிப்பட்ட நபர் மற்றும் இரகசிய தகவல்களை ஜஸ்ட் டயல் உள்ளிட்ட பல தளங்கள் மூலம் இக்கும்பல் வாங்கி, விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. ஜஸ்ட் டயலில் தனிப்பட்ட தகவல்களை கேட்போரின் விவரங்களை பட்டியலிட்டு, தொடர்பு கொண்டு … Read more

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ராஜஸ்தான் அரசின் சுகாதார உரிமை மசோதா: அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் நாட்டிலேயே முதல் முறையாக சுகாதார உரிமை மசோதாவை நிறைவேற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது ராஜஸ்தான். நாட்டின் சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் ஆம்புலன்ஸ் கூட பிடிக்க கூட வசதி இன்றி பல கிலோ மீட்டர் தூரம் கால்நடையாக தோல் மீது சுமந்து செல்லப்படும் உடல்கள். இதுபோன்ற நிகழ்வு இனி எங்கள் மாநிலங்களில் தொடரவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ள மசோதா தான் தற்போது … Read more

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஜாமீனும்: காங்கிரஸின் நகர்வு முதல் எதிர்வினைகள் வரை

புதுடெல்லி: கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 30 நாளைக்குள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் எனக் கூறி தீர்ப்பை நிறுத்தி வைத்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழங்கியது. வழக்கு பின்னணி: காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கும், அக்கட்சிக்கும் … Read more

2026க்குப் பிறகு தொகுதிகள் அடுத்த மறு வரையறை செய்யப்படலாம்: ஒன்றிய அரசு விளக்கம்

டெல்லி: 2026க்குப் பிறகு தொகுதிகள் அடுத்த மறு வரையறை செய்யப்படலாம் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்துள்ளார். தொகுதிகளின் எல்லைகளை மறு வடிவமைப்பு செய்வதில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.