உ.பி. | பட்டியலின சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை; 6 பேர் கைது

லக்கிம்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு மைனர் சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். லக்கிம்பூர் மாவட்டம் நிகாசன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் புதன்கிழமை மாலை 17, 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவம் உத்தப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக, … Read more

திருப்பதியில் 20ம் தேதி விஐபி தரிசனம் ரத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் வருடாந்திர பிரமோற்சவம், கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த நிலையில், திருப்பதியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 27ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் அக்டோபர் 5ம் தேதி வரை கோயில் மாட வீதிகளில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்கள் மத்தியில் அருள்பாலிக்க உள்ளனர். அக்டோபர் 5ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் … Read more

திருமணமான அன்று முதலிரவு அறைக்குள் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழப்பு.!

ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டத்தில் திருமணமான அன்று முதலிரவு அறைக்குள்  புதுமாப்பிள்ளை மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரிப்பள்ளியை சேர்ந்த துளசி பிரசாத்தும்,   மதனப்பள்ளியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து கடந்த 13-ம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். முதலிரவு அறைக்குள் சென்ற மணமகன் சற்று நேரத்திலேயே மயங்கி விழுந்ததை அடுத்து, குடும்பத்தார் அவரை மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  Source … Read more

உத்திரப்பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் 2 சிறுமிகள் கொலை: ராகுல் காந்தி கண்டனம்

உத்திரப்பிரதேசம்: லக்கிம்பூர் கேரியில் பட்டியல் வகுப்பை சேர்ந்த 2 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். பட்டியல் வகுப்பை சேர்ந்த 2 சிறுமிகள் பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது எனவும், பாலியல் குற்றவாளிகளை விடுவிப்பவர்களிடம் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் கூறினார். 

உத்தர பிரதேச மாநிலம் கியான்வாபி மசூதியில் முஸ்லிம்கள் நுழையத் தடை விதிக்கும் மனு: அக்.6-ல் வாரணாசி நீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் வாரணாசியின் காசி விஸ்வநாத் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதி வளாகச் சுவரிலுள்ள சிங்கார கவுரி அம்மனை தரிசிக்கும் வழக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது. கியான்வாபி மசூதி இருந்த இடத்தில் ஆதி விஸ்வேஷ் வருக்கான கோயில் இருந்த தாகவும், இதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அதனுள் முஸ்லிம்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனு, கடந்த மே மாதம் வாரணாசியின் விஸ்வா வேதிக் சனாதன் சங்(விவிஎஸ்எஸ்) தலைவரான ஜிதேந்திரா சிங் … Read more

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை உஸ்பெகிஸ்தான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி  உஸ்பெகிஸ்தான் செல்கிறார். உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஜியோயேவ் அழைப்பின் பேரில் சமர்க்கண்ட நகருக்கு பிரதமர் செல்கிறார்.

ஆந்திராவில் திருமணமான இரவு மர்மமாக மணமகன் உயிரிழப்பு

திருப்பதி: ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், மதனபள்ளியைச் சேர்ந்த துளசி பிரசாத் (25) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிரிஷா (23) ஆகிய இருவருக்கும் பெரியவர்கள் நிச்சயித்த வண்ணம் கடந்த திங்கட்கிழமை மதனபள்ளியில் திருமணம் நடைபெற்றது. பின்னர், பெண் வீட்டார் வீட்டில் முதல் இரவு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மணமகன் துளசி பிரசாத் முதல் இரவு அறைக்குள் இருந்தார். சிறிது நேரம் கழித்து மணப்பெண் அறைக்கு சென்று பார்த்தபோது, படுக்கையில் விழுந்து கிடந்தார் துளசி பிரசாத். அதிர்ச்சி அடைந்த … Read more

தமிழுக்கு இந்தி எதிரியா… என்ன சொல்கிறார் அமித் ஷா?

குஜராத் மாநிலம் சூரத்தில் அகில இந்திய அலுவல் மொழி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். இந்த  மாநாட்டில், இந்தி தொடர்பான அகராதியான’ஹிந்தி சப்த் சிந்து (பதிப்பு-1)’ தொடர்பான 2.0 கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல் இஸ்ரோவால் வெளியிடப்பட்ட ‘கவிதை கதா’ என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது. மாநாட்டில் கலந்துகொண்ட அமித்ஷா பேசுகையில், “மாநில மொழிகளுக்கு எதிராக இந்தியை நிறுத்த தவறான பரப்புரை நடந்துவருகிறது. இந்தியும், குஜராத்தியும் போட்டியாளர்கள், இந்தியும், தமிழும் போட்டியாளர்கள், இந்தியும், … Read more

உ.பி.யில் பட்டியல் வகுப்பை சேர்ந்த 2 சிறுமிகள் பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: காங். எம்.பி. ராகுல்காந்தி கண்டனம்

டெல்லி: உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் பட்டியல் வகுப்பை சேர்ந்த 2 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பட்டியல் வகுப்பை சேர்ந்த 2 சிறுமிகள் பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் குற்றவாளிகளை விடுவிப்பவர்களிடம் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் அனைவரும் உருவாக்க வேண்டும் என தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். உத்தரபிரதேச … Read more

உஸ்பெகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் போது (எஸ்சிஓ) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசவுள்ளார். இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் இன்று தொடங்கவுள்ளது. தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 8 நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பை ஏற்று பிரதமர் … Read more