குளிர்காலத்தில் ஏழைகளுக்கு இலவச கம்பளி ஆடைகளை அளிக்கும் லக்னோ மால்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அனோகா மால் என்ற வர்த்தக வளாகத்தை டாக்டர் அகமது ராசா கான் (யுனானி மருத்துவர்) நடத்தி வருகிறார். இந்த வளாகத்திலுள்ள ஒரு கடை, ரிக்ஷா ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், குடிசை வாசிகள், அடித்தட்டு மக்கள் போன்றவர்களுக்கு இலவச ஆடைகளை வழங்கி வருகிறது. குளிர்காலத்தில் உடலுக்கு ஏற்ற கம்பளி ஆடைகள், போர்வைகளை இலவசமாக வழங்கி வருகிறது இந்த அனோகா மால். கடந்த ஆண்டு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேருக்கு இலவச ஆடைகள் … Read more

பிபிசி ஆவணப்படம் நீக்கம்: ஒன்றிய அரசின் சட்டவிரோத நடவடிக்கை!

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம், கடந்த 17ஆம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. ‘இந்தியா- மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பிலான அந்த ஆவணpபடத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணப்படத்தின் 2ஆம் பாகம் வருகிற 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், யூ-டியூபில் வெளியான இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிபிசி … Read more

Budget 2023: வரி செலுத்துவோருக்கு பெரிய நிவாரணம், வருகிறது வரிமுறையில் மாற்றம்

பட்ஜெட் 2023: இன்னும் சில நாட்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதில் பல துறையினருக்கும், சாமானியர்களுக்கும், வணிகர்களுக்கும், மாத சம்பளதாரர்களுக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. மகக்ளவைத் தேர்தலுக்கு முன்னர் மோடி அரசாங்கத்தின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் இதில் அரசாங்கம் பல நல்ல அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படாமல் இருக்கும் வரி அடுக்குகள் மற்றும் வடி வரம்பிலும் மாற்றம் … Read more

இந்திய ஒற்றுமை பயணத்தை தொடர்ந்து காங்கிரசின் அடுத்த வியூகம்: 56 தனித் தொகுதிகளை குறிவைத்து புதிய செயல்திட்டம்..!!

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் காங்கிரஸ் கட்சி, நாடு முழுவதும் 56 தனித் தொகுதிகளை குறிவைத்து செயல் திட்டங்களை வகுத்துள்ளது. அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணம், காங்கிரஸ் தொண்டர்களுக்கு புத்துயிர் ஊட்டியுள்ளது. குமரி முதல் காஷ்மீர் வரை பெரும் வரவேற்பை பெற்ற இப்பயணத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள 56 எஸ்.சி., எஸ்.டி. தொகுதிகளை குறிவைத்து காங்கிரஸ் செயல் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. தனி … Read more

வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் பெண் உயிரிழப்பு!!

அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திர சைனி என்பவரின் மனைவியான ராதா தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றார். அறுவை சிகிச்சை செய்தால் குணமாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறினர். இதைடுத்து கடந்த நவம்பர் மாதம் ராதாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அறுவை … Read more

மத்திய அரசில் 11,000 காலியிடங்கள்.. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு- 2022 தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection commission) வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 11,409 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். SSC Exam MTS Educational Qualification: விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாரியத்தில் இருந்து 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க … Read more

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து: பாரத் பயோடெக் நிறுவனம் 26-ம் தேதி அறிமுகம்

போபால்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற பெயரில் கரோனா தடுப்பூசியை தயாரித்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி கரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்டது. தற்போது பூஸ்டர் தடுப்பூசியாகவும் போடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனம், வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இதற்கு இன்கோவாக் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அனைத்து கட்ட பரிசோதனைகளும் … Read more

Netaji Jayanti: மரணத்தை வென்ற மாவீரர் ; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!

Netaji Jayanti: “வீரம் விளைந்த தமிழ் மண்ணை நேசிக்கிறேன், சுவாசிக்கிறேன். இருகரம் கூப்பி இம்மண்ணை முத்தமிட்டு தலை வணங்குகிறேன். ஏனெனில், தமிழர்களின் வீரத்தைக் கண்டு மெய்சிலிர்க்கிறேன் ; வியப்படைகிறேன்.  இனியொரு பிறவி உண்டெனில், தமிழனாகப் பிறக்கவே விரும்புகிறேன்” என 1939ஆம் ஆண்டில் மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கம் முன்னின்று நடத்திய பொதுக் கூட்டத்தில் வீரமுழக்கமிட்டார்.  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவ்வீரமுழக்கத்தில் ஆங்கிலேயர்களை இறுதி மூச்சுவரை எதிர்த்துநின்ற வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன் போன்ற வீரமிக்க மாவீரர்களை எடுத்துரைக்க அவர் தவறவில்லை. … Read more

பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினாலே உலகின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்: குஜராத் நீதிமன்றம் கருத்து

காந்திநகர்: பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினாலே உலகின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று குஜராத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து 16 பசு மாடுகளை சட்ட விரோதமாக கடத்தி வந்ததாக கூறி முகமது அமீன் என்பவரை குஜராத் போலீசார் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்தனர். இந்த வழக்கில் டாப்பி மாவட்ட நீதிமன்ற நீதிபதி வினோத் சந்திரா தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி தனது உத்தரவின் … Read more

இந்த முறை தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ள ஆளுநர்!!

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்று கூறியது பெரும் சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து பொங்கல் விழாவுக்காக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையிலும் தமிழகம் என்று இருந்தது. அதே போல் இலச்சினை மத்திய அரசுடையது இருந்தது. இந்த இரண்டு விவகாரமும் பேசு பொருளாக மாறியது. ஆளுநர் மாளிகையின் அந்த அழைப்பிதழுக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்தன. இதனையடுத்து திமுக எம்பி டி.ஆர்.பாலு, அமைச்சர் ரகுபதி … Read more