மும்பை உள்ளாட்சி தேர்தல்; உத்தவ் தாக்கரேவுடன் இணைந்த அம்பேத்கர் பேரன்.!

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடியுடன் (VBA) கூட்டணியை இன்று அறிவித்தார். வரவிருக்கும் மும்பை உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் பொருட்டு இந்த கூட்டணி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரேயின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் பெரிய தேர்தல் இதுவாகும். ‘‘இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பீம் ராவ் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கருடன், இரண்டு மாதங்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இன்று ஜனவரி 23, பாலாசாகேப் தாக்கரேவின் … Read more

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த தினத்தையொட்டி, 21 தீவுகளுக்கும் பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் பெயர்களை சூட்டினார் பிரதமர்

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை பராக்ரம திவாஸ் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டாடி வரும் நிலையில், அந்தமான் நிகோபார் தீவில் உள்ள 21 பெரிய தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் மோடி சூட்டினார். காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, அந்தமானில் தான் இந்தியாவின் முதல் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதோடு, சுதந்திர இந்தியாவின் முதல் அரசும் இங்கு தான் ஏற்படுத்தப்பட்டது என்றார். வீரசாவர்கர் … Read more

மகாராஷ்டிரா அரசுப் பள்ளியில் ஒரு மாணவருக்காக பாடம் எடுக்கும் ஆசிரியர்

புனே: மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டம் கணேஷ்பூர் கிராமத்தில் 150 பேர் வசித்து வரும் நிலையில், அந்த கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் கார்த்திக் ஷெகோக்கர் என்ற 3ம் வகுப்பு மாணவர் ஒருவர் மட்டுமே படித்து வருகிறார். அவருக்கு பாடம் நடத்துவதற்காக கிஷோர் மங்கார் என்ற ஆசிரியர் தினமும் 12 கி.மீ. பயணம் செய்து பள்ளிக்கு வருகை தருகிறார். காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இருவரும் தேசிய கீதம் பாடுகின்றனர். அதன்பின்னர் வகுப்பு தொடங்கும். இதுபற்றி … Read more

ஏழைகளுக்கு இலவசமாக ஆடைகளை வாரி வழங்கும் அனோகா மால்..!!

லக்னோவின் ரஹிம்நகரில் உள்ள அனோகா மாலில், ஆடை மற்றும் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏழைகளுக்குத் தேவையான ஆடைகள் மட்டுமே அங்கு உள்ளன. டாக்டர் அஹ்மத் ரஸா கான் என்பவர், ஏழைகளுக்காக இந்த வணிக வளாகத்தை அமைத்துள்ளார்.இந்த வளாகத்திலுள்ள ஒரு கடை, ரிக்ஷா ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், குடிசை வாசிகள், அடித்தட்டு மக்கள் போன்றவர்களுக்கு இலவச ஆடைகளை வழங்கி வருகிறது. குளிர்காலத்தில் உடலுக்கு ஏற்ற கம்பளி ஆடைகள், போர்வைகளை இலவசமாக வழங்கி வருகிறது இந்த அனோகா மால். … Read more

நேதாஜிக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இலக்கு ஒன்றுதான்: மோகன் பாகவத்

கொல்கத்தா: பாதைகள் வேறாக இருந்தாலும் நேதாஜி மற்றும் ஆர்எஸ்எஸ் இரு தரப்பின் இலக்கும் ஒன்றுதான் என்று மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் ஆர்எஸ்எஸ் விழா நடைபெற்றது. இதில், அம்மாநில பாஜக தலைவர் சுகந்த மசும்தார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ் சீருடையில் கலந்து கொண்டனர். மேலும், சீருடை அணிந்த தொண்டர்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் … Read more

திருப்பதி கோயில் மூடப்படுமா? மார்ச்சில் தொடங்கும் தடபுடல் ஏற்பாடுகள்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் ஆனந்த நிலைய கோபுரங்கள் தங்கத்தால் மின்னும். ஏனெனில் இவற்றின் மீது தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. கடைசியாக 1958ஆம் ஆண்டு தங்க முலாம் பூசும் பணிகள் நடந்தன. இந்நிலையில் 65 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தங்க முலாம் பூச திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் பணிகள் வரும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும். பாலாலயம் ஏற்பாடு முன்னதாக பிப்ரவரி கடைசி வாரத்தில் திருமலை கோயிலில் பாரம்பரிய … Read more

மல்யுத்த கூட்டமைப்பில் பாலியல் புகார் குறித்து விசாரிக்க மேற்பார்வை குழு அமைப்பு

டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க 5பேர் கொண்ட மேற்பார்வை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் குழு அமைத்து மத்திய விளையாட்டுத்துறை உத்தரவு அளித்துள்ளது.

ஒரே ஒரு மாணவனுக்காக தினமும் 12 கி.மீ பயணம் செய்து வரும் ஆசிரியர்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கணேஷ்பூர் என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 150 மக்கள் மட்டுமே வசிக்கும் நிலையில், அங்கு ஒரு ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அனைவருக்கும் கல்வி என்ற அரசு திட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த ஆரம்பப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. ஆனால் அந்த பள்ளியில் கார்த்திக் சேகர் என்ற மாணவர் மட்டுமே படித்து வருகிறார். அவருக்கு மதிய உணவு உட்பட அனைத்து வசதிகளையும் அரசு செய்து … Read more

இந்த ஆண்டு குடியரசு தின விழா எப்படி இருக்கும்? – விரிவான தகவல்கள்

புதுடெல்லி: பொதுமக்களின் பங்கேற்புடன் கூடிய குடியரசு தின விழாவாக இந்த ஆண்டு குடியரசு தின விழா இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அது எவ்வாறு நடைபெற இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்ப்போம். சாதாரண மக்களுக்கு முதல் வரிசை: இந்த ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பம்சமாக பொதுமக்கள் பங்கேற்புடன் குடியரசு தின விழா என்பது கருப்பொருளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, குடியரசு தின விழாவின் … Read more

'நேதாஜியின் கனவை நிறைவேற்றுவோம்!' – மோகன் பாகவத் பேச்சு!

நேதாஜியின் கனவை முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றுவோம் என, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்து உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 ஆவது ஆண்டு பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23 ஆம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அந்தமான் மற்றும் நிகோபார் … Read more