எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது

டெல்லி: ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பணவீக்கம் உள்ளிட்டவைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இரண்டாவது நாளாக அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து இரு அவைகளும் இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவை தொடங்கிய முதல் நாளில் அரிசி … Read more

ஜீன்ஸ் போடக் கூடாது என்ற கணவருக்கு கத்திக்குத்து? – மருமகள் மீது மாமியார் பரபரப்பு புகார்!

ஜீன்ஸ் பேண்ட் போடக் கூடாது எனக் கூறியதற்காக தனது 18 வயது கணவனை 17 வயது மனைவி கொலை செய்துவிட்டதாக எழுந்த புகாரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்தாரா பகுதியில் அரங்கேறியிருக்கிறது. கணவன் மனைவி இடையேயான தகராறில் மூங்கில்கள் அடங்கிய குவியலில் விழுந்த அந்த நபர் கடந்த ஜூலை 16ம் தேதி இறந்ததாக தெரிய வந்திருக்கிறது என ஜம்தாரா பகுதி துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி ஆனந்த் ஜோதி மின்ஸ் கூறியுள்ளார். ஜார்க்கண்ட்டின் கோபல்புரா கிராமத்தைச் … Read more

தனுஷ்கோடி அருகே தவித்த அகதிகள்.. மீட்டு போலீசாரிடம் ஒப்படைப்பு..!

தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் வந்து இறங்கிய 7 இலங்கை அகதிகளை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ முடியாமல் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை பகுதியின் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் இன்று தனுஷ்கோடி கடல் பகுதியில் உள்ள 3-வது மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளனர். … Read more

அடைக்கலம் புகுந்த இளம்பெண் துன்புறுத்தல்.. கணவன் – மனைவி கைது..!

சென்னை, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜய். இவருடைய மனைவி சுருதி (22). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் விஜய் தன் மனைவி சுருதியை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து விசாரித்த எண்ணூர் போலீசார், விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சமீபத்தில் அவர் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார். கணவருடன் வாழ பிடிக்காத சுருதி, திருவொற்றியூர் என்.டி.ஓ. குப்பம் குடியிருப்பு ‘பி … Read more

கேரளாவில் 2-வதாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி

திருவனந்தபுரம்: கரோனா வைரஸ் தொற்று போல ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு உடலில் சிரங்கு மற்றும் காய்ச்சல், மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட் டது. இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர் தான். இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி … Read more

VP Election: துணை ஜனாதிபதி தேர்தல்: மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல்!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வா, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். நாட்டின் 13வது குடியரசுத் துணைத் தலைவராக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கையா நாயுடு பதவி வகிக்கிறார். இவரது பதவிக்காலம், வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக … Read more

அரியானா மாநிலம் மேவாட் பகுதியில் டி.எஸ்.பி. சுரேந்திர சிங் மீது மர்ம நபர்கள் லாரியை ஏற்றி கொன்றதால் பரபரப்பு

அரியான: அரியானா மாநிலம் மேவாட் பகுதியில் டி.எஸ்.பி. சுரேந்திர சிங் மீது மர்ம நபர்கள் லாரியை ஏற்றி கொன்றதால் பரபரப்பு நிலவி வருகிறது. மணல் கொள்ளை குறித்து விசாரிக்க சென்ற டிஎஸ்பி சுரேந்திர சிங்கை மர்ம நபர்கள் லாரி ஏற்றி கொலை செய்தனர்.

`இந்தியாவில் 200 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டாச்சு’- மத்திய சுகாதார அமைச்சகம்

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,528 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16,113 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தமாக இதுவரை 4,31,13,623 பேர் … Read more

ஜம்முவில் தவறுதலாக குண்டுவெடித்து ராணுவ கேப்டன் உட்பட 2 பேர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பஞ்ச் மாவட்டம் மெந்தார் பகுதியிலுள்ள ராணுவ முகாம் பகுதியில் ஏராளமான வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு மெந்தாரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (எல்ஓசி) வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ராணுவ வீரர்கள் கையாளும் கையெறி குண்டு தவறுதலாக வெடித்தது. இதில் ராணுவ கேப்டன் ஆனந்த், நயீப் சுபேதார் பகவான் சிங் ஆகியோர் உயிரிழந்தனர் என்று ஜம்முவில் உள்ள பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்தார். … Read more

நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசின் பதிலுக்காக காத்திருப்பதாக ஒன்றிய அரசு தகவல்!!

டெல்லி : தமிழக அரசின் நீட் மசோதாவை உள்துறை அமைச்சகம் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவைத்துள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.  நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஒன்றிய அரசின் இரண்டு துறை கருத்துக்களுக்கு தமிழக அரசின் பதிலுக்காக காத்திருப்பதாகவும், பதிலை தொடர்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் மக்களவையில் மதுரை எம்.பி வெங்கடேசன் கேள்விக்க  ஒன்றிய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதில் அளித்துள்ளார்.