சொத்துக் குவிப்பு வழக்கு | ஆ.ராசாவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர் ஆ.ராசா. அப்போது, புதுடெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றுக்கு ஆ.ராசா சாதகமாக நடந்து கொண்டதாகவும், இதனால் பலன் அடைந்த அந்த நிறுவனமானது ராசாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் … Read more

Video: கழிவறையில் புகுந்த முதலை… காலை கடனை கழிக்க முடியாமல் தவித்த குடும்பம்!

உங்கள் வீட்டிற்கு விருந்தாளி வந்தால் பலரும் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். அதேபோன்று, நீண்ட நாள் பார்க்காத உறவினர், திடீரென ஒரு ஞாயிற்றுகிழமை காலையில் உங்கள் வீட்டு வாசலில் நின்றால் நீங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவீர்கள் அல்லவா… ஆனால், குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டிற்கு வந்த ஒரு அழையா விருந்தாளியை பார்த்து வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி கலந்த பயத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.   குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தின் சொஜித்ரா நகரில் கரகுவா என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் பிக்பாய் ரத்தோட் என்பவரின் … Read more

முதலமைச்சர் பதவிக்காக 5 முறை அணி மாறிவிட்டார் நிதீஷ்குமார் – அமித் ஷா கடும் விமர்சனம்

முதலமைச்சர் பதவிக்காக நிதீஷ்குமார் 5 முறை கூட்டணி மாறி விட்டதாக, பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா விமர்சித்துள்ளார். பீகார் மாநிலம் சிதாப் தியாராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸை எதிர்த்து நெருக்கடிக்காலத்தில் போராட்டம் நடத்தி சிறை சென்றவர் ஜெய பிரகாஷ் நாராயணன் என்றும், அவரின் இயக்கத்தால் பயனடைந்தோர், ஆட்சி அதிகாரத்துக்காக, அதே காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்திருப்பதாகவும் சாடினார். அதிகாரத்துக்காக ஜெய பிரகாஷ் நாராயணன் எதையும் செய்ததில்லை என்றும், ஆனால் … Read more

மண் மேடு சரிந்த விபத்தில் 3 சிறுமிகள் உட்பட 6 பெண்கள் மூச்சுத்திணறி பரிதாப பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் கரவுலி மாவட்டம் மெட்புரா கிராமத்தை சேர்ந்த சில பெண்கள் தங்களது வீட்டிற்கு வர்ணம் பூசுவதற்காக அருகில் உள்ள மண் மேட்டிற்கு சென்றனர். அப்போது மண் மேடு திடீரென சரிந்ததால் மண் அள்ளிக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் புதைக்குழியில் சிக்கியது போல் அதில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 3 சிறுமிகள் உட்பட 6 ெபண்கள் மண் மேட்டின் சரிவில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயங்களுடன் உயிர்தப்பினர். தகவலறிந்த மீட்புக் குழுவினர், மண் மேட்டிற்குள் … Read more

குளிர்பானத்தில் போதைபொருளை கலந்து கூட்டு பாலியல் வன்கொடுமை – காவலர் உட்பட 3 பேர் கைது

32 வயது பெண்ணுக்கு போதைப்பொருளை கொடுத்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ராஜஸ்தான் போலீஸ் உட்பட 3 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த 32 வயது பெண்ணின் நண்பர் அஜய்(39). இவர் தனது நண்பர்களான போலீஸ் கான்ஸ்டபிள் தாரா சந்த் (34) மற்றும் நரேஷ்(38) ஆகியோருடன் வடமேற்கு டெல்லியில் ஆதர்ஷ் நகரிலுள்ள ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்துள்ளார். அப்போது அஜய் தனது தோழியை அங்கு அழைத்துள்ளார். அங்கு அவருக்கு குளிர்பானம் கொடுத்துள்ளனர். … Read more

பக்தர்களுக்கு நற்செய்தி.. வரும் 17ம் தேதி சபரிமலையில் நடை திறப்பு..!

கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் ஐப்பசி மற்றும் மலையாளத்தின் துலாம் மாத பூஜைக்காக வரும் 17-ம் தேதி கோயில் நடை திறக்கப்படவுள்ளது. இதைதொடர்ந்து, 22-ம் தேதி வரை 5 நாட்கள் கோவிலில் பூஜைகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15-ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, நவம்பர் 16-ம் தேதி முதல் பக்தர்கள் … Read more

‘வெறுப்புப் பிரசாரங்களை தடுக்க வேண்டும் என்பது சரியானதே’ – உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: நாட்டின் ஒட்டுமொத்தச் சூழலையும் கெடுக்கும் வெறுப்புப் பிரசாரங்களை தடுக்க வேண்டும் என்பது சரியானதே என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொது இடங்களில் பரப்பப்படும் இத்தகைய வெறுப்புப் பேச்சுகளால் நாட்டின் ஒட்டுமொத்தச் சூழலுமே கறைபடிந்ததாகிவிடுகிறது என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாகக் கூறி ஹர்ப்ரீத் மன்சுகானி என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு … Read more

இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தொழில்நுட்பம்: பிரதமர் மோடி!

ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாவது உலக புவிசார் சர்வதேச மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் ஒருபகுதியாக, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், உலகளாவிய புவிசார் இயக்கத்தை கட்டமைப்பதில் யாரும் விடுபடக்கூடாது’ என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளில் இதனைக் காணலாம். கடைசி மைலில் உள்ள, கடைசி நபருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையிலான அந்தியோதயா என்னும் தொலைநோக்கில் நாங்கள் பாடுபட்டு வருவதாக தெரிவித்தார். … Read more

உலக வங்கி – IMF கூட்டங்களில் பங்கேற்க நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்!

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை அமெரிக்கா செல்கிறார். இந்த சந்திப்பின் போது தற்போதைய உலக பொருளாதார நிலை குறித்து விவாதிக்கப்படும். தனது பயணத்தின் போது  நிதியமைச்சர் அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெல்லனை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்துவார். நிதியமைச்சர்  G20 நாடுகளின் நிதி அமைச்சர்களுடனும் சந்திப்பை நடத்துவார். இது தவிர, தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களையும் நிதி அமைச்சர் சந்திப்பார். நிமலா சீதாராமன் … Read more

6 நாட்கள் பயணமாக நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்

புதுடெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 6 நாட்கள் அமெரிக்காவில் இருக்கும் நிர்மலா சீதாராமன், சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி ஆண்டு கூட்டம், ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு, மத்திய வங்கி ஆளுநருடன் பேச்சு வார்த்தை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தொடர்ந்து ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளுடனான பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார். அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் ஏலன், சர்வதேச … Read more