டெல்லியில் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அணிவகுப்பில் புதிய பல அம்சங்கள் இடம்பெற உள்ளன..!

டெல்லியில் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அணிவகுப்பில் முதன் முறையாக பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. முதல்முறையாக கடமை பாதையில் குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெற உள்ளன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தான் பதவியேற்ற பின்னர், முதன் முறையாக கடமைப் பாதையில் கொடி ஏற்றவுள்ளார். வழக்கமாக குடியரசு தின அணிவகுப்பிற்கு முன், 21 குண்டுகள் முழங்க ஆங்கிலேயர் காலத்து பழமையான துப்பாக்கிகளுடன் கூடிய பீரங்கிகள் பயன்படுத்தபடும் நிலையில், இந்தாண்டு 105 … Read more

லக்கிம்பூர் வன்முறை வழக்கு: ஒன்றிய அமைச்சர் மகனுக்கு 8 வாரம் நிபந்தனை ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஒன்றிய அரசு கடந்த 2020ம் ஆண்டு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் பகுதியில் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, விவசாயிகள் மீது காரைக் கொண்டு மோதியதில் விவசாயிகள் உட்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து விபத்து குறித்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் முதல் குற்றவாளியாக ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யபட்டார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி ஆஷிஷ் … Read more

கஷாயத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து காதலன் கொலை: குமரி இளம்பெண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

திருவனந்தபுரம்: பணக்கார வாலிபரை திருமணம் செய்வதற்காகவே நெய்யூர் கல்லூரி மாணவர் ஷாரோன் ராஜை கிரீஷ்மா தனது வீட்டுக்கு வரவழைத்து கஷாயத்தில் பூச்சி கொல்லி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்தார் என்று நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி எல்லை அருகே உள்ள பாறசாலை மூரியங்கரையை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தார். ராமவர்மன் சிறையை சேர்ந்தவர் கிரீஷ்மா. திருவிதாங்கோட்டில் உள்ள கல்லூரியில் படித்து … Read more

Padma Awards 2023: பத்ம விருதுகள் அறிவிப்பு… விருது பெற்றவர்கள் முழு பட்டியல் – இதோ!

Padma Awards 2023: மத்திய அரசால் பல்வேறு துறை வல்லுநர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை (ஜன. 26) 74ஆவது இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுக்கு பல துறைகளை சார்ந்த வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  1954ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிவிலியன் விருதுகள், பொதுவாக ஒவ்வொரு … Read more

இந்தியாவை கட்டமைக்கும் பொறுப்பு இளைஞர்களிடம் உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: இந்தியாவை கட்டமைக்கும் பொறுப்பு இளைஞர்களிடம் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் என்சிசி என்எஸ்எஸ் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்; இளைஞர்களின் நேர்மையான கருத்துகள்தான் என்னை இரவு பகலாக உழைக்க வைக்கிறது. இளைஞர்களின் வெற்றி இந்தியாவின் வெற்றியாகவே பார்க்கப்படும். உலகின் நலனுக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் சிறந்து விளையாட்டுக்கான சூழல் உள்ளது. தூய்மை இந்தியா … Read more

”இந்தியாவின் வளர்ச்சியில் மிகப்பெரிய பயனாளிகளாக நீங்கள் இருப்பீர்கள்”- மோடி பேச்சு!

இளைஞர்களிடம் ஆற்றல், உற்சாகம், ஆர்வம் மற்றும் புதுமையான மனப்பான்மை உள்ளது என்றும், வருங்கால இந்தியாவின் வளர்ச்சியில் மிகப்பெரிய பயனாளிகளாக நீங்கள் இருப்பீர்கள் என்றும் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. குடியரசு தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இன்று டெல்லியில் என்எஸ்எஸ் மற்றும் என்சிசி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய பிரதமர், “நாட்டினுடைய கனவையும், எதிர்கால லட்சியத்தையும் கைதூக்கிக் கொண்டுபோகக் கூடியவர்கள் நீங்கள் தான். இளைஞர்களான உங்களிடம் தொலைநோக்கு சக்தி உள்ளிட்ட அனைத்தும் … Read more

ஓஆர்எஸ் கரைசல் கண்டுபிடித்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸுக்கு மருத்துவத் துறையில் பத்ம விபூஷண்

புது டெல்லி: ஓஆர்எஸ் கரைசல் கண்டுபிடித்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸுக்கு மருத்துவத் துறையில் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பிறகு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு துறைகளில் தன்னலமின்றி பணியாற்றிய, பணியாற்றி வரும் நபர்களுக்கு பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஓஆர்எஸ் கரைசல் கண்டுபிடித்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் உயரிய விருதுகளில் பத்ம விருதுகள் அடங்கும். டயேரியாவுக்கு உடனடி தீர்வு தரும் … Read more

பத்ம விருதுகள் அறிவிப்பு; 106 பேர் தேர்வு.!

கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், பொறியியல், வர்த்தகம், அறிவியல், தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பல்வேறு துறைகளிலும் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்காக பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1ம் தேதி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிவடைந்து, நடப்பு … Read more

விதிமீறி வேறொரு நிறுவனத்தில் ரூ3,535 கோடி முதலீடு: ‘காஃபி டே’ நிறுவனத்திற்கு ரூ26 கோடி அபராதம்

மும்பை: விதிமுறைகளை மீறி வேறொரு நிறுவனத்தில் ரூ.3,535 கோடி முதலீடு செய்த விவகாரத்தில் ‘காஃபி டே’ எண்டர்பிரைசஸ் நிறுவனவத்திற்கு ரூ. 26 கோடி அபராதம் விதித்து சிபி உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பிரபல ‘காஃபி டே’ எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் வி.ஜி.சித்தார்த்தா கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, அவரது நிறுவனத்தின் இயக்குநர் குழு மற்றும் காபி டே நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தையும் … Read more

மோசமான வானிலை காரணமாக ராகுலின் நடைபயணம் திடீர் ரத்து

ஸ்ரீநகர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை ராம்பானில் இருந்து காஷ்மீர் நோக்கி மீண்டும் நடைபயணம் தொடங்கினார். ஆனால், மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு காரணமாக இன்றைய நடைபயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. மேலும் நாளை ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள் காலை 8 மணிக்கு மீண்டும் நடைபயணம் தொடங்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். தற்போது நடைபயண குழு … Read more