ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட ரயில்கள் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் இலவச உணவு

புதுடெல்லி: அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்திய ரயில்வே பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்யப்பட்டு வருகிறது. எனினும், இயற்கை மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழலில் பயணிகளின் சிரமத்தை தவிர்க்க சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதில் எந்தக் காரணத்துக்காகவும் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் … Read more

உணவு பொருள்களின் பணவீக்கம் 7.62% உயர்வு: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..!!

சென்னை: உணவு பொருள்களின் பணவீக்கம் 7.62 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்க விவரங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை அதிகமாக இருப்பதே சில்லறை பணவீக்கம் உயர்ந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. பணவீக்கம் 2 சதவீதம் முதல் 6 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்பதே … Read more

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதால் சிறை – மறைந்த துவாரகா பீடாதிபதி சுவாமி ஸ்வரூபானந்தா யார்?

புதுடெல்லி: அத்வைத ஆச்சார்யரான ஆதி சங்கரர் தோற்றுவித்த துவாரகா பீடத்தின் அதிபதியாக இருந்து வந்தவர் ஜகத்குரு ஸ்வரூபானந்த சரஸ்வதி. மத்திய பிரதேசத்தின் நர்சிங்பூரில் உள்ள ஜோதீஸ்வர் ஆசிரமத்தில் தங்கியிருந்த அவருக்கு நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் மாலை 3.30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. மத்தியபிரதேசத்தில் உள்ள சியோனி மாவட்டத்தின் டிகோரி கிராமத்தில் 1924-ம் ஆண்டு பிறந்த இவர், பத்ரிநாத்தில் உள்ள ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாராக இருந்த பிரம்மானந்த சரஸ்வதியின் சீடராக இருந்தார். குஜராத்தில் … Read more

செகந்திராபாத் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி

செகந்திராபாத்: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

`விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் '- எடப்பாடி பழனிசாமி

விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் பேசுகையில், அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது; உண்மை தர்மம் வென்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஐம்பதுக்கும் அதிக குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு … Read more

அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு ரூ.1,800 கோடி செலவு

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அந்த அறக்கட்டளை உருவாக்கிய விதிமுறைகளை அங்கீகரிப்பதற்கான கூட்டம் பைஸாபாத்தில் நடைபெற்றது. இதுகுறித்து அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய் கூறும்போது, ‘‘அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கான ஒட்டுமொத்த செலவினம் ரூ.1,800 கோடியாக இருக்கும் என கட்டுமான நிபுணர்களால் மதிப்பீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் கட்டுமானப் பணிகள் வரும் 2023-ம் ஆண்டுக்குள் … Read more

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து: ஏழு பேர் உயிரிழப்பு

திருமலை: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே உள்ள ரூபி எலக்ட்ரிக் பைக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் திங்கள்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டதால்  அதில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தனர். ஆனால், ஷோரூம் செயல்பட்டு வந்த  கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள ரூபி லாட்ஜில் பலர் தங்கி இருந்தனர். இதனால் அதில் இருந்தவர்கள் தீயில் சிக்கி கொண்டனர். அதில்  சிலர் தங்கள் உயிரைக் … Read more

அகமதாபாத் – மும்பை இடையே 491 கி.மீ. தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்தது வந்தே பாரத் ரயில்

மும்பை: அகமதாபாத்-மும்பை இடை யிலான ‘வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த ரயில் 491 கி.மீ. தூரத்தை சுமார் 5 மணி நேரத்தில் கடந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத், மகாராஷ்டிர மாநிலம் மும்பை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த 9-ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது வெற்றி பெற்றதாக மேற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனையின்போது இந்த … Read more

இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ஆசியாவில் அரிசி வர்த்தகம் முடக்கம்!

இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ஆசியாவில் அரிசி வர்த்தகம் முடங்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, உலக அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளது. சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகள் உலகின் முன்னணி அரிசி இறக்குமதியாளர்களாக உள்ளன. நடப்பு பருவத்தில் நெல் சாகுபடி குறைந்ததால், கடந்த வாரம் பாசுமதி அல்லாத அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி வரியும், உடைந்த அரிசியை ஏற்றுமதி செய்ய தடையும் விதிக்கப்பட்டது. 20 சதவீத ஏற்றுமதி வரியை செலுத்த … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் எத்தனை கொரோனா நோயாளிகள் இறந்தார்கள் என்று ஒன்றிய அரசு கணக்கு எடுக்க வேண்டும்: சுகாதாரத்துறை ஆய்வறிக்கை தாக்கல்

டெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறையால் எத்தனை கொரோனா நோயாளிகள் இறந்தார்கள் என்று ஒன்றிய அரசு கணக்கு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கொரோனா நோயாளிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என்று சுகாதாரத்துறை தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளது.