தொடரும் சோகம்..!! டெல்லியில் உலுக்கிய மற்றொரு விபத்து… ஒருவர் கவலைக்கிடம்..!!

டெல்லியை சேர்ந்தவர் அஞ்சலி. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு வருகிறார். இதற்கிடையே புத்தாண்டையொட்டி அஞ்சலி பணிபுரியும் நிறுவனம் சார்பில் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கான பணியை முடித்துள்ளார். புத்தாண்டுக்கு முன்தின நாளான டிசம்பர் 31-ம் தேதி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துள்ளார். பின்னர், ஜனவரி 1 புத்தாண்டு பிறந்த நிகழ்ச்சிகளை நிறைவு செய்துள்ளார். பின்னர், ஓட்டலில் இருந்து புத்தாண்டு அதிகாலை 1.45 மணியளவில் ஸ்கூட்டரில் அஞ்சலி புறப்பட்டுள்ளார். டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் வந்தபோது எதிரே வந்த … Read more

மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி!….

நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி கலந்துரையாடுகிறார். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்கும் வகையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.   அந்தவகையில், நடப்பு கல்வியாண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். வரும் ஜனவரி 27 ஆம் தேதி காணொலி மூலமாக இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.   … Read more

“பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்தது ஏன்?” – நிதிஷ் குமார் விளக்கம்

பாட்னா: பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியே வந்தது ஏன் என்பது குறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். பிஹாரில் மாநிலம் தழுவிய யாத்திரையை நிதிஷ் குமார் வரும் 5-ம் தேதி தொடங்க இருக்கிறார். மகாத்மா காந்தியால் தோற்றுவிக்கப்பட்ட பிட்டிஹார்வா காந்தி ஆசிரமத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்க இருக்கிறது. இதை முன்னிட்டு, பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், ”இந்த யாத்திரை மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மக்களை … Read more

வெளியில் இருந்து உணவுப்பொருட்கள் கொண்டு வருவதை தடைசெய்ய திரையரங்கிற்கு அதிகாரம் உள்ளது-உச்சநீதிமன்றம்

வெளியில் இருந்து உணவுப்பொருட்கள், குளிர்பானங்கள் கொண்டு வருவதை தடைசெய்ய, திரையரங்குகளுக்கு உரிமை உள்ளதாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திரையரங்குகளில் வெளி உணவுகள் கொண்டு செல்வதைத் தடுக்கக்கூடாது என்ற ஜம்மு – காஷ்மீர் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, இந்திய திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான விசாரணையில், திரையரங்குகள், அதன் உரிமையாளரின் தனிப்பட்ட சொத்து என்றும், அதில் அவர்கள் நிபந்தனைகளை விதிக்க உரிமை உள்ளதாகவும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் … Read more

சியாச்சின் பனிமலை பகுதியில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமை பெற்றார் கேப்டன் சிவ சவுகான்.!

சியாச்சின்: சியாச்சின் பனிமலையில் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற வரலாற்றை கேப்டன் சிவா சவுகான் படைத்துள்ளார். சியாச்சின் பனிமலை பூமியின் மிக உயரமான போர்க்களமாகும். அங்கு 1984ஆம் ஆண்டு முதல் இந்தியாவும் பாகிஸ்தானும் அவ்வப்போது சண்டையிட்டு வருகின்றன. இந்நிலையில் சியாச்சின் பனிமலையில் உள்ள குமார் போஸ்டில், ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் எனும் இந்திய ராணுவப் பிரிவை சேர்ந்த கேப்டன் சிவா சவுகான் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இந்த … Read more

பயங்கரவாதத்தின் மையமாக இருக்கிறது பாகிஸ்தான்: வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

வியன்னா: பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரியா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அந்த நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இது கடினமான வார்த்தையாக தெரியவில்லையா என நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு விளக்கம் அளித்த ஜெய்சங்கர், ”பயங்கரவாதத்தின் மையம் என்பது நாகரிகமான விமர்சனம்தான். இதைவிட கடினமான வார்த்தையைக் கூட பயன்படுத்தி இருக்க முடியும். எங்களுக்கு என்ன நேர்ந்துகொண்டிருக்கிறது என்பதை … Read more

என் அண்ணனை அம்பானி அதானியால் விலைக்கு வாங்க முடியாது- பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய … Read more

டெல்லியில் காரில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி: மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் காரில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பெண்ணின் மரணத்திற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வோம் எனவும் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்.. யார் இந்த சாவித்திரிபாய் பூலே? அப்படி என்ன செய்தார்?

சமூக சீர்த்திருத்தவாதியும், பெண் கல்வியை முன்னெடுத்தவருமான “சாவித்திரிபாய் பூலே”வின் பிறந்ததினம் இன்று. இவர் பெற்ற மிகப்பெரிய சிறப்பே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்பதுதான். பெரும்பாலோனோருக்கு இவரது வரலாற்று பங்களிப்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மகாராஷ்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் நைகோன் கிராமத்தில் 1831 ஆம் ஆண்டு ஜனவரி 3ல் பிறந்தவர் சாவித்திரிபாய் புலே. அந்த காலத்தில் குழந்தை திருமணம் செய்து வைக்கும் வழக்கம் நாட்டில் இயல்பாக இருந்து வந்தது. சாவித்திரிபாய் 9 வயதாக இருக்கும்போது, ஜோதிராவ் புலேவை … Read more

“இந்தியா எப்போதும் போருக்கு எதிரான நாடு. ஆனால்…” – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

சியாங்: “இந்தியா எப்போதும் போருக்கு எதிரானது என தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “போரிட வேண்டிய கட்டாயம் வந்தால், அதற்கு இந்தியா ஒருபோதும் தயங்காது” என்றும் கூறியுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவை ஒட்டிய பகுதியில் 100 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள சியோம் பாலத்தை ராஜ்நாத் சிங் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் துவக்கி வைத்தார். மேலும், எல்லை சாலை அமைப்பு (Border Roads Organisation) சார்பில் உருவாக்கப்பட்ட எல்லையோர சாலைகள் உள்ளிட்டவற்றை அவர் காணொலிக் காட்சி வாயிலாக … Read more