பல்கலைக்கழக விழாவில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றதை அரசியலாக்க வேண்டாம்: தமிழிசை பேட்டி

புதுச்சேரி: பல்கலைக்கழக விழாவில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றதை அரசியலாக்க வேண்டாம் என தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்தார். புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாணவர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தவே மதுரை காமராஜர் பல்கலை விழாவில் எல்.முருகன் பங்கேற்றார். பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவதே ஆளுநர்களுக்கு வேந்தர் பதவி வழங்கப்படுவதாக தமிழிசை கூறினார்.

அண்ணாமலை – உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு..!

முன்னாள் அமைச்சர் ஐசரி வேலன் மனைவியும், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தாயாருமான புஷ்பா நேற்று காலமானார். அவருடைய உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று புஷ்பா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்படி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார். அப்போது, திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி … Read more

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் தமிழர் மரணம்..?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றிரவு சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் (64) என்பவர் உயிரிழந்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி அவர் உயிரிழந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்க, வரிசையில் உள்ள கழிவறையில் உயிரிழந்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட சொற்கள் பட்டியல் வெளியீடு: எதிர்க்கட்சிகள் புகாருக்கு சபாநாயகர் விளக்கம்

புதுடெல்லி: நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எம்.பி.க்களின் உரைகளில் தடை செய்யப்பட்ட புதிய சொற்களின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜுலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் புதிய குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோருக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், மக்களவை செயலகம் சார்பில், ‘தடை செய்யப்பட்ட சொற்கள் 2021’என்ற … Read more

பிரதமர் மோடியை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள் – 6 பேரிடம் தீவிர விசாரணை..!

கடந்த 12 ஆம் தேதி பாட்னா சென்ற பிரதமர் மோடியை குறிவைத்த தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தீவிரவாத செயல்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டியதாகவும் பீகார் போலீசார் ஆறு பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாட்னா வந்த பிரதமர் மோடியை குறிவைத்தது அம்பலமாகியுள்ளது. உள்ளூர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து கத்திகளையும் வாள்களையும் பயன்படுத்தி மதக்கலவரத்தை தூண்ட பயிற்சி அளித்து வந்ததாகவும் அந்த ஆறு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. … Read more

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உடல் நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிரதமர் மோடி பேசினார்.

82 வயது மூதாட்டியை கடித்தே கொன்ற பிட்புல் நாய் – உ.பி.யில் பயங்கரம்

உத்தரபிரதேசத்தில் 82 வயது மூதாட்டியை பிட்புல் வகை நாய் கடித்து குதறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேரந்தவர் அமித். அங்குள்ள பல ஜிம்களில் பயிற்சியாளராக இவர் வேலை செய்து வருகிறார். அமித் தனது வீட்டில் பிட்புல் வகை நாயை வளர்த்து வந்தார். மிகவும் ஆபத்தானதாக அறியப்படும் இந்த பிட்புல் நாயை வீட்டில் வைத்து வளர்க்க வேண்டாம் என அக்கம்பக்கத்தினர் கூறிய போதிலும் அதனை அமித் கேட்கவில்லை. இதனிடையே, கடந்த 12-ம் தேதியன்று காலை … Read more

பள்ளி மாணவா்கள் இவைகளை அணிந்து வரத் தடை.. நிபந்தனைகளை விதித்த அரசு !!

பள்ளி மாணவா்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது என சமூக பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் கைகளில் சாதி கயிறு கட்டிக்கொண்டு வருகின்றனர். தலைமுடியை நீளமாக வளர்க்கின்றனர் போன்ற புகார்கள் உள்ளன. இதனால் மாணவர்கள் ஒழுக்கம் தவறுவதுடன் கல்வி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது. இது தொடா்பாக, சமூக பாதுகாப்பு துறை சாா்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவ, மாணவிகள் … Read more

இது என்ன கொடுமை? அரிசிக்கு 5% ஜிஎஸ்டியா !

அரிசி, தானியங்களுக்கு 5 % ஜிஎஸ்டி விதிப்பை கண்டித்து அரிசி ஆலைகள், அரிசி மொத்த, சில்லறை விற்பனையாளா்கள் போராட்டம் அறிவித்துள்ளனா். இதுகுறித்து, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் நெல் அரிசி வணிகா் சங்கங்களின் சம்மேளன மாநில தலைவா் டி.துளசிலிங்கம் கூறியது, பஞ்சாப் மாநிலம், சண்டீகா் நகரில் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்ட பிராண்டுக்கு மட்டுமே … Read more

பிஹாரில் பிரதமர் மோடியை கொல்ல சதி; 3 தீவிரவாதிகள் கைது: 26 பேர் மீது வழக்கு

பாட்னா: பிரதமர் மோடி கடந்த 12-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னா சென்றார். மாநில சட்டப்பேரவையின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பிரதமரை கொலை செய்ய சதித் தீட்டம் தீட்டியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உளவுத் துறை அளித்த தகவலின்படி, கடந்த 11-ம் தேதி மாலை பாட்னாவின் நயா டோலா பகுதியில் பாட்னா போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அங்கு முகமது ஜலாலுதீன், அக்தர் பர்வேஸ் ஆகிய 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதில் அக்தர் பர்வேஸ், … Read more