ஹைதராபாத்தில் அஜ்மீர் தர்கா மதபோதகர் கைது

ஜெய்ப்பூர்: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த, பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்யக் கோரி நாடு முழுவதிலும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அஜ்மீர் நிஜாம் கேட் பகுதியில் சுமார் 3 ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் தர்கா மதபோகர் சையது கோஹர் சிஸ்டி பேசினார். நுபுர் சர்மாவின் தலையை கொண்டு வருவோருக்கு தனது வீட்டை பரிசாக வழங்குவதாக அப்போது அவர் கூறினார். இது தொடர்பாக சிஸ்டி மீது தர்கா … Read more

இனி இரண்டாவது திருமணம் செய்ய அரசிடம் அனுமதி பெற வேண்டும் – எந்த மாநிலத்தில் தெரியுமா?

அனைத்து அரசு அதிகாரிகளும் தங்களது திருமண நிலை குறித்து தெரிவிக்கவும், தேவையான அனுமதி பெற்ற பின்னரே இரண்டாவது திருமணத்திற்கு தகுதி பெறவும் மாநில அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, இரண்டாவது திருமணம் செய்யத் திட்டமிடும் எந்தப் பணியாளரும் முதலில் தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வ விவாகரத்தைப் பெற்று, சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவிக்க வேண்டும். பணியாளரின் முதல் மனைவி அல்லது கணவன் எதிர்த்தால், இரண்டாவது மனைவி அல்லது கணவனுக்கு அரசு சலுகைகள் மறுக்கப்படும். இதற்கிடையில், அரசு ஊழியர் … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழா : பிரதமர் மோடியை நேரில் அழைக்க தமிழக எம்.பி.க்கள் டெல்லி பயணம்

சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க வரும் 19ம் தேதி பிரதமர் மோடியை அழைக்க தமிழக எம்.பிக்கள் டெல்லி செல்கின்றனர்.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில், 187 நாடுகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்கான தொடக்க விழா மிகப் பிரமாண்டமாக சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் … Read more

சரமாரியாக தாக்கிக் கொண்ட இளம்பெண், இளைஞர்.. டெல்லி மெட்ரோ ரயிலில் பரபரப்பு

டெல்லி மெட்ரோ ரயிலில் இளம் பெண் ஒருவரும், இளைஞரும் சரமாரியாக சண்டை போட்டுக்கொண்ட தேதி குறிப்பிடப்படாத காட்சி இணையத்தில் பரவி வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணித்த பெண் ஒருவர், தான் வாங்கிய ஆடையின் மதிப்பு ஆயிரம் ரூபாய் என தன்னுடன் பயணித்த ஆண் நண்பரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த ஆடை 150 ரூபாய்க் கூட மதிப்பு பெறாது என நண்பர் விமர்சித்துள்ளார். गर्लफ्रेंडने बॉयफ्रेंडला काढलं बुकलून, दिल्ली मेट्रोमधील व्हिडीओ व्हायरल pic.twitter.com/bO7BXnYFZ4— Mandar (@mandar199325) … Read more

‘என்னை கடத்தியது யாசின் மாலிக்’ – முன்னாள் முதல்வரின் மகள் வாக்குமூலம்

ஜம்மு: என்னை கடத்தியது யாசின் மாலிக் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமதுவின் மகள் ரூபியா ஜம்மு நீதிமன்றத்தில் நேற்று வாக்குமூலம் அளித்தார். காஷ்மீரை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் முப்தி முகமது. காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கடந்த 1989-ம் ஆண்டு அவர் மத்திய அமைச்சராக பதவி வகித்தார். அந்த ஆண்டில் டிசம்பர் 8-ம் தேதி முப்தி முகமதுவின் மகள் ரூபியாவை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அவரை … Read more

இலவச பொருட்களை வழங்கும் கலாசாரம் வளர்ச்சிக்கு ஆபத்து – பிரதமர் மோடி

ஓட்டுகளை பெறுவதற்காக இலவச பொருட்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்து என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில், புதிதாக நான்கு வழி விரைவுச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி இந்த சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. சுமார் 14 … Read more

தந்தையை தாக்கிய இளைஞரை பழிவாங்க துப்பாக்கிச்சூடு: குண்டடிப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: டெல்லியில் தந்தையை அடித்த இளைஞரை 7 மாதங்களுக்கு பிறகு துப்பாக்கியால் சுட்டு சிறுவன் பழி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி ஜஹாங்கிபூாில் உள்ள H4 பிளாக்கில் வசித்து வருபவர் ஜாவித். இவர் தனது குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்காவிற்கு அருகே அமர்ந்துக் கொண்டிருந்தாா். அப்போது, 4 சிறுவர்கள் அவருக்கு அருகில் வந்துள்ளனர். திடீரென ஒரு சிறுவன் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து ஜாவத் முகத்திற்கு நேராக குறிபார்த்து சுட்டார். மறுநொடியே 4 … Read more

கர்நாடகா: தொடர் மழை எதிரொலி – பால்போல் பொங்கி வழியும் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி

கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியில் பால்போல் நுரை பொங்கி வழிகிறது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக மண்டியா மாவட்டத்தில் உள்ள கேஆர்எஸ் அணை நிரம்பி வருகிறது. அதேபோல், மைசூர் மாவட்டம் கபினி அணையிலும் நீர் நிரம்பி வருகிறது. இந்த இரு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடந்த இரண்டு நாட்களாக ஒரு லட்சம் கன அடிக்கு மேலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், கேஆர்எஸ் அணையில் … Read more

நாடு முழுவதும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

புதுடெல்லி: பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கு, கரோனா பூஸ்டர் தடுப்பூ சியை இலவசமாக செலுத்தும் பணி நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. நாடு விடுதலை அடைந்து 75-ம் ஆண்டு நிறைவதையொட்டி, நாடு முழுவதும் உள்ள அரசு கரோனா தடுப்பூசி மையங்களில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேற்று முதல் 75 நாட்களுக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவமாக செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அமைச்சர் தொடங்கினார் அதன்படி இந்த கரோனா தடுப்பூசி முகாமை டெல்லியில் உள்ள நிர்மன் பவனில் … Read more

குடியரசு தலைவர் தேர்தல்: யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு!

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு, ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் 21 … Read more