நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் – உச்சநீதிமன்றம்!

தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக கூறி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு ஓய்வூதியம் (Pension) வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆத்.ஷா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தகைய … Read more

உ.பி | 63 டீஸ்பூன்களை விழுங்கிய நபர்: அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்

முசாபர்நகர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 63 டீஸ்பூன்களை 32 வயது மதிப்பு தக்க நபர் ஒருவர் விழுங்கி உள்ளார். அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்று பகுதியில் இருந்து அகற்றியுள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம். அந்த நபரின் பெயர் விஜய் என தெரிகிறது. அவரது சொந்த ஊர் மன்சூர்பூர் பகுதியில் உள்ள பொபாடா கிராமத்தை சேர்ந்தவர் என தெரிகிறது. அவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவராம். அதன் காரணமாக மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை … Read more

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை: அடுத்து என்ன நடக்கும்?

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை அமல் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை அதிகாரிகள் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்திய நிலையில், இந்த தடையானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக … Read more

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இணையதளம் முடக்கம்: ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி : தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் popularfrontofindia.org என்ற இணையதளத்தை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பி.எஃப்.ஐ அமைப்பின் யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளம்  பக்கங்களை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு 5 ஆண்டு தடை ஏன்?.. மத்திய அரசு சொல்லும் 5 காரணங்கள்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணங்களாக மத்திய அரசு சொல்வது என்ன என்பதைப் பார்க்கலாம். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் அதன் துணை அமைப்புகளும் சட்டவிரோதமானவை என்று அறிவித்துள்ள மத்திய அரசுக்கு, அவற்றுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. தடைக்கான காரணங்கள் குறித்தும் தெரிவித்துள்ளது. 1. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் அதன் துணை அமைப்புகளும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் … Read more

PFI அமைப்பு மீதான தடையை ஆதரிக்க முடியாது: அசாதுதீன் ஓவைசி கண்டனம்!

பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீதான தடையை ஒருபோதும் ஆதரிக்க முடியாது என, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி காட்டமாகத் தெரிவித்து உள்ளார். பி.எஃப்.ஐ., எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்ட விரோதமானது என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ஊபா சட்டத்தின் கீழ் ‘பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பையும், அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கும் … Read more

கேரளாவில் 18வது நாளாக ராகுல் காந்தி நடைபயணம்: நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு.. உற்சாகத்தில் ஆனந்த கண்ணீர் சிந்திய சிறுமி..!!

திருவனந்தபுரம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது 18வது நாள் நடைப்பயணத்தை தனது சொந்த தொகுதியான வயநாட்டில் மேற்கொண்டு வருகிறார். நாடு முழுவதும் 3,500 கி.மீ. ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தொடங்கினார். கடந்த 10ம் தேதி கேரளாவுக்கு சென்ற அவர், தொடர்ந்து அம்மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். கேரளாவில் 18வது நாளாக ராகுல் தனது சொந்த தொகுதியான வயநாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று … Read more

''காண்டமும் சேர்த்து வழங்க வேண்டுமா?'' – மாணவிகளிடம் ஆணவமாக உரையாடிய பெண் ஐஏஎஸ் அதிகாரி!

’சானிடரி நாப்கின்களை அரசு ரூ.20-30க்கு வழங்குமா?’ என்ற பள்ளி மாணவியின் கேள்விக்கு, ’அரசு குடும்ப கட்டுப்பாடு முறைகள் மற்றும் காண்டமும் சேர்த்து வழங்கவேண்டுமா?’ என பீகாரில் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி இறுமாப்பாக பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். பீகாரின் பாட்னாவில் ‘Sashakt Beti, Samriddh Bihar’ (அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. யுனிசெஃப் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. … Read more

மத்திய அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.வெங்கடரமணி நியமனம்!

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உடன், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் எனப்படும், தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் இன்று, மத்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறப்பித்து உள்ளார். இவர், பதவி ஏற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகள், … Read more

ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு தொடங்கிய போது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 5 கிலோ உணவு தானியங்கள் நாடு முழுவதும் இலவசமாக வழங்குவதாக அறிமுகப்படுத்தப்பட்டது. பலமுறை நீட்டிக்கப்பட்ட இந்த திட்டம் நாளை மறுநாள் செப்-30ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இந்நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் … Read more