முதல்வர் ஹேமந்த் சோரன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – ஜார்கண்ட் பாஜக போர்க்கொடி

புதுடெல்லி: சுரங்க ஒதுக்கீடு தொடர்பான அரசு ஒப்பந்தத்தை தனக்கே ஒதுக்கீடு செய்ததற்காக, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை தகுதி நீக்க செய்ய வேண்டும் என ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில், முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனது பதவியை தவறாக பயன்படுத்தி, சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை தானே பெற்றுக் கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பாஜக., … Read more

ஜார்க்கண்டில் 'கூவத்தூர்' பார்முலா – ஆட்சியை தக்கவைக்க முதல்வர் சோரன் அதிரடி ப்ளான்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்கும் முயற்சியாக, அனைத்து எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைக்க, அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 81 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில், ஆளும் கூட்டணி அரசுக்கு, 49 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. இதில், ஜார்க்கண்ட் … Read more

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பொதுமக்கள் நலன் சார்ந்தது. அதன்மூலம் வெளிப்படை தன்மை அதிகரித்துள்ளது.  டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இலவசமாக இருப்பதன் மூலம் மக்கள் அதனை அதிகம் பயன்படுத்த முன்வருவார்கள். இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ … Read more

“ராகுலிடம் கெஞ்சுவோம், அழுத்தம் தருவோம்” – காங். தலைமைக்கு ‘பான் இந்தியா’ முகம் தேடும் கார்கே

புதுடெல்லி: “ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க நாங்கள் அழுத்தம் கொடுப்போம்” என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தல் செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் நடைபெற வேண்டிய நிலையில், தேர்தல் அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மீண்டும் ராகுல் காந்தி திரும்ப வேண்டும் என்று கட்சிக்குள் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜுன கார்கே, … Read more

ஜார்க்கண்டில் ஆட்சியை தக்கவைக்க தங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்கத் தொடங்கினார் முதல்வர் சிபு சோரன்

ராஞ்சி: ஜார்க்கண்டில் ஆட்சியை தக்கவைக்க தங்கள் கட்சி எம்எல்ஏக்களை முதல்வர் சிபு சோரன் பாதுகாக்கத் தொடங்கினார். ஜே.எம்.எம். கட்சி எம்எல்ஏக்கள் 3 பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்ட நிலையில் சொகுசு விடுதிகளில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

நடிகை சோனாலி போகட்டுக்கு போதை மருந்து கொடுத்து கொலை? – கோவாவில் உதவியாளர், நண்பர் கைது

பனாஜி: ஹரியாணாவைச் சேர்ந்தவர் சோனாலி போகட் (42). இவர் தூர்தர்ஷனில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன்பின் டி.வி., வெப் தொடர்களில் நடித்தார். மாடலாகவும் இருந்தார். 2020-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். மேலும், பாஜகவில் மகளிர் அணி முன்னாள் தேசிய துணைத் தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஹரியாணா தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் கடந்த 22-ம் … Read more

நடிகை சோனாலி போகத் மரணம்: உணவு விடுதி உரிமையாளர் உட்பட 2 பேர் கைது!

நடிகை சோனாலி வழக்கில் உணவு விடுதி உரிமையாளர் உட்பட மேலும் 2 பேரை கோவா போலீசார் கைது செய்துள்ளனர். கோவா மாநிலத்தில் நடிகை சோனாலி போகத் (வயது 42) மர்ம மரணம் அடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மகளிர் அணி முன்னாள் தேசிய துணை தலைவர், தேசிய செயல் குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ள அவர், 2019 ஆம் ஆண்டு நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் … Read more

புதிய கட்சி தொடங்கும் குலாம் நபி ஆசாத்: காங்.,அதிருப்தி குழு போடும் மற்றொரு ரகசிய திட்டம்

புதிய கட்சி தொடங்குவது குறித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி உள்ள குலாம் நபி ஆசாத் தனது ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்த பல காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத்துடன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட இந்த ஆதரவாளர்களுடன் குலாம் நபி ஆசாத் புது கட்சியை எப்போது அறிவிப்பது என்பது குறித்து தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். குலாம் … Read more

ஓய்வு பெற்றார் தலைமை நீதிபதி ரமணா – மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கண்ணீர் மல்க பிரியாவிடை

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 16 மாதங்கள் பணியாற்றிய என்.வி ரமணா நேற்று ஓய்வு பெற்றார். உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் விசாரணை நேற்று நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்தாண்டு ஏப்ரல் 24-ம்தேதி பதவி ஏற்றார். தலைமை நீதிபதியாக 16 மாதங்கள் பணியாற்றிய ரமணா நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதை முன்னிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் விசாரணை … Read more

வெளியூர் செல்லும் அரசு பேருந்துகளில் முதியோருக்கு இலவச பயணம்… தாத்தா, பாட்டி செம ஹேப்பி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆகஸ்ட் 26(வெள்ளிக்கிழமை) முதல் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து துறை துணை மேலாளர் ஷேகர் சென்னே கூறியுள்ளதாவது: மகாராஷ்டிரா மாநிலத்தில் மூத்த குடிமக்கள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் ஆகஸ்ட் 26 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு பிறகு வெளியூர் செல்ல ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்கள் … Read more