முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அமைச்சரவையில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

பீகார்: முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அமைச்சரவையில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். ஏற்கனவே துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்ற நிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி டெல்லியில் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் நரேந்திர் மோடி, அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் சதைவ் அடல் என்ற வாஜ்பாயின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். வாஜ்பாய் 10 அரிய தகவல்கள்: அடல் பிஹாரி வாஜ்பாய், மத்தியப் பிரதேச மாநிலம் … Read more

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 2-வது நாளாக குறைப்பு

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 2-வது நாளாக 6,159 கன அடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் 2,159 கன அடி, கபினி அணையில் 4,000 கன அடிநீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை இடைநீக்கம் செய்த FIFA – காரணம் என்ன?

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை இடைநீக்கம் செய்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது. இந்திய கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடைபெறாமல் இருப்பதாகவும், பதவிக் காலம் முடிந்த பின்னரும் தலைமை பொறுப்பில் PRAFUL PATEL தொடர்கிறார் என இந்திய கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்க குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் எனவும், இந்தநிலை தொடர்ந்தால் மூன்றாம் நபர்கள் தலையீடு … Read more

தேசிய கீதத்தை பாடிய அகதிகள்

புதுடெல்லி: பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த 12 அகதிகள், கிராமி விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் உடன் இணைந்து தேசிய கீதத்தை பாடியுள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி இந்தியர்கள் பல்வேறு வகைகளில் தங்களது தேச பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த 12 அகதிகள் தங்களது இந்திய நேசத்தை தேசிய கீதத்தை பாடி வெளிப்படுத்தி உள்ளனர். மியான்மரை சேர்ந்த ஆரா ரெம் மாவி, லென் நுயாம், விக்டர், மரியா, … Read more

பாரத் ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம்; பிரதமர், குடியரசுத் தலைவர் அஞ்சலி

  பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் நான்காவது நினைவு தினம் இன்று. முன்னாள் பிரதமரான வாஜ்பாய் கடந்த 2018 ஆகஸ்ட் 16-ம் தேதி தனது 93-வது வயதில் மரணமடைந்தார்.   நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்தவர் அடல் பிஹாரி வாய்பாய். அடல் பிஹாரி வாஜ்பாய் 1996-ம் ஆண்டு 13 நாட்கள் பிரதமராகவும், 1998-99 ஆம் ஆண்டில் 13 மாதங்கள் பிரதமராகவும் பதவி வகித்தார். அதன் பின் 1999 முதல் 2004 வரை முழுமையாக 5 … Read more

பில்கீஸ் பானோ பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிப்பு: குஜராத் அரசின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்…

காந்திநகர் : நாட்டையே உலுக்கிய பில்கீஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் 11 பேரையும் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. இதற்கு ராஜ்ய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இதில், தாகோடு மாவட்டம் ராந்திப்பூர் கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணான பில்கீஸ் பானோ என்ற 5 மாத கர்பிணி கூட்டு பாலியல் … Read more

பூமியிலிருந்து 30 கி.மீ. உயரத்தில் பறந்த தேசிய கொடி

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி பூமியில் இருந்து 30 கி.மீ. உயரத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதை ஏற்று நாடு முழுவதும் குடிசை முதல் கோபுரங்கள் வரை தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு ஒரு படி மேலே சென்று பூமியில் இருந்து 30 கி.மீ. உயரத்தில் தேசிய கொடியை பறக்க … Read more

மோகன் பகவத் பேச்சு: மக்களிடம் தேசபக்தியை வளர்த்தது ஆர்எஸ்எஸ்

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நேற்று கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், ‘‘அமைதி என்ற செய்தியை இந்தியா உலகுக்கு வழங்கும். இந்த நாடோ அல்லது சமூகமோ எனக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு மாறாக நாட்டுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சிந்தித்து பாருங்கள். சுதந்திரமாக இருக்க விரும்புவோர் எல்லாவற்றிலும் தன்னிறைவு பெறவேண்டும். தேசப்பக்தி குறித்த … Read more

சுதந்திர தின விழா | டெலிபிராம்டர் இல்லாமல் 83 நிமிடம் உரையாற்றிய பிரதமர்

புதுடெல்லி: சுதந்திர தின அமுதப் பெருவிழா, தலைநகர் டெல்லியில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க, 5 உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், கடந்த 2014-ம் ஆண்டு நாட்டை வழிநடத்தும் பொறுப்பை மக்கள் என்னிடம் வழங்கினர். விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு அதிகாரமும் அவர்கள் வாழ்வில் முன்னேற்றமும் கிடைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் … Read more