கணவரை கால்வாயில் மூழ்கச் செய்து கொன்ற மனைவி!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி பகுதியில் வெங்கையா (40) அவரது மனைவி முகுந்தா (34) ஆகியோர் வசிந்து வந்தனர். அவர்களது பக்கத்து வீட்டில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த உதய்சாய் (35) என்பவர் மனைவி உஷாவுடன் (30) குடிவந்தார். வெங்கையா வேலை செய்த பட்டறை தொழிற்சாலையில் உதய்சாயும் வேலை செய்ததால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். அதே போல் இருவரின் குடும்பத்தாரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில் உதய்சாய்க்கும் வெங்கையாவின் மனைவி முகுந்தாவுக்கும் காதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் முகுந்தாவின் கணவர் … Read more

சாதாரண ரயிலுக்கு பெயிண்ட் அடித்து வந்தே பாரத் ரயில்?

சாதாரண ரயிலுக்கு பெயிண்ட் அடித்து வந்தே பாரத் என பெயர் வைத்துள்ளதாக மேற்கு வங்க அமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து புதிய ஜல்பைகுரி வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை கடந்த மாதம் 30ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் மீது மர்ம நபர்கள் சிலர் கல் எறிந்து தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் திருணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் … Read more

பிரதமர் மோடியின் தாயார் அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டது.!

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி, உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் 28ம் தேதி, அகமதாபாத் யு.என்.மேத்தா இதய நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் பிரதமர் மோடி அகமதாபாத்துக்கு விரைந்தார். விமான நிலையத்தில் இருந்து, நேராக தனது தாயார் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு காரில் வந்தார். அங்கு தனது தாயாரை சந்தித்து, பிரதமர் மோடி நலம் விசாரித்தார். பிறகு, அங்கிருந்த மருத்துவர்களிடம் தாய் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் … Read more

கடந்த ஆண்டு கார் விற்பனையில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது இடம்: 2.6கோடி கார்களை விற்று சீனா முதலிடம்

டெல்லி: 2022 ஆண்டில் ஐப்பானைவிட கூடுதலாக 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்து இந்தியா 3-வது இடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் நடைபெறும் கார்கள் விற்பனை நிலவரம் குறித்த அறிக்கையை நிக்கெய் ஏசியா என்ற நிறுவனம் வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி கார்கள் விற்பனையில் சீனா முதல் இடத்தில் உள்ளது. 2021-ம் ஆண்டு நிலவரத்தின்படி, சீனாவில் 2.6 கோடி கார்கள் விற்பனை ஆகியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. அதே சமயம் அமெரிக்கா 1.5 கோடி கார்களை விற்பனை செய்து … Read more

சீனாவிலிருந்து வெளியேறும் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும்; தேவேந்திர பட்னாவிஸ்.!

அவுரங்காபாத்தில் நடந்த அட்வான்டேஜ் மஹாராஷ்டிரா எக்ஸ்போவின் விழாக் கூட்டத்தில் உரையாற்றிய மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “உலகின் தொழிற்சாலையாக இருந்த சீனாவில் இருந்து தொழில்கள் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. உலகளவில் சுமார் 40 சதவீத உற்பத்திகள் அங்கு நடைபெறுகிறது. உலகளாவிய முதலீட்டாளர்கள் இப்போது சீனாவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். இந்த வெளியேற்றத்தை ஜீரணிக்கக்கூடிய ஒரே நாடு இந்தியா மட்டுமே. முதலீட்டாளர்கள் தங்களுடைய அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளதால், நாம் அவர்களை … Read more

புதிய தீவிரவாத அமைப்பை உருவாக்க முயற்சி; மாஜி எம்எல்ஏ உட்பட 3 பேர் கைது: ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

கவுகாத்தி: அசாம் மாநிலம் பக்சா பகுதியில் வசிக்கும் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஹிதேஷ் பாசுமதாரி மற்றும் அவரது ஆதரவாளர்கள், தங்களது வீடுகளில் வெடிபொருட்கள், ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து கோக்ராஜார் கூடுதல் போலீஸ் ஏஎஸ்பி நவநீதா சர்மா கூறுகையில், ‘முன்னாள் எம்எல்ஏவின் வீட்டில் இருந்து நவீன ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டன. அதையடுத்து நேற்றிரவு ஹிதேஷ் பாசுமதாரியும், வெவ்வேறு பகுதிகளில் தலைமறைவாக இருந்த போடோலாந்து சுரக்ஷா மஞ்சின் நிர்வாகத் … Read more

கர்ப்பத்தை தடுக்கும் வழி பெண்களுக்கு தெரியணும்.. முதல்வர் பேச்சு..!

பெண்களுக்கு கல்வியறிவு கிடைக்கச் செய்ய வேண்டும். அல்லது, கர்ப்பம் அடைவதை எப்படி தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களிடம் ஏற்பட வேண்டும் என, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வைஷாலி மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர், “மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியவில்லை. பெண்களுக்கு கல்வியறிவு கிடைக்கும் போதுதான் மாநிலத்தில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால் மக்கள் பெருக்கம் நீடிக்கும். எனவே, பெண்களுக்கு கல்வியறிவு … Read more

40% கமிஷன் அடிப்பது மட்டுமே நோக்கம்; முதல்வரை சாடிய சித்தராமையா.!

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் மீண்டும் வருவதைக் கருத்தில் கொண்டு, கர்நாடகாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ், பி.எஸ்.பொம்மை தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக மீண்டும் ஆக்ரோஷமான தாக்குதலைத் தொடுத்துள்ளது. இம்முறை குடியரசு தினத்தன்று நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொள்ள மாநிலத்தின் கலச்சார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய தலைநகரில் உள்ள கார்த்வ்யா பாதையில் ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தை காட்சிப்படுத்தும் வகையில் ஊர்திகள் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இதில் கர்நாடகா குடியரசு தின அணிவகுப்பில் … Read more

ரூ.1,000 கோடி மோசடி புகாரில் சீல் வைத்த கடையில் பொருட்கள் திருட்டு: 3 குடோன்களில் பதுக்கியவர்களுக்கு வலை

வந்தவாசி: வந்தவாசியில் பொங்கல், தீபாவளி சீட்டு நடத்தி சுமார் ரூ.1000 கோடி மோசடி செய்ததாக வந்த புகாரில் ‘சீல்’ வைத்த கடையில் இருந்த பொருட்களை திருடி 3 குடோன்களில் பதுக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் விஆர்எஸ் சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு நடத்தப்பட்டு வருகிறது. வந்தவாசியில் இந்த சூப்பர் மார்க்கெட்டின் கிளை இயங்கி வந்தது. தீபாவளி, பொங்கல் பண்டிகைக்காக ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் முதல் … Read more

விஷம் கலந்திருப்பார்கள் என்று டீ குடிக்க மறுத்த முன்னாள் முதலமைச்சர்!!

டிஜிபி அலுவலகத்திற்கு போராட்டத்திற்கு சென்ற உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், அவர்கள் கொடுத்த தேநீரை விஷம் கலந்திருக்கும் எனக்கூறி குடிக்க மறுத்து விட்டார். சமாஜ்வாடி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் உள்ள நிலையில், கட்சியின் ட்விட்டர் பொறுப்பை மணீஷ் ஜகன் அகர்வால் என்பவர் கவனித்து வந்துள்ளார். சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்ட குற்றச்சாட்டில் ஜகனை போலீசார் கைது செய்தனர். அவரை விடுவிக்கக்கோரி டி.ஜி.பி. தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அகிலேஷ் யாதவ் சென்றார். அவருடன் கட்சி தொண்டர்களும் … Read more