இந்திய ராணுவ முகாமில் பயங்கரவாத தாக்குதல்: மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம்

(கோப்பு புகைப்படம்) ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் எய்தினர். இந்திய நாட்டின் சுதந்திர தினம் எதிர்வரும் நிலையில் இந்திய ராணுவ முகாமிற்குள் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் தர்ஹால் என்ற பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினரின் ராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்நிலையில், ராணுவ முகாமின் எல்லையை கடந்து ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 2 பேர், திடீரென … Read more

நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு

நாட்டின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்று (ஆகஸ்ட் 10-ம் தேதியுடன்) நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு அடுத்த குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மேற்கு வங்க ஆளுநராக இருந்த … Read more

துணைக் குடியரசு தலைவராக பதவியேற்றார் ஜெகதீப் தன்கர்

குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் நாட்டின் 14ஆவது துணை குடியரசுத் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்றது. இதில், பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ராஜஸ்தான் ஆளுநருமான மார்கரெட் ஆல்வா போட்டியிட்டார். இதில், பாஜ கூட்டணி வேட்பாளர் … Read more

இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில்; அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்க கூடாது. அப்படி வழங்கினால் தேர்தல் ஆணையம் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதே சுழலில் ஆம் ஆத்மி உள்ளிட்ட சில … Read more

டெல்லியில் வேகமாக பரவும் கொரோனா! மாஸ்க் போடாதவர்களுக்கு ரூ.500 அபராதம்

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய அளவில் கொரோனா பரவல் விகிதம் இந்தியாவில் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் கொரோனா பரவல் விகிதம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் மட்டும் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 17,083 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தினமும் 2000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் … Read more

ஓய்வு பெற்றார் வெங்கய்ய நாயுடு – குடியரசு துணைத் தலைவராக தன்கர் இன்று பதவியேற்பு

புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்க உள்ளார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து குடியரசு துணைத் தலைவராக இருந்த வெங்கய்ய நாயுடு நேற்று மாநிலங்களவை அதிகாரிகளைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள மாநிலங்களவை அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்த அவர் சிறிது … Read more

இந்தியாவின் 14-வது குடியரசு துணைத்தலைவராக பதவியேற்றார் ஜெகதீப் தங்கர்…

டெல்லி : இந்தியாவின் 14-வது குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தங்கர் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்த திட்டம்

புதுடெல்லி: ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 டிசம்பரில் அடிக்கல் நாட்டினார். இதன் கட்டுமானப் பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ளதாகவும் வரும் நவம்பருக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் எனவும் மக்களவையில் அரசு கடந்த வாரம் தெரிவித்தது. இத்திட்டத்தின் தேசிய முக்கியவத்துவம் கருதி, கட்டுமானப் பணிக்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இத்திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் நேற்று கூறும்போது, … Read more

இலவசங்களும், சமூக நலத்திட்டங்களும் வெவ்வெறானவை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

டெல்லி: இலவசங்களும், சமூக நலத்திட்டங்களும் வெவ்வெறானவை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கருத்து தெரிவித்தார். ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் பின்னர் மாநில பொருளாதார நிலை என்ன என்பது பற்றி தெரியாது. மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தவறுகளை செய்யக் கூடாது என தெரிவித்தார்.

நைட் க்ளப்பில் பெண்ணிடம் பாலியல் தொல்லை -நண்பர்கள் மீது தாக்குதல்: பவுன்சர்கள் அட்டூழியம்

நைட் கிளப்புக்கு வந்த நண்பர்களை பவுன்சர்கள் தாக்கிய சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஹரியானா மாநிலம் குருக்ரம் மாவட்டத்தில் உள்ள நைட் க்ளப் ஒன்றுக்கு நண்பர்களாக சேர்ந்து ஒரு டீம் சென்றுள்ளது. அப்போது அந்த டீமில் இருந்த இளம்பெண் ஒருவரை அந்த க்ளப்பில் வேலை செய்து வரும் பவுன்சர்களில் ஒருவர் தவறாக தொட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நண்பர்கள் பவுன்சர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது நைட் க்ளப் மேலாளர் நண்பர்களாக வந்தவர்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பவுன்சர்கள் … Read more