மூசேவாலா கொலையில் சிக்கிய குற்றவாளிகள் நடிகர் சல்மான் கானை தீர்த்துக்கட்ட சதி: விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்

சண்டிகர்: பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள், நடிகர் சல்மான் கானையும் தீர்த்துக் கட்ட சதித்திட்டம் தீட்டியிருந்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூசேவாலா கடந்த மே மாதம் கும்பல் ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, பஞ்சாப் போலீசின் கேங்ஸ்டர் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, கனடாவை சேர்ந்த கேங்ஸ்டர் கோல்டி பிரார் உள்ளிட்ட குற்றவாளிகை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, … Read more

சிறப்பு அந்தஸ்துக்கு வாய்ப்பே இல்லை: குலாம் நபி ஆசாத் பல்டி

பாரமுல்லா: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கடந்த மாதம் 26ம் தேதி கட்சியில் இருந்து விலகினார். ஜம்மு காஷ்மீரில் இவர் புதிய கட்சி தொடங்க உள்ளார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஆசாத் பேசியதாவது: இன்னும் 10 நாளில் புதிய கட்சி அறிவிப்பேன். என்னுடைய கட்சி நண்பர்கள்  புதிய கட்சிக்கு  ஆசாத் என பெயரிட வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு நான் மறுத்து விட்டேன். புதிய கட்சியின் … Read more

பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட 1,200 பொருட்கள் செப்.17-ம் தேதி முதல் ஏலம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட 1,2000-க்கும் மேற்பட்ட பொருட்கள், செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆன்லைனில் ஏலம் விடப்படுகின்றன. பிரதமருக்கு பரிசாக கிடைக்கும் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் நிதி மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்தாண்டு பிரதமர் மோடிக்கு கிடைத்த 1,348 பரிசு பொருட்கள் pmmementos.gov.in என்ற இணையதளம் மூலம் ஏலம் விடப்பட்டது. இவற்றுக்கு 8,600-க்கும் மேற்பட்ட ஏலங்கள் கேட்கப்பட்டன. ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் … Read more

1.5 லட்சம் பேர் பங்கேற்ற ஜேஇஇ முதன்மை தேர்வில் 40,000 மாணவர் தேர்ச்சி

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள என்ஐடி, ஐஐஐடி போன்ற ஒன்றிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற, ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்படுகிறது.  இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜேஇஇ முதன்மை தேர்வில் பங்கேற்லாம். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேரலாம். இந்த ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், 1 லட்சத்து 55 ஆயிரத்து 538 மாணவர்கள் … Read more

பீகார் கல்லூரிகளில் ஹால் டிக்கெட்டில் மோடி, தோனி படம்: விசாரணைக்கு உத்தரவு

பாட்னா: பீகாரில் உள்ள எல்.என்.பல்கலைக்கழக தேர்வு நுழைவு சீட்டில்  பிரதமர் மோடி,  ஆளுநர்  பாகுசவுகான், கிரிக்கெட் வீரர்  தோனி ஆகியோரின் படங்கள்  இருந்தது  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பீகார் மாநிலம், தர்பங்காவில்  எல்.என். பல்கலைக் கழகம் உள்ளது.  இந்த பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட  மதுபானி, சமஸ்திப்பூர், பெகுசராய் மாவட்டங்களில் உள்ள  கல்லுாரிகளில் பிஏ பயிலும்  மாணவர்களுக்கு  நேற்று முன்தினம்   தேர்வு நடந்தது.  அப்போது மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி, ஆளுநர் பாகு சவுகான், கிரிக்கெட்  … Read more

எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க உஸ்பெகிஸ்தான் செல்கிறார் மோடி: வரும் 15, 16ல் பயணம்

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 15ம் தேதி உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த 2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்டில் வரும் 15, 16ம் தேதிகளில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக … Read more

துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியார் 99 வயதில் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

போபால்: துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமி நேற்று காலமானார். துவாரகா பீடத்தின் தலைவராக இருந்து வந்த ஜகத்குரு ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமி கடந்த ஓராண்டாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் மத்தியப் பிரதேசத்தின் நர்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீதம் ஜோதீஸ்வர் ஆசிரமத்தில் நேற்று மாலை இறந்தார். அவருக்கு வயது 99.மத்தியப் பிரதேசத்தில் சியோனி மாவட்டத்தின் டிகோரி கிராமத்தில் 1924ம் ஆண்டு பிறந்த இவர், தனது 9வது வயதில் ஆன்மீக பயணத்தை தொடங்கினார். … Read more

முன்னாள் ஒன்றிய அமைச்சர்-பிரபாஸ் உறவினர், நடிகர் கிருஷ்ணம் ராஜு மரணம்

ஐதராபாத்,: முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நடிகர் பிரபாஸ் உறவினரும், தெலுங்கு படவுலகின் சீனியர் நடிகரும், தயாரிப்பாளருமான உப்பலபதி கிருஷ்ணம் ராஜு (83), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 1940 ஜனவரி 20ம் தேதி பிறந்த உப்பலபதி கிருஷ்ணம் ராஜு, 1966ல் ‘சிலக்கா கோரிங்கா’ படத்தில் அறிமுகமானார். ஆரம்பத்தில் பத்திரிகையாளராக இருந்தார். தெலுங்கு படவுலகின் ‘ரெபெல் ஸ்டார்’ என்று ரசிகர்களால் அறியப்பட்ட அவர், கடந்த 56 வருடங்களில் பல மொழிகளில் 180க்கும் மேற்பட்ட … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ‘தேவுடு’வை தரிசிக்க 24 மணி நேரம் தவம்: ஒரே நாளில் ரூ.4.22 கோடி காணிக்கை

திருமலை,: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். சனிக்கிழமையான நேற்று முன்தினம் இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் 80,741 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 41,494 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் … Read more

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.5.38 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்!

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 5 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகரிகள் பறிமுதல் செய்தனர். சூடான் பயணி ஒருவரை சோதனை செய்தபோது அவர் அணிந்திருந்த பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெல்ட்டில் தலா ஒரு கிலோ மதிப்புள்ள 12 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அப்போது அவரை தப்புவிப்பதற்காக பயணிகள் 6 பேர் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியதையடுத்து அவர்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர். Source link