காக்ரா – ஹாட் ஸ்பிரிங்கில் இருந்து இந்திய, சீன படைகள் 12ம் தேதிக்குள் வாபஸ்: வெளியுறவு அமைச்சகம் தகவல்
புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் காக்ரா – ஹாட் ஸ்பிரிங்கில் இருந்து 12ம் தேதிக்குள் இந்திய, சீன ராணுவம் திருப்பப் பெறப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. கிழக்கு லடாக்கில் சீனாவின் ராணுவம் ஊடுருவியதால் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட போர் பதற்றத்தை தணிப்பதற்காக, இருநாட்டு ராணுவமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கடந்த ஜூலையில் நடந்த 16ம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, காக்ரா-ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து … Read more