இந்தியாவில் ஒரே நாளில் 9,520 பேருக்கு கொரோனா… 41 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 9,520 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,98,696 ஆக உயர்ந்தது. * புதிதாக 41 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

ஆயிரம் சோதனை நடந்தாலும் சிபிஐ.க்கு எதுவும் கிடைக்காது – மணிஷ் சிசோடியா திட்டவட்டம்

புதுடெல்லி: சிபிஐ ஆயிரம் சோதனை நடத்தினாலும் குற்றச்சாட்டு தொடர்பாக எதுவும் கண்டுபிடிக்க முடியாது என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறினார். டெல்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. … Read more

என் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை பாஜகவை எதிர்த்து போராடுவேன்: ஜார்கண்ட் முதல்வர் பேச்சு

ராஞ்சி: என் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை பாஜகவை எதிர்த்து போராடுவேன் என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்கண்ட் அரசை சனாதன சக்திகள் வீழ்த்த முயற்சிப்பதாக ஹேமந்த்  சோரன் தெரிவித்தார்.

டெல்லி வந்த சீக்கிய பத்திரிகையாளர் நியூயார்க் நகரம் திருப்பி அனுப்பப்பட்ட பின்னணி?

ஜலந்தர்: அமெரிக்காவைச் சேர்ந்த சீக்கிய பத்திரிகையாளர் அங்கத் சிங். அமெரிக்காவைச் சேர்ந்த வைஸ் நியூஸ் என்ற இணையதளத்துக்காக செய்திப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இவர் கடந்த3 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது இவரை போலீஸாரும், குடியேற்றப் பிரிவு அதிகாரிகளும் தடுத்து நிறுத்தி மீண்டும் அவரது நாட்டுக்கே நாடு கடத்தி, அனுப்பி வைத்தனர். அடுத்த விமானத்திலேயே அவர் நியூயார்க் அனுப்பப்பட்டதாக குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கத் சிங்கை … Read more

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சபரிமலை கோயில் நடை செப்.6-ம் தேதி திறப்பு

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சபரிமலை கோயில் நடை செப்டம்பர் 6-ம் தேதி திறக்கப்படுகிறது. 8-ம் தேதி நடைபெறும் திருவோண தினத்தில் சிறப்பு பூஜை தரிசனத்துக்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

நாட்டில் உள்ள 744 மாவட்டங்களிலும் இஎஸ்ஐ மருத்துவமனை – திருப்பதி தேசிய தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம்

திருப்பதி: நாட்டில் உள்ள 744 மாவட்டங்களிலும் இஎஸ்ஐ மருத்துவமனை சேவை விரிவாக்கம் செய்யப்படுமென தேசிய தொழிலாளர் நல மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பதியில் 2 நாள் தேசிய தொழிலாளர் நல மாநாடு, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் நடந்தது. இதில், 25 மாநில மற்றும் யூனியன் பிரதேச தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் முதல் நாளான வியாழக்கிழமையன்று, காணொலி முலம் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். இந்நிலையில், 2-ம் … Read more

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன்? – குலாம் நபி ஆசாத்தின் 5 பக்க கடிதம் விரிவாக…

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று ராஜினாமா கடிதம் அனுப்பினார். ஐந்து பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீரில் கடந்த 1953 ஆகஸ்ட் 8-ம் தேதி ஷேக் முகமது அப்துல்லா கைது செய்யப்பட்டார். அப்போது காஷ்மீரில் காங்கிரஸுக்கு நன்மதிப்பு கிடையாது. இந்த சூழ்நிலையில் கடந்த 1970 -ம் ஆண்டில் காங்கிரஸில் இணைந்தேன். சுதந்திர போராட்ட காலத்தில் பள்ளியில் படித்து கொண்டிருந்தபோதே மகாத்மா காந்தி, நேரு, … Read more

ஒரே நாடு; ஒரே உரம் திட்டம் உர மூட்டைகளில் ‘பாரத்’ கட்டாயம்: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே உரம்’ திட்டத்தின்படி,  உர மூட்டைகளில் ‘பாரத்’ பெயரை கட்டாயமாக அச்சிடும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே நாடு; ஒரே தேர்தல், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு என அனைத்து திட்டங்களையும்  ‘ஒரே நாடு’ திட்டத்தின் கீழ் கொண்டு வர ஒன்றிய அரசு முயல்கிறது. இந்நிலையில், ஒன்றிய  உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு வருமாறு:* நாடு முழுவதும் உர உற்பத்தி நிறுவனங்கள், ‘பாரத்’ என்ற பொது பெயரிலேயே உரத்தை விற்க … Read more

காங்கிரஸில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் | ராகுல் மீது குற்றச்சாட்டு; சோனியாவுக்கு பாராட்டு

புதுடெல்லி: காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் (73), அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி குழந்தைத்தனமாக, முதிர்ச்சியின்றி செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அதன்பிறகு கட்சித் தலைமை பொறுப்பை சோனியா காந்தி … Read more

இலவசத் திட்டங்களுக்கான நிதியை பட்ஜெட்டில் இருந்து ஒதுக்க வேண்டும் – நிர்மலா சீதாராமன்

இலவசத் திட்டங்களுக்கான நிதியை மாநில அரசுகள் பட்ஜெட் தொகையில் ஒதுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் , இலவசத் திட்டங்களின் சுமையை மற்றவர்கள் மீது மாநில அரசுகள் சுமத்தக்கூடாது என்று வலியுறுத்தினார்.தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் அரசியல் கட்சிகள் அதனால் ஆட்சியைக் கைப்பற்றி அரசு அமைக்கும் போது தங்கள் பட்ஜெட்டில் இலவசத் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்று … Read more