''காண்டமும் சேர்த்து வழங்க வேண்டுமா?'' – மாணவிகளிடம் ஆணவமாக உரையாடிய பெண் ஐஏஎஸ் அதிகாரி!
’சானிடரி நாப்கின்களை அரசு ரூ.20-30க்கு வழங்குமா?’ என்ற பள்ளி மாணவியின் கேள்விக்கு, ’அரசு குடும்ப கட்டுப்பாடு முறைகள் மற்றும் காண்டமும் சேர்த்து வழங்கவேண்டுமா?’ என பீகாரில் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி இறுமாப்பாக பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். பீகாரின் பாட்னாவில் ‘Sashakt Beti, Samriddh Bihar’ (அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. யுனிசெஃப் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. … Read more