ஹைதராபாத்தில் உள்ள மகளிர் கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு: 25 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

தெலங்கானா: ஹைதராபாத்தில் உள்ள கஸ்தூரிபா அரசு மகளிர் கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. ரசாயன வாயு கசிவினால் 25 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை மருத்துவமனையில் அனுமத்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2024 தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அரசியலுக்கு முழுக்கு போடுவேன்: சந்திரபாபு நாயுடு உறுதி

கர்னூல்: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்னூல் மாவட்டத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திறந்தவெளி வேனில் சென்றபடி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். கர்னூல் மாவட்டம் ஆதோனியில் நேற்று அவர் பேசியதாவது: ஆந்திராவில் விலைவாசி, வரி அதிகரித்து விட்டது. போலி மதுபான விற்பனையால் ஏழைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள். தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்கின்றன. ஆந்திராவில் அரசியல் காழ்ப்புணர்வால், அனைத்து அண்ணா கேன்டீன்களும் மூடப்பட்டுவிட்டன ஆனால், தமிழகத்தில் அம்மா உணவகம், ஆட்சி மாறினாலும் … Read more

சரியா பாக்க முடியல..படிக்க முடியல..கண் தெரியமாட்டேங்குது..புலம்பும் சஞ்சய் ராவத்.!

மகாராஷ்டிரா நாடாளுமன்ற உறுப்பினரும், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத், மும்பையின் கோரேகானில் உள்ள பத்ரா சால் குடியிருப்பினை கடந்த 2008ம் ஆண்டு மறுவடிவமைப்பு செய்ததில் சுமார் ரூ.1,034 கோடி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அவரை கைது செய்து, ஆர்தர் ரோடு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ரூ.112 கோடி பண மோசடி செய்ததாக சஞ்சய் ராவத் உதவியாளர் பிரவீன் ராவத் … Read more

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்.. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட “விக்ரம்- எஸ்”..!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான “விக்ரம் – எஸ்”, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஹைதரபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இஸ்ரோ மற்றும் இன்ஸ்பேஸ் அமைப்புடன் இணைந்து தயாரித்த இந்த ராக்கெட், இன்று காலை சரியாக 11.30 மணியளவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, திட எரிபொருளை பயன்படுத்தி விண்ணில் ஏவப்பட்டது. நவீன தொழில்நுட்பங்களுடன், 545 கிலோ எடையில், 6 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்ட விக்ரம் எஸ் ராக்கெட், மொத்தமாக 83 கிலோ … Read more

பஞ்சாபி திரையுலகின் ‘ஹேமா மாலினி’நடிகை தல்ஜீத் கவுர் மரணம்

லூதியானா: பஞ்சாபி திரையுலகின் ‘ஹேம மாலினி’என்று அழைக்கப்படும் நடிகை தல்ஜீத் கவுர் காலமானார். பழம்பெரும் பஞ்சாபி நடிகர் தல்ஜீத் கவுர் (69) ராய்கோட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த தல்ஜீத் கவுர், திடீரென நேற்று காலமானார். ஆனால் இவரது மறைவுக்கான காரணங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை. அவரது மறைவுச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், நடிகர் நீரு பஜ்வா வெளியிட்ட பதிவில், ‘தல்ஜீத் கவுர் தற்போது நம்முடன் இல்லை. உத்வேகத்துடன் செயல்பட்ட உங்களது (தல்ஜீத் கவுர்) … Read more

“பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்தக் கூடாது” – அமித் ஷா

புதுடெல்லி: பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்தக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் 3-வது அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும் (நவ 18, 19) நடைபெறுகிறது. ‘பயங்கரவாதத்திற்கு நிதி கூடாது’ (No Money for Terrorism) என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் பேசிய அமித் ஷா, “பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும், எந்தக் குழுவுடனும் தொடர்புபடுத்தக் கூடாது. பயங்கரவாதிகள் நாச வேலைகளைச் செய்ய … Read more

பதவி விலகும் ஆளுநர்?; புதிய கண்டிஷனால் பரபரப்பு!

கேரளாவில் இடதுசாரி அரசு, ஆளுநர் ஆரிப் முகமது கான் இடையேயான முட்டல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக 9 பல்கலைக்கழக துணை வேந்தர்களை தகுதி நீக்கம் செய்யும் ஆயுதத்துடன் ஆளுநர் இறங்கினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்கலைக்கழகத்தில் தலையிடும் அதிகாரத்தையே ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் இருந்து பறித்து கேரளா அரசு அதிரடி காட்டி உள்ளது. இவ்வாறாக கேரளா அரசின் பல்வேறு திட்டங்களுடன் ஆளுநர் முரண்பட்டு நிற்பதும், உடனே முதல்வர் பினராயி … Read more

நவீனமயமாகும் தீவிரவாதம்! பயங்கரவாதத்திற்கு நிதியுதவியை தடுக்க வேண்டும்: அமித்ஷா கவலை

நியூடெல்லி: தீவிரவாத அச்சுறுத்தலை மதம், தேசியம் அல்லது எந்தவொரு குழுவுடன் இணைக்கக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அண்டைநாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா மிது அமித் ஷாவின் மறைமுக தாக்குதல் இது என்று பார்க்கப்படுகிறது. “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த அல்லது தடுக்கும் நாடுகளும் உள்ளன” என்ற அவரது வார்த்தை அதை நிரூபிக்கிறது. தீவிரவாதத்தை எந்த மதத்துடனும், தேசியத்துடனும், சமூகத்துடனும் தொடர்புபடுத்தக்கூடாது என்று கூறிய அமித் ஷா, தீவிரவாதத்தைவிட … Read more

தீவிரவாதத்திற்கு நிதியுதவி கூடாது: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் சர்வதேச நாடுகளின் அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்க நாளான இன்றைய நிகழ்வில், பிரதமர் மோடி பேசுகையில், ‘தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் அதன் மீது நடவடிக்கை அவசியமானது. இந்த உலகம் தீவிரவாதத்தின் கோர முகத்தை உணரும் முன்னரே இந்தியா அதன் தாக்கத்தை சந்தித்துவிட்டது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களில், வகைகளில் இந்தியா தீவிரவாதத்தால் பாதித்துள்ளது. ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் தீவிரவாதத்துக்கு இழந்துள்ளோம். இருந்தாலும் … Read more

ஆர்டர்லி முறை:கடும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சி.ஆர்.பி.எஃப். வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி ஆர்டர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட காவலர் முத்து என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கடந்த 2004-ம் ஆண்டு கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும், ஜார்கண்ட் மாநிலத்தில் வேலை … Read more