நாட்டின் சவால்களை முறியடிப்பதில் காங்கிரசுக்கும் முக்கிய பங்கு உள்ளது: கேரள நடைபயணத்தில் ராகுல் காந்தி பேச்சு

திருவனந்தபுரம்: நம் நாடு எதிர்கொள்ளும் சவால்களை முறியடிப்பதில் காங்கிரசுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்று திருவனந்தபுரத்தில் நடைபயணத்தின் போது தன்னை சந்திக்க வந்த கலாச்சார மற்றும் மத தலைவர்களிடையே பேசும் போது ராகுல் காந்தி குறிப்பிட்டார். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி. தொடர்ந்து 4 நாட்கள் நடை பயணத்தை நிறைவு செய்தவர் தற்போது கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கேரளாவில் … Read more

தேசிய சினிமா தினம் வேறு தேதிக்கு மாற்றம் – மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா

தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப் 16ம் தேதியில் இருந்து செப் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு செப்டம்பர் 16ம் தேதியை தேசிய சினிமா தினம் என அறிவித்திருந்தது. அந்த நாளில் PVR, INOX, CINEPOLIS, CARNIVAL, MIRAJ, CITYPRIDE, ASIAN, MUKTA A2, MOVIE TIME, WAVE மற்றும் M2K போன்ற குழுமங்களுக்கு சொந்தமான சுமார் 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் … Read more

கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குக் கொண்டு வாருங்கள் : குடியரசுத் தலைவரிடம் முறையீடு

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மகன் இளவரசர் சார்லஸ் மன்னராகியுள்ளார். ராணி அணிந்திருந்த கிரீடம், மன்னர் சார்லஸின் மனைவி கமிலாவுக்கு செல்லவுள்ளது. இந்த கிரீடத்தை அலங்கரிக்கும் 105 கேரட் கோஹினூர் வைரம்  இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. கோஹினூர் வைரம் ஜெகன்நாதர் கோயிலுக்கு மகாராஜா ரஞ்சித் சிங் நன்கொடையாக வழங்கியது எனவும், அதனை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு, ஜெகன்நாத சேனா என்ற அமைப்பு குடியரசுத் … Read more

ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்.31ம் தேதி வரை விண்ணபிக்கலாம்.

டெல்லி : ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.  www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்.31 வரை விண்ணப்பிக்கலாம். மாதிரி விண்ணப்பப் படிவம், விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை www.tndce.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. முதல் முறையாக உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் (புதிய மாணவர்கள்) ‘மாணவர் பதிவு படிவத்தில்’ தங்கள் ஆவணங்களில் அச்சிடப்பட்டுள்ள துல்லியமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் புதிய விண்ணப்பதாரராக போர்ட்டலில் … Read more

கத்தி வைத்திருந்ததால் டெல்லி மெட்ரோவில் சீக்கியரைத் தடுத்த அதிகாரி; சர்ச்சையான சம்பவம்

கத்தியுடன் (சீக்கியரின் அடையாளம்) வந்ததாக கூறி `டெல்லி துவாரகா செக்டார் 21’ என்ற மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததாக சீக்கியர் ஒருவர் செப்டம்பர் 8ம் தேதி அளித்த புகார் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தேசிய சிறுபான்மையினர் ஆணையம் (NMC) டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் (DMRC) தலைவர் மற்றும் டெல்லி தலைமைச் செயலரிடம் அறிக்கை கேட்டுள்ளது. தக்த் ஸ்ரீ தம்தாமா சாஹிப்பின் (Takht Sri Damdama Sahib) முன்னாள் நிர்வாகி ஜதேதாரான (Jathedar) … Read more

கோகினூர் வைரத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு மனு

புவனேஷ்வர்: உலக புகழ்பெற்ற கோகினூர் வைரம் பூரி ஜெகநாதருக்கு சொந்தமானது என்றும், இங்கிலாந்தில் இருந்து அதனை இந்தியாவிற்கு திரும்பக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலாச்சார அமைப்பு ஒன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. பூரியைச் சேர்ந்த ஸ்ரீ ஜெகந்நாத் சேனா என்கிற அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷன் பட்நாயக், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: புகழ்பெற்ற கோகினூர் வைரம் ஸ்ரீ ஜெகந்நாதருக்குச் சொந்தமானது. தற்போது … Read more

புதிய அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோத்தகி நியமனம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மாதம் 1ம் தேதி பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. ஒன்றிய அரசின் மூத்த வழக்கறிஞரும், அட்டர்னி ஜெனரலுமான கே.கே.வேணுகோபாலின் (91) பதவிக்காலம் கடந்த ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், மீண்டும் அவரது பதவியை ஒன்றிய அரசு நீடித்தது. இவ்வாறாக கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தனது பதவியை நீடிக்க வேண்டாம் என்று கே.கே.வேணுகோபால் … Read more

பணவீக்கம்| சாமானிய மக்களிடமிருந்து விலகி நிற்கிறார் நிதி அமைச்சர்: ப. சிதம்பரம்

சென்னை: பண வீக்கத்தைப் பற்றி கவலைப்படாத நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாமானிய மக்களிடமிருந்து விலகி நிற்கிறார் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா தொழில் கவுன்சிலின் உச்சி மாநாட்டில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “பணவீக்கம் இந்தியாவின் முன்னுரிமை இல்லை. இது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். கடந்த சில மாதங்களாக பண வீக்கத்தை நாங்கள் கட்டுப்படுத்தி வருகிறோம். பணவீக்கத்தைக் காட்டிலும் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு … Read more

மீண்டும் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக முகுல் ரோத்தகி நியமனம்

டெல்லி: ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக முகுல் ரோத்தகி மீண்டும் நியமிக்கப்பட உள்ளார். ஏற்கனவே 2014 முதல் 2017 வரை ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக முகுல் ரோத்தகி பதவி வகித்தார். ஒன்றிய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பதிவிக்காலம் 30-ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

பிறந்தநாள் ஏலத்தில் பங்குபெறும் பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள்.. முழுவிவரம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவருக்கு வந்த பரிசுகள் ஆன்லைன் மூலமாக ஏலம் விடப்பட உள்ளது. ஏற்கனவே 3 முறை இதுபோன்று ஆன்லைன் வாயிலாக ஏலம் நடந்துள்ள நிலையில், 4வது முறையாக pmmementos.gov.in எனும் இணையதளத்தில் வருகின்ற செப்டம்பர் 17ம் தேதி ஏலம் துவங்கி அக்டோபர் 2ஆம் தேதி வரை ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் புகழ்பெற்ற நபர்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டவர்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களால் பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் … Read more