பாகிஸ்தான் பத்திரிகையாளர் நுஸ்ரத் மிர்சாவை அழைக்கவில்லை – அன்சாரி மீண்டும் திட்டவட்டம்

புதுடெல்லி: பாகிஸ்தான் பத்திரிகையாளர் நுஸ்ரத் மிர்சாவை 2010-ம் ஆண்டு தீவிரவாதம் குறித்த எந்த மாநாட்டிற்கும் அழைத்ததில்லை என முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி மீண்டும் கூறியுள்ளார். ஈரான் தூதராக ஹமீத் அன்சாரி பணியாற்றிய காலத்தில் உளவு வேலை பார்த்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் நுஸ்ரத் மிர்சா குற்றம் சாட்டினார். மேலும், ஹமீத் அன்சாரி குடியரசுத் துணைத் தலைவராக இருந்தபோது, அவரது அழைப்பில் பேரில், டெல்லியில் நடந்த தீவிரவாதம் குறித்த மாநாட்டில் பங்கேற்க தான் இந்தியா வந்ததாகவும், … Read more

கேரளாவில் நெய்யாறு பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து: மாணவி படுகாயம்

திருவனந்தபுரம்: கேரளாவில் நெய்யாறு பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்த மாணவி நிலைத்தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார். இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் பேருந்து  இடித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது. படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி அலிப்பூரில் குடோனின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி அலிப்பூரில் குடோனின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் இருந்து 10 பேர் மீட்கப்பட்ட நிலையில் வேறு யாரும் சிக்கியுள்ளனரா என தேடும் பணியில் தீவிரமாக உள்ளனர்.

சர்ச்சைக்குரிய ட்விட்டர் விவகாரம்: ஆல்ட் நியூஸ் பத்திரிக்கை நிறுவனர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது டெல்லி அமர்வு நீதிமன்றம்..!!

டெல்லி: ஆல்ட் நியூஸ் பத்திரிக்கை நிறுவனர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி டெல்லி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.50,000 ரொக்க ஜாமின் அடிப்படையில் முகமது ஜுபைரை டெல்லி அமர்வு நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார். சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவுக்காக பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் மீது உ.பி., டெல்லியில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுட சுட எண்ணெய்யை மகளின் அந்தரங்க பாகத்தில் ஊற்றிய உ.பி., பெண்: பயங்கர சம்பவத்தின் பின்னணி

6 வயது பெண் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய கோர சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது. லக்னோவைச் சேர்ந்தவர்கள் பூனம் – அஜய் குமார் என்ற தம்பதிக்கு திருமணமானதிலிருந்து குழந்தை இல்லாததால் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை ஒன்றை அஜய் குமார் தத்தெடுத்திருக்கிறார். ஆனால், அஜய் குழந்தையை தத்தெடுத்தது பூனமிற்கு பிடிக்காததால் அந்த 6 வயது பெண் குழந்தை மீது தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருக்கிறார். இப்படி இருக்கையில், கடந்த புதனன்று … Read more

நாடாளுமன்றத்தில் போராட்டங்கள் நடத்த தடை – எதிர்க்கட்சிகளுக்கு அடுத்த ஷாக்!

நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை அடுத்து, நாடாளுமன்ற இரண்டு அவைகளிலும், உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புதிய பட்டியல் நேற்று முன்தினம் (ஜூலை 13) வெளியிடப்பட்டது. இதில், நாடகம், வாய்ஜாலம், ஊழல், ஒட்டுக்கேட்பு, திறமையற்றவர், சர்வாதிகாரம், சகுனி உள்ளிட்ட பல வார்த்தைகள் அடங்கி … Read more

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 1,10,320ல் இருந்து 1,12,320 கனஅடியாக உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் 80,320 கனஅடி, கபினியில் 32,000 கனஅடி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

பிட்புல் நாய்கள் ஏன் ஆபத்தானவை? நிபுணர்களின் பகீர் எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் 82 வயது மூதாட்டியை பிட்புல் கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிட்புல் நாய்கள் ஏன் ஆபத்தானவையாக மாறுகின்றன என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பொதுவாகவே, 1980-கள் வரை இந்தியாவில் நாட்டு இன நாய்களே அதிக அளவில் வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்தன. எஜமானர்களுக்கு விசுவாசமாகவும் அதே சமயத்தில் எஜமானரின் குடும்பத்தையும், வீட்டையும் துணிச்சலாக பாதுகாக்கும் காவலாளியாகவும் நாட்டு நாய்கள் விளங்கியதால் ஏழைகள் முதல் செல்வந்தர்கள் வரை அவரவர் வசதிக்கேற்ப பல … Read more

சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு – அய்யப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்!

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ளது, சபரிமலை அய்யப்பன் கோவில். இந்தக் கோவில், உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர். கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது, நோய்த் தொற்று குறைந்துள்ளதால், தளர்வுகளும் அளிக்கப்பட்டு உள்ளன. … Read more

பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு.!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு அளித்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக பழங்குடியினப் பெண் ஒருவர் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்க உள்ளார் என்று அக்கட்சியின் தலைவர் சிபுசோரன் கூறியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வைக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் இந்த முடிவு காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Source link