நடப்பாண்டில் நாட்டில் நெல் உற்பத்தி குறையும் என மத்திய அரசு தகவல்… காரணம் என்ன?

நாட்டின் கிழக்கு மாநிலங்களில் மழை குறைந்ததால் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் உற்பத்தி குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிக மழைப்பொழிவால் வெள்ளப்பெருக்கு உண்டான நிலையில், நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்வேறு மாநிலங்களில் மழைபொழிவு இந்த பருவமழை காலத்தில் இயல்பைவிட குறைவாகவே உள்ளதால் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் சத்தீஸ்கர் … Read more

ராணி 2ம் எலிசபெத் மறைவையடுத்து, கோகினூர் வைரத்தை மீட்டு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை

ராணி 2ம் எலிசபெத் மறைவையடுத்து, கோகினூர் வைரத்தை மீட்டு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில் 1905ம் ஆண்டில் சுமார் 3 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான கிரேட் ஸ்டார் ஆப் ஆப்பிரிக்கா வைரத்தை தென்னாப்பிரிக்காவில் இருந்தும், 1799ம் ஆண்டு திப்பு சுல்தானின் மோதிரம், 1800ம் ஆண்டில் எகிப்தில் இருந்து கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய காலத்தைய ரோசட்டா கல், கிரீஸ் நாட்டில் இருந்து 1803ம் ஆண்டில் எல்ஜின் மார்பிள்ஸ் ஆகியவை எடுத்து செல்லப்பட்ட தகவல் … Read more

கடத்தப்பட்ட 12 வயது மகள் – ’Taken’ திரைப்பட பாணியில் மீட்ட தினக்கூலி தொழிலாளி தந்தை

கடத்தப்பட்ட தனது மகளை ‘Taken’ திரைப்பட பாணியில் மீட்டுள்ளார் உத்தரபிரதேசத்தில் ஒரு தினக்கூலி தொழிலாளி தந்தை. மும்பையிலுள்ள புறநகர் பாந்த்ரா பகுதியைச் சேர்ந்தவர் ஷாஹித் கான்(24). இவர் ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவர் செப்டம்பர் 4ஆம் தேதி அதேப்பகுதியைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர் ஒருவரின் 12 வயது மகளை பக்கத்தில் குர்லாவிற்கு ஷாப்பிங் கூட்டிச்செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் குர்லாவிற்கு பதிலாக சூரத் பஸ் ஏறி, அங்கிருந்து டெல்லிக்கு ரயிலில் அழைத்துச் … Read more

ராணி மறைவு: இங்கிலாந்து பிரதமரை தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

புதுடெல்லி: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து, அந்நாட்டு பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸும் இன்று தொலைபேசியில் உரையாடியதாகவும், அப்போது, லிஸ் ட்ரஸ் பிரதமராக தேர்வானதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு முன் இங்கிலாந்தின் வர்த்தகத் துறை அமைச்சராகவும், வெளியுறவுத் துறை … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே மாதத்தில் அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் ரூ.140.34 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் முதல்முறையாக அதிகபட்சமாக ஒரே மாதத்தில் ஆகஸ்ட் மாதம் 140 கோடியே 34 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 22.22 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் 10 லட்சத்து 85 ஆயிரம் பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். ஆகஸ்ட் மாதம் மட்டும் கோயிலில் ஒன்றரை கோடி லட்டுகள் விற்கப்பட்டுள்ளன.   Source link

தெலங்கானா முதல்வரை திட்டி பேசியதால் அசாம் முதல்வரின் ‘மைக்’கை பிடுங்கிய டிஆர்எஸ் நிர்வாகி: பாதுகாப்பு குளறுபடி குறித்து உள்துறை கடிதம்

ஐதராபாத்: தெலங்கானா முதல்வரை திட்டி பேசியதால் அசாம் முதல்வரின் மைக்கை டிஆர்எஸ் நிர்வாகி பிடுங்கிய விவகாரம் குறித்து பதிலளிக்க உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. பாஜக தலைவரும், அசாம் முதல்வருமான ஹேமந்த் பிஸ்வா சர்மா, தெலங்கானா  மாநிலம் ஐதராபாத்தில் நடந்த பேரணியில் பங்கேற்றார். ‘இசட் பிளஸ்’  பாதுகாப்பு வளையத்தில் உள்ள அவர் மேடையில் பேச முயன்ற போது, ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) நிர்வாகி நந்து வியாஸ் என்பவர் மேடைக்கு சென்றார். முதல்வர் ஹேமந்த் பிஸ்வா … Read more

’காவல் அதிகாரி என்னை துன்புறுத்தியதே காரணம்’ – துணை உதவி காவல் ஆய்வாளர் விபரீத முடிவு!

காவல் அதிகாரி தன்னை துன்புறுத்தியதாக துணை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் ஹோஷியார்பூரில் உள்ள தாண்டா காவல் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 52 வயதான துணை உதவி ஆய்வாளர் சதீஷ் குமார், தாண்டா காவல் நிலையத்திற்கு பணிக்காக சென்றுள்ளார். அங்கு விசாரணை அறைக்குச் சென்ற அவர், தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, வீடியோ பதிவு மற்றும் தற்கொலை குறிப்பு … Read more

ஜார்க்கண்டில் கிராம மக்களே ஒன்று சேர்ந்து இரண்டு நாட்களில் கட்டிய பாலம்..!

ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் கிராம மக்களே ஒன்று சேர்ந்து இரண்டு நாட்களிலேயேமரப்பாலத்தை அமைத்து பாதையை உருவாக்கியுள்ளனர். போகசடம் கிராமத்தில் வசிக்கும் 200 பேர் தன்னார்வத்துடன் செயல்பட்டு 200 அடி நீளத்துக்கான பாலத்தை கட்டியுள்ளனர்.இதுகுறித்து பேசிய கிராம மக்கள், மழைக்காலங்களில் தங்களது கிராமம் தீவு போல் மாறிவிடும் என்றும் இங்கு வசிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், விவசாயிகள் வயலுக்கு போகவும், கால்நடை மேயக்கவும் சிரமப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இந்த பாலத்தை கட்டி முடிக்க 5 ஆயிரம் ரூபாய் வரை … Read more

மக்களவை, மாநில பேரவை தேர்தலுக்காக ஓரம்கட்டப்பட்ட ‘தலை’களுக்கு பாஜகவில் புதிய பதவிகள்: கேரளா, தெலங்கானாவுக்கு நிர்வாகிகள் நியமனம்..!

புதுடெல்லி: மக்களவை, மாநில பேரவை தேர்தலுக்காக பாஜகவில் ஓரம்கட்டப்பட்ட தலைவர்களுக்கு கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், குஜராத், இமாச்சல் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநில சட்டசபை தேர்தல் ஆகியன நடைபெற உள்ளதால், கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் பாஜக தலைமை இறங்கியுள்ளது. அந்த வகையில் கட்சிப் பதவியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட தலைவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா … Read more

“ராகுல் காந்தி முதலில் இந்திய வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும்” – அமித் ஷா

ஜெய்பூர்: காங்கிரஸ் முக்கியத் தலைவரான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை விமர்சித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ராகுல் முதலில் நாட்டின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாஜக பூத் அளவிலான நிர்வாகிகளிடம் பாஜகவின் முதன்மைத் தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர், “பாரத் ஜோடோ யாத்திரைச் செல்லும் ராகுல் காந்தி வெளிநாட்டு பிராண்ட் டி-ஷர்ட் அணிந்து கொண்டு யாத்திரை செல்கிறார். … Read more