ராணுவத் தேர்வில் சாதியப் பாகுபாடு – பதிலளித்த ராஜ்நாத் சிங்!

செவ்வாயன்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங், ஜாதி மற்றும் மதச் சான்றிதழ்களை இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு விண்ணப்பத்தில் கேட்பதாக குற்றம் சாட்டினார். இது உண்மையல்ல என ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். “இது வெறும் வதந்தி. முந்தைய முறை, சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இருந்து நடந்து வருகிறது. எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, பழைய முறை தொடர்கிறது,” என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். ஜாதி மற்றும் மதச் சான்றிதழ்களைக் கேட்கும் ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தின் ஒரு பகுதி … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாத அங்கப்பிரதட்சண டோக்கன் நாளை வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஆன்லைனில் நாளை வெளியிடப்பட உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்யவரும் பக்தர்கள் அதிகாலையில் அங்கபிரதட்சணம் செய்வது வழக்கம். இதற்காக  தனிகவுன்டரில் டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த டிக்கெட்டுகளை முந்தைய நாளில் பெறும் பக்தர்கள், மறுநாள் அதிகாலை 2 மணியளவில் சுவாமியை தரிசிப்பார்கள். ஆண்கள் வேட்டி மற்றும் துண்டு அணிந்தும், பெண்கள் மேலாடையுடன் கூடிய சுடிதார் அல்லது புடவையிலும் அனுமதிக்கப்படுவர். ஆண், பெண்கள் தனித்தனி குழுவாக அங்கபிரதட்சணம் செய்து … Read more

நுபுர் சர்மாவை கொலை செய்ய திட்டம்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய நபர் கைது

ராஜஸ்தான்: பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மாவை கொலை செய்ய திட்டமிட்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியா ஊடுருவிய நபர் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில், முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். நுபுர் சர்மா இறைதூதர் நபிகள் பற்றி பேசிய கருத்தை ஆதரித்து டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நவீன்குமார் ஜிண்டால் தனது ட்விட்டரில் ஒரு கருத்தைப் … Read more

மாணவிகளின் உள்ளாடையை கழற்றிய பின் “நீட்” தேர்வு எழுத அனுமதித்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – கேரள போலீசார்

கேரளா மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற நீட் தேர்வின் போது மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளை உள்ளாடையை அகற்றிய பின் தேர்வு எழுத அனுமதித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தேசிய தேர்வு முகமை சார்பில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவினர் கொல்லத்தில் விசாரணை நடத்த … Read more

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் 7 லஷ்கர் தீவிரவாதிகள் கைது: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு: இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள ரஜோரியில் 7 லஷ்கர் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரியின் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை ேசர்ந்த 7 தீவிரவாதிகளை காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். இத்தகவலை ஜம்மு பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் (ஏடிஜிபி) முகேஷ் சிங் தெரிவித்துள்ளார். ஏடிஜிபி அளித்த தகவலின்படி, கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து … Read more

டெல்லியில் உள்ள 3 அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து

டெல்லியில் நியூ அசோக் நகர் பகுதியில் உள்ள 3 அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்ட 12 பேரை மீட்புக்குழுவினர் மீட்ட நிலையில், ஒரு சிலருக்கு மட்டும் தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் முதல் தளத்தில் பற்றிய தீ மளமளவென கட்டிடம் முழுவதற்கும் பரவிய நிலையில் அப்பகுதியில் கரும்புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. … Read more

பயணிகளின் உயிரில் விளையாடும் விமான நிறுவனங்கள் ‘ஸ்பாட் செக்கிங்’கில் திடுக்கிடும் தகவல் அம்பலம்: ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: விமானங்கள் அடிக்கடி தரையிறக்கப்படுவதால் எழுந்த புகாரையடுத்து, விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஸ்பாட் செக்கிங் செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளது.இந்திய விமான நிறுவனங்களின் விமானங்கள் அவசரமாக தரையிறங்கும் சம்பங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. அதுவும் கடந்த சில வாரங்களாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப காரணங்கள் என்று கூறப்பட்டாலும், விமான நிறுவனங்களின் தொழில்நுட்ப அலட்சியம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிற்றுக் கிழமை இண்டிகோவின் ஷார்ஜா – ஐதராபாத் விமானம் தொழில்நுட்ப … Read more

நீட் விலக்கு: தமிழக அரசு கோரிக்கைக்கு மத்திய அரசு சொன்ன பதில் என்ன தெரியுமா?

இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு சார்பில் எம்.பி. சு.வெங்கடேசன் எழுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்த கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அந்த பதிலின்படி, மத்திய அரசு தமிழக அரசின் கடிதத்தை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவிட்டதாகவும் – அவர்கள் மூலமாக உரிய பதிலை தமிழ்நாடு அரசுக்கு வழங்கிவிட்டதாகவும் தெரிகிறது. மேற்கொண்டு தாங்கள் அளித்துள்ள பதில் மீதான தமிழக அரசின் மறு பதிலுக்காக மத்திய அரசு காத்திருப்பதாக தெரிகிறது. மக்களவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு … Read more

‘கடமை தவறிய இந்திர பகவான் மீது நடவடிக்கை எடுங்கள்’ – கவனம் ஈர்த்த உ.பி. விவசாயியின் புகார் மனு

லக்னோ: ‘சரியான மழை பெய்யாத காரணத்தினால், தனது கடமையை சரியாக செய்யாத மழைக் கடவுளான இந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரப் பிரதேச விவசாயி ஒருவர் புகார் கொடுத்துள்ளார். தன் கடமையைச் செய்யாத கடவுளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் உள்ள ஜகலா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுமித் குமார் யாதவ். இவர் … Read more

வரும் நவம்பர், டிசம்பர் வாக்கில் நடைபெறும் குஜராத், இமாச்சல் தேர்தலுடன் ஜம்மு-காஷ்மீருக்கு தேர்தல்: தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி: வரும் நவம்பர், டிசம்பர் வாக்கில் நடைபெறும் குஜராத், இமாச்சல் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுடன் ஜம்மு-காஷ்மீருக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய  அரசு ரத்து செய்தது. அதன் பின்னர் மாநிலத்தில் எந்த தேர்தலும்  நடைபெறவில்லை. ஆளுநர் தலைமையிலான அரசுதான் செயல்பட்டு வருகிறது. ஜம்மு –  காஷ்மீரின் எல்லை மறுவரையறை பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாக தலைமை  தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. … Read more