பிபிஇ கிட் வாங்கியதில் ஊழல்? – கேரள மாஜி அமைச்சர் கே.கே.ஷைலஜா மறுப்பு!

கொரோனா பரவல் தீவிரமாக இருந்த போது தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டை கேரள மாநில முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா திட்டவட்டமாக மறுத்துள்ளாா். கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த போது தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வீணா எஸ்.நாயா், லோக் ஆயுக்தாவிடம் புகாா் அளித்தாா். அந்தப் புகாரில் கே.கே.ஷைலஜா, மாநில முன்னாள் சுகாதாரத் துறைச் செயாலாள ராஜன் என்.கோப்ரகடே … Read more

இளைஞர்களின் மனதை கெடுப்பதா? ஏக்தா கபூருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

புதுடெல்லி: சர்ச்சையான வெப்சீரிஸ் மூலம் இளைஞர்களின் மனதைக் கெடுக்கும் வேலையில் பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இறங்கியுள்ளார் என்று, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் மகள் ஏக்தா கபூர். டிவி தொடர்களை தயாரித்து வந்த இவர், பிறகு படங்களை தயாரித்தார். இப்போது வெப்சீரிஸ்களை ஓடிடி தளத்துக்காக  தயாரிக்கிறார். டிரிபிள் எக்ஸ் என்ற வெப்சீரிஸில் ஆபாச காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்களும் அதிகமாக இடம்பெற்றுள்ளன. இந்த வெப்சீரிஸின் 2வது பாகம் தற்போது ஓடிடி … Read more

காஷ்மீரில் தேச விரோத செயலில் ஈடுபட்ட 4 அரசு ஊழியர்கள், வங்கி மேலாளர் பணி நீக்கம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தேச விரோத செயல்களில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி மேலாளர் ஒருவரும் 4 அரசு ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக எழுந்த புகாரின் பேரில்,பாரமுல்லா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் அஃபக் அகமது வானி, காவல் துறை துணைப் பிரிவு கான்ஸ்டபிள் தன்வீர் சலீம் தார், கிராம பஞ்சாயத்து ஊழியர் சையது இப்திகார்ஆன்ட்ரபி, பாரமுல்லா நீர்வளத்துறை ஊழியர் இர்ஷத் அகமதுகான், ஹண்டுவாரா உதவி மின்ஊழியர் அப்துல் மொமின் பீர்ஆகிய … Read more

இந்திய ரூபாய் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை; அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதாகவே நான் பார்க்கிறேன்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: இந்திய ரூபாய் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதாகவே நான் பார்க்கிறேன் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டாலரின் மதிப்பு உயர்த்துவது நிலையில், பல வளரும் நாடுகளின் நாணயங்களை விட, இந்திய ரூபாய் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன் என ஒன்றிய நிதியமைச்சர் கூறியுள்ளார்.

டெல்லியில் ‘கிசான் சம்மான் சம்மேளன் 2022’ | 600 விவசாயிகள் வளர்ச்சி மையங்கள் – பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: டெல்லியில் ‘கிசான் சம்மான் சம்மேளன் 2022’ நாளை தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு நாடு முழுவதிலும் 600 விவசாயிகள் வளர்ச்சி மையங்களை தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதிலும் விவசாயிகளுக்கு உதவ பல்வேறு வகை மையங்கள் தனித்தனியாக செயல்படுகின்றன. இவற்றை ஒருங்கிணைத்து அனைத்து உதவிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், மத்திய வேளாண் துறை சார்பில் ‘பிரதமர் கிசான் சம்ரிதி கேந்திரா (பிஎம்கேஎஸ்கே)’ என்ற பெயரில் விவசாயிகளுக்கான வளர்ச்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இவற்றை நாளை … Read more

குஜராத் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் திட்டம்!

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதியுடனும், குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியுடனும் நிறைவடைகின்றன. பதவிக்காலம் முடிவடைவதற்கு அதிகபட்சம் 6 மாதகால அவகாசம் இருக்கும் நிலையில், அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதி. அதன்படி, மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் … Read more

புதிய மது கொள்கை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக டெல்லி துணை முதல்வருக்கு சி.பி.ஐ. சம்மன்

டெல்லி: டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. புதிய மது கொள்கை தொடர்பாக நாளை காலை 11 மணியளவில் விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ உத்தரவிட்டுள்ளது.

குஜராத் தேர்தல் விரைவில் அறிவிப்பு | டிசம்பர் 4-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வாய்ப்பு – ஆணைய வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், ஓட்டுப்பதிவு ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாக டிசம்பர் 4-ம் தேதிக்குள் நிறைவடையும் எனவும், அதன்பின் இமாச்சல் தேர்தல் முடிவுகளுடன் குஜராத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இமாச்சல பிரதேசம், குஜராத்மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புவெளியிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை இமாச்சல பிரதேசத்துக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இரு … Read more

கழிவு மேலாண்மையில் அலட்சியம் கர்நாடகா அரசுக்கு ரூ.2900 கோடி பைன்; தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

பெங்களூரு: சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் திட, திரவ கழிவு மேலாண்மையை சீராக மேற்கொள்ள தவறிய கர்நாடகா அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2,900 கோடி அபராதம் விதித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் 15வது பிரிவின் கீழ், கர்நாடகாவில் செயல்படுத்தப்பட்டு வரும் திட, திரவ கழிவு மேலாண்மை கண்காணிக்கப்பட்டு வந்தது. அதில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையை இம்மாநில அரசு ஒழுங்காக பின்பற்றாமல் இருந்தது கண்டறியப்பட்டது. திட, திரவ கழிவுநீரை மறுசுழற்சி … Read more

குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை கட்டியணைத்து தேற்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி

புதுடெல்லி: குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கட்டியணைத்து தேற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது. சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடந்த 11-ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் டெல்லியில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சிறுமிகள், பெண்கள் பங்கேற்று சிறுவயதில் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். அப்போது … Read more