'26/11 தாக்குதல் போல் மீண்டும் நடக்கும்' – மும்பை காவல்துறைக்கு பாகிஸ்தான் எண்ணிலிருந்து எச்சரிக்கை

மீண்டும் 26/11 போன்ற தாக்குதல் நிகழ்த்தப்படும் என்று மும்பை காவல்துறைக்கு வாட்ஸ் அப்பில் வந்த எச்சரிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஆயுதங்களுடன் ஒரு கப்பல் ராய்கட் பகுதியில் கரை ஒதுங்கி அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்நிலையில், இந்த வாட்ஸ் அப் எச்சரிக்கை வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராய்கட்டில் ஒதுங்கிய கப்பல்: மகாராஷ்டிராவின் ராய்காட் கடல் பகுதியை மர்ம படகு நேற்று நெருங்கியது. அந்த படகில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு … Read more

கலால் வரி கொள்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விளக்கம்

டெல்லி: டெல்லி அரசின் கலால் வரி கொள்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விளக்கமளித்தார். அடுத்த 3,4 நாட்களில் சிபிஐ என்னை கைது செய்யலாம்; அதற்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. கல்வித்துறையில் டெல்லி அரசின் சாதனைகள் உலகம் முழுவதும் பேசப்படுவதை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என கூறினார்.

ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள்.. ராகுல், பிரியங்கா மரியாதை..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்த நாள் விழா இன்று (20-ம் தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களைத் … Read more

பாலிசிதாரர்களுக்கு குட் நியூஸ்.. காலாவதியை புதுப்பிக்க புதிய திட்டம்..!

காலாவதியான பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறப்பு பாலிசி புதுப்பிப்பு திட்டத்தை, எல்.ஐ.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி) வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியான பாலிசிகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு பாலிசி புதுப்பிப்பு திட்டம், வரும் அக்டோபர் 21-ம் தேதி வரை அமலில் இருக்கும். மேலும், கடைசி பிரீமியம் செலுத்தி 5 ஆண்டுகள் … Read more

கேரளாவில் உள்ள ராகுல் காந்தி எம்.பி. அலுவலகத்தில் காந்தியின் படத்தை சேதப்படுத்திய 4 காங்கிரஸ் தொண்டர்கள் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி எம்.பி. அலுவலகத்தில் தேசத் தந்தை மாகாத்மா காந்தி படத்தை சேதப்படுத்தியதாக 4 காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றிபெற்றார். வயநாடு மாவட்ட தலைநகர் கல்பேட்டையில் ராகுலின் எம்.பி. அலுவலகம் செயல்படுகிறது. கடந்த ஜூன் 24-ம் தேதி ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் ராகுலின் எம்.பி. அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். … Read more

ஆட்சியை பிடிப்பது சுலபம், நாட்டை கட்டமைப்பது கடினம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: நாட்டின் 10 கோடி கிராமப்புற குடும்பங்கள் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வசதியை பெறுகிறார்கள் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். வீடுகள்தோறும் குடிநீர் குழாய்கள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு சுதந்திரம் அடைந்த ஏழுபது ஆண்டுகளில் நாட்டின் மூன்று கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் வசதி செய்யப்பட்டிருந்தது என்றும், 3 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 10 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் சென்றடைந்தற்கு காரணம் ‘ஜல் … Read more

செப். மாதம் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார் வங்கதேச பிரதமர்

டாக்கா: நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக அடுத்த மாதம் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியா வருகிறார். செப்டம்பர் 5ல் டெல்லியின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வர்த்தகம், எல்லை பிரச்சனை, ராணுவம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி பிரதமருடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.  

'டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதவி விலக வேண்டும்' – காங்கிரஸ் கடும் சீற்றம்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். டெல்லியில் மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 30 இடங்களில் 14 மணி நேரம் நடந்த இந்த சோதனை மாலை நிறைவடைந்தது. இந்த சோதனையில் கைப்பற்றபட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துக்கள் விவரங்கள் குறித்து எந்தத் தகவலும் … Read more

'மணிஷ் சிசோடியா பற்றி முழுநீள முதற்பக்க கட்டுரை முற்றிலும் நடுநிலையானது' – நியூயார்க் டைம்ஸ் விளக்கம்

மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, புதிய மதுபானக் கொள்கையை கடந்த ஆண்டு நவ.16-ல் அறிமுகப்படுத்தியது. அதன்படி, மதுபான மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. டெல்லி முழுவதும் 849 விற்பனை நிலையங்களில் சில்லறை … Read more

டேராடூனில் மேகவெடிப்பு… உறைய வைத்த அதிகாலை; அவசரமாய் ஓடிய மக்கள்!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அடுத்த சார்கெட் கிராமத்தில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் திடீரென மேகவெடிப்பு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர் மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. ஏற்கனவே நல்ல மழை பெய்து கொண்டிருக்கையில் மேகவெடிப்பு நிகழ்வு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விடாமல் கொட்டித் தீர்த்து வரும் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேகவெடிப்பு குறித்து தகவல் கிடைத்ததும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். சார்கெட் கிராமத்தில் சிக்கிக் … Read more