அட இப்படி ஒரு திருடனா..! விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெக்லசை லாவகமாகக் கவ்விச் சென்ற எலி!

கேரளாவில், நள்ளிரவில் நகைக்கடையில் புகுந்த எலி ஒன்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெக்லசை லாவகமாகக் கவ்விச் சென்றது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காசர்கோடு பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்க நெக்லஸ் திடீரென மாயமானது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடையின் சீலிங் வழியாக உள்ளே புகுந்த எலி, அக்கம் பக்கம் நோட்டமிட்டு அங்கிருந்த நெக்லஸை லாவகமாக வாயில் கவ்விச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. Source … Read more

குடியரசு தலைவர் மாளிகையின் தோட்டங்கள் இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி

டெல்லி: குடியரசு தலைவர் மாளிகையின் தோட்டங்கள் இன்று முதல் பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது. மூலிகை, போன்சாய் உள்ளிட்ட தோட்டங்கள் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும் என அறிவித்துள்ளனர். இன்று முதல் மார்ச் 26 வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சி கூட்டணிக்கு காங்கிரஸே ஆணிவேர்: ஜெய்ராம் ரமேஷ் கருத்து

அவந்திபோரா: ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங் கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடு முழுவதும் பரவியுள்ள ஒரே தேசிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எனவே 2024 தேர் தலுக்காக அமைக்கப்படும் எந்தஎதிர்க்கட்சி கூட்டணிக்கும் காங்கிரஸ் மட்டுமே ஆணிவேராக இருக்க முடியும். நாட்டின் ஒவ்வொரு கிராமம், தொகுதி, மற்றும் நகரங்களிலும் காங்கிரஸ் தொண்டர்களை காணலாம். இந்திய ஒற்றுமை யாத்திரை, கட்சிக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. இவ்வாறு … Read more

இளநிலையில் இருந்து முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகைபெற அனுமதி பெற தேவையில்லை: யுஜிசி அறிவிப்பு

டெல்லி: இளநிலையில் இருந்து முதுநிலைஆராய்ச்சியாளர் உதவித் தொகைபெற யுஜிசி அனுமதி பெற தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, யு.ஜி.சி செயலர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:அறிவியல், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்வோருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவோர், முதுநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான நிபந்தனைகளில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை பெறுவோர், … Read more

இந்தியாவுக்கு 12 சிவிங்கி புலிகளை அனுப்புகிறது ஆப்பிரிக்கா

புதுடெல்லி: சிறுத்தை இனத்தில் லெபர்ட், ஜாகுவார், பூமா, சீட்டா (சிவிங்கி புலி) என பல்வேறு வகைகள் உள்ளன. இந்தியாவின் சத்தீஸ்கர் வனப்பகுதியில் கடந்த 1950-ம் ஆண்டில் சிவிங்கிபுலி தென்பட்டது. அதன்பிறகு கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவின் எந்த பகுதியிலும் சிவிங்கிபுலி கண்டுபிடிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் இருந்து 8 சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 5 பெண், 3 ஆண் சிவிங்கி புலிகள் அடங்கும். கடந்த செப்டம்பர் … Read more

மோடியை நம்புங்க… பாஜகவிற்கு மெஜாரிட்டி வாக்குகள்- பெலகாவியில் அமித் ஷா வியூகம்!

வரும் ஏப்ரல் – மே மாதத்தில் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ் , மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரிய கட்சிகள் களமிறங்குகின்றன. தற்போது வரை மும்முனை போட்டி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக தெரிகிறது. தேர்தலுக்கான அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு வியூகங்கள் வகுத்து களப் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. பெலகாவி வாக்கு வங்கி கர்நாடகாவில் அதிக சட்டமன்ற தொகுதிகள் (27) பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக … Read more

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டம் நடைபெறுகிறது. மோடி தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்யும் இறுதியாண்டு பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய மக்கள் நலத்திட்டங்கள், குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் 30ம் தேதி நண்பகல் 12 மணியளவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசுஅழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டத் தொடரை … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 99 பேருக்கு கொரோனா உறுதி: உயிரிழப்பு இல்லை.! ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 ஆக பதிவாகியுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,842 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,740 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,50,057 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220,40,42,362 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே … Read more

கேரளா: நகை கடையில் புகுந்து நெக்லஸ்-ஐ தூக்கி செல்லும் எலி – வைரலாகும் சிசிடிவி காட்சி

கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள நகை கடையில் புகுந்த எலி அங்கிருந்த நெக்லஸ்-ஐ லாவகமாக தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைகடை ஒன்றில் விற்பனைக்காக காட்சி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நெக்லெஸ் ஒன்று காணாமல் போயிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் கடையின் சீலிங் வழியாக உள்ளே புகுந்த எலி ஒன்று அந்த நெக்லெஸ்-ஐ லாவகமாக … Read more

ஜார்க்கண்ட் மருத்துவமனையில் தீ விபத்து – டாக்டர் தம்பதி உட்பட 6 பேர் உயிரிழப்பு

தன்பாத்: ஜார்க்கண்ட் மாநில மருத்துவ மனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவ தம்பதி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தின் புரானா பஜார் பகுதியில் உள்ளது ஹஸ்ரா மருத்துவமனை. இதன் 2-வது மாடியில் மின் கசிவு காரணமாக நேற்று முன்தினம் இரவு தீப்பற்றியது. தீ முதல் மாடிக்கும் பரவியது. அங்கு தீயை அணைக்கும் வசதிஇல்லாததால், முதல் தளம் முழுவதும் புகை சூழ்ந்தது. இதனால், அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களால், தப்பி வெளியேற முடியவில்லை. புகை … Read more