டோல்கேட் ஊழியர் கன்னம் ‘பழுத்தது’: கிரேட் காளி ஆக்ரோஷம்

சண்டிகர்: பஞ்சாப்பில் டோல்கேட் ஊழியர் கன்னத்தில் மல்யுத்த வீரர் காளி அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தாலிப் சிங் ரானா எனப்படும், ‘கிரேட் காளி’ என்ற மல்யுத்த வீரர், பஞ்சாபின் ஜலந்தரில் இருந்து அரியானாவில் உள்ள கர்னாலுக்கு நேற்று காரில் சென்றார். அப்போது, லோதோவால் டோல்கேட்டில் காளியின் வாகனத்தை நிறுத்திய ஊழியர்கள், கட்டணம் கேட்டனர். அதற்கு அவர், ‘நான் பிரபல மல்யுத்த வீரர்’ என கூறியுள்ளார். அவர்கள் அவரது அடையாள அட்டையை … Read more

முதலாவது ஐ2யு2 மாநாடு: காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்கிறார்

புதுடெல்லி: முதலாவது இந்தியா- இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா (ஐ2யு2) காணொலி மாநாடு வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இஸ்ரேல் பிரதமர் யாகிர் லாபிட், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் ஐ2யு2 வகுத்துள்ள வரம்பிற்குள் மேற்கொள்ளக்கூடிய திட்டப் பணிகள் மற்றும் உறுப்பு நாடுகளின் பொதுவான நலத் திட்டப் பணிகள் … Read more

ஜனாதிபதி தேர்தலில் திருப்பம் பாஜ வேட்பாளர் முர்முவுக்கு தெலுங்கு தேசம் திடீர் ஆதரவு: நட்புக்கரம் நீட்டுகிறார் சந்திரபாபு

திருமலை: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனாதிபதி தேர்தலில் பாஜ வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு திடீரென ஆதரவு அளித்துள்ளார். கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி இருந்தது. ஒன்றிய அரசிலும் தெலுங்கு தேசம் அமைச்சர்கள் இடம் பெற்றனர். பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் மிக நெருக்கமாக இருந்த சந்திர பாபு, பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கூட்டணியில் இருந்து விலகினார். நாடாளுமன்றத்தில் மோடிக்கு எதிராக … Read more

கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது ஆகஸ்ட் 18-ல் விசாரணை

புதுடெல்லி: ஆகஸ்ட் 18-ம் தேதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது. கடந்த 2011-ல் ப. சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, 263 சீனர்களுக்கு கார்த்தி சிதம்பரம் முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாகப் புகார் எழுந்தது. இதற்காக அவர் ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், கார்த்தி … Read more

நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த பிரமாண்ட தேசிய சின்னத்தில் ஆக்ரோஷமான சிங்கங்கள்: பழைய சிங்கம் போல் இல்லை; எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த தேசிய சின்னத்தில் ஆக்ரோஷமான சிங்கங்கள் இடம் பெற்றிருப்பதாகவும், இது தேசிய சின்னத்தையே சிதைப்பதாக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. டெல்லியில் ரூ.1,250 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில், 9,500 கிலோ எடை கொண்ட 20 அடி உயர பிரமாண்ட வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து பல்வேறு … Read more

கேரளாவில் முதல்முறை ஓணம் பம்பர் லாட்டரி முதல் பரிசு ரூ.25 கோடி: டிக்கெட் விலை ரூ.500

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம், சித்திரை விஷு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உட்பட பண்டிகைகளை முன்னிட்டு பம்பர் லாட்டரி பரிசு அறிவிக்கப்படுவது வழக்கம். கடந்த 3 வருடங்களாக ஓணம் பம்பர் முதல் பரிசு ரூ. 12 கோடியாக இருந்தது. இந்நிலையில், இந்த வருடம் பரிசுத்தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, முதல் பரிசாக ரூ.25 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2வது பரிசாக ரூ.5 கோடியும், மூன்றாவது பரிசாக 10 பேருக்கு ரூ.1 கோடியும் கிடைக்கும். டிக்கெட் விலை ரூ.500 ஆக … Read more

பிரிட்ஜில் வைக்கப்படும் கறி, மீனில் 30 நாள் கொரோனா இருக்கும்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பல்வேறு விதமாக உருமாற்றம் அடைந்து உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆய்விலும் ஒவ்வொரு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி, ‘அப்ளைடு அண்ட் என்விரான்மென்டல் மைக்ரோபயாலஜி’ இதழில் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், வீடுகள், கடைகளில் பயன்படுத்தப்படும் பிரிட்ஜ், பிரீசர்களில் வைத்து பாதுகாக்கப்படும் இறைச்சி, மீன்களில் 30 நாட்கள் வரையில் கொரோனா வைரஸ் உயிர் வாழும்,’ என்ற அதிர்ச்சி … Read more

திருப்பதி பிரமோற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி; செப். 27ல் தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது

திருமலை: திருப்பதியில் செப்டம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரமோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. பின்னர் சுப்பா ரெட்டி அளித்த பேட்டி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மிக பிரமாண்டமாக பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசிப்பார்கள். ஆனால், கொரோனாவால் கடந்த … Read more

குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்.!

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் வெளிநாட்டில் இருந்து அண்மையில் வந்த கன்டெய்னரில் இருந்து சுமார் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை தீவிரவாத தடுப்பு படையினர் கைப்பற்றினார்கள். கன்டெய்னரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 70 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே முந்த்ரா துறைமுகத்தில் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. Source link

கடந்த 6 மாதத்தில் மட்டும் ஒன்றிய துறைகள் மீது 5.59 லட்சம் புகார்கள்; நிதித் துறை முதலிடம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளுக்கு எதிராக கடந்த 6 மாதங்களில் மட்டும் 5.59 லட்சம் புகார்கள் வந்துள்ளன. இதில், 5,32,662 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒன்றிய அரசு துறைகளுக்கு எதிராக பொதுமக்கள் தங்களின் குறைகள், புகார்களை ஆன்லைன் மூலமாக,  ‘பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு’ அமைப்பில்  தெரிவிக்கலாம். இந்த புகார்கள் துறைகள் வாரியாக பிரிக்கப்பட்டு, அவற்றின் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, குறைகள் தீர்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் ஜனவரி முதல் கடந்த மாதம் 25ம் … Read more