பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி – விரைவில் குணமடைய ராகுல்காந்தி வாழ்த்து
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று இரவு உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஹீராபென் மோடி கடந்த ஜூன் மாதம் 99 வயதை அடைந்தார். ஆனால் தற்போது உடல்நிலை சரியில்லாத நிலையில் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். UN மேத்தா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி & ஆராய்ச்சி நிலையம், அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் மோடியின் தாயாரை பார்க்க, குஜராத் பாஜக அமைச்சர் தர்ஷனாபென் வகேலா மற்றும் கௌசிக் ஜெயின் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். பிரதமர் … Read more