லக்னோ நகரிலிருந்து ஐ5-319 என்ற ஏர் ஆசியா விமானம் பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கியது

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரிலிருந்து ஐ5-319 என்ற ஏர் ஆசியா விமானம், கொல்கத்தா நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் மற்றும் விமானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என்பது பற்றி பரிசோதனை நடந்து வருகிறது. பயணிகளை வேறு விமானத்தில் அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு ராகுல் காந்தி அஞ்சலி

ஜம்மு: கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்களை குறிவைத்து கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். பாரத ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் நேற்று புல்வாமா பகுதியை சென்றடைந்தார். அப்போது அவர், சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த இடத்தில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அண்மையில் … Read more

முப்படை பாசறை திரும்பும் நிகழ்வில் இந்திய இசை!

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படும். குடியரசு தின விழாவையொட்டி, அன்றைய தினம் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். அந்த வகையில், நாட்டின் 74ஆவது குடியரசு தின விழா கடந்த 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி, முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்திய ராணுவத்தில் … Read more

'உலகையே வியக்க வைக்கும் தமிழ்நாட்டின் சிறிய கிராமம்' – பிரதமர் பெருமிதம்

PM Modi Mann Ki Baat: 2023ஆம் ஆண்டில் தனது முதல் மன் கி பாத்தின் உரையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன. 29) நிகழ்த்தினர் நாட்டு மக்களுக்கு முன் உரையாற்றிய மோடி,  இந்தாண்டு பத்ம விருது பெற்றவர்கள் குறித்து அனைவரும் படிக்க வேண்டும் என நாட்டு மக்களை வலியுறுத்தி பேசினார்.  மேலும், மின்னணு கழிவு மேலாண்மை உள்பட பல்வேறு துறைகள் சார்ந்து இன்றைய மன் கி பாத்தின் 97ஆவது எபிசோடில் பிரதமர் மோடி உரையாற்றினார். … Read more

ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் தோட்டம் இனி அமிர்த தோட்டம்: பெயரை மாற்றியது ஒன்றிய அரசு

புதுடெல்லி: ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் தோட்டம் இனிமேல் அமிர்த தோட்டமாக அழைக்கப்படும். முகல் தோட்டத்தின் பெயரை ஒன்றிய அரசு மாற்றி அறிவித்து உள்ளது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் தோட்டம் முகல் தோட்டம் அல்லது முகலாய தோட்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. அங்கு 3 தோட்டங்கள் உள்ளன. ஸ்ரீநகரில் உள்ள முகலாய தோட்டத்தை மையமாக கொண்டு அமைக்கப்பட்டதால் மக்கள் ஜனாதிபதி மாளிகையில் உள்ள தோட்டத்தையும் முகல் தோட்டம் அல்லது … Read more

ஒடிசா அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு – ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

புவனேஸ்வர்: ஒடிசா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது, பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சரான நபா தாஸ், ஜார்சுகுடா மாவட்டம், பிரஜாராஜ் நகர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அமைச்சர் நபா கிஷோர் தாஸ் காரைவிட்டு இறங்கியபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வளர் கோபால் தாஸ் என்பவர், … Read more

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பூமி இந்தியா: மத்திய அமைச்சர் பெருமிதம்!

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஜி20 புத்தொழில் 20 (ஸ்டார்ட்-அப் 20) குழுவின் தொடக்கக் கூட்டத்தில் மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்து கொண்டார். கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ், ஜி20 மாநாட்டின் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரி (ஷெர்பா) அமிதாப் காந்த், நித்தி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி பரமேஸ்வரன் ஐயர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். … Read more

Odisha Minister Naba Das: அமைச்சர் மீது காவலர் துப்பாக்கிச்சூடு… நெஞ்சில் இரண்டு குண்டுகள் – ஒடிசாவில் பயங்கரம்

Odisha Health Minister Naba Das: ஒடிசாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது இன்று (ஜன. 29) துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்துள்ளது. ஜார்சுகுடா மாவட்டத்தில் ஒரு கூட்டத்திற்காக சென்றுகொண்டிருந்தபோது, பிரஜ்ராஜ்நகர் பகுதியில், உதவி காவல் துணை ஆய்வாளர் (ASI) கோபால் தாஸ் என்பவாரல் அமைச்சர் சுடப்பட்டார்.  இந்த தாக்குதல் சம்பவம் மதியம் 1 மணியளவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் காரில் இருந்த இறங்கிய நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், … Read more

‘பத்ம விருதுகள் பெற்றவர்களின் வாழ்க்கை, வரலாற்றை நாட்டு மக்கள் படிக்க வேண்டும்’ – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் வலியுறுத்தல்

பத்ம விருதுகள் பெற்றவர்களின் வாழ்க்கை மற்றும் வரலாற்றை படிக்குமாறு நாட்டு மக்களை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 97-வது மற்றும் இந்த ஆண்டின் முதல் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, கணிசமான எண்ணிக்கையில் பத்ம விருதுகள் பெற்றவர்கள் பழங்குடி சமூகங்கள் மற்றும் அந்த சமூகத்துடன் தொடர்புடையவர்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார். பழங்குடி மக்களில் ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், விவசாயிகள், கைவினை கலைஞர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் வரலாற்றை … Read more

பிரஜாராஜ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது அமைச்சர் நபா தாஸ் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு

ஒடிசா: பிரஜாராஜ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது அமைச்சர் நபா தாஸ் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மார்பில் குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்த அமைச்சர் ஜர்சுகுடா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் புவனேஷ்வருக்கு கொண்டுசெல்லப்பட்டார்.