ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குட்டி யானை.. மீட்டதோடு பழங்கள் கொடுத்து பசியாற்றிய பொதுமக்கள்
கர்நாடகாவில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை பொதுமக்கள் மீட்டு உணவு வழங்கினர். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஏரி, குளம், குட்டை என அனைத்தும் நிரம்பி வழிகிறது. மேலும் தண்ணீர் எங்கும் பெருக்கெடுத்து ஓடுவதால் வயல்வெளிகள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மஞ்சள்ளி பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் ஒரு குட்டி யானை சிக்கிக் கொண்டது. இதையறிந்த … Read more