ஜனாதிபதி தேர்தல் வாக்கு சேகரிக்க யஷ்வந்த் சின்கா கேரளா வருகை; மு.க.ஸ்டாலினுடன் நாளை சந்திப்பு

திருவனந்தபுரம்: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்கா வாக்கு சேகரிப்பதற்காக திருவனந்தபுரம் வந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். 2 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டனர். இந்த நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா இன்று முதல் தென் … Read more

கரோனா தடுப்பில் தீவிர நடவடிக்கை தேவை: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் பலவகையானப் பண்டிகைகள் மற்றும் யாத்திரைகள் தொடங்கவுள்ள நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோவிட்-19 தொற்று கணிசமான அளவு குறைந்திருந்தது. தற்போது ஒருசில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்று … Read more

OH MY GOD..! பல் தேய்க்காமல் முத்தம் – மனைவியை குத்தி கொன்ற கணவன்!

பற்களை தேய்க்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில், மனைவியை கணவன் குத்திக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு, தீபிகா என்ற மனைவியும், இரண்டரை வயதில் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் பணிபுரியும் அவினாஷ், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க, பாலக்காட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, அவினாஷ் தூங்கி எழுந்ததும், தனது குழந்தைக்கு முத்தம் கொடுத்துள்ளார். … Read more

புதுச்சேரி முதலமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் தொடர் போராட்டம் வாபஸ்..

புதுச்சேரியில், முதலமைச்சர் ரங்கசாமியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து கழக பணியாளர்களின் தொடர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பணி பாதுகாப்பு வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 23-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள், போக்குவரத்துத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முதலமைச்சருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுமென உறுதியளிக்கப்பட்டது. Source link

அதிமுக பொதுக்குழு குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் நத்தம்விஸ்வநாதன் மேல்முறையீடு

டெல்லி: அதிமுக பொதுக்குழு குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் நத்தம்விஸ்வநாதன் மேல்முறையீடு செய்துள்ளார். 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக  நத்தம்விஸ்வநாதன் மேல்முறையீடு செய்து இருக்கிறார்

உதய்பூர் படுகொலை சம்பவம்: தப்பியோடிய இருவரை விரட்டிப் பிடித்த காவலர்கள் – நடந்தது என்ன?

உதயபூர்: உதய்பூரில் டெய்லர் ஒருவரை படுகொலை செய்த இரண்டு நபர்களை போலீஸார் வாகனத்தில் சென்று துரத்திப் பிடித்தனர். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பைக்கில் செல்லும் இருவரையும் போலீஸார் ரோந்து வாகனத்தில் விரட்டி மடக்கிப் பிடிக்கின்றனர். காவலர்கள் அவர்கள் இருவரையும் தாக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். பின்னர் மேலும் இரண்டு காவலர்கள் பைக்கில் வர அனைவரும் சேர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்கின்றனர். அளவு கொடுப்பதுபோல் நடந்த கொடூரம்: … Read more

பாம்புகளால் அவதிப்படும் பாலசோர் மக்களுக்கு உதவும் பாம்பு பிடிக்கும் நபர்..!

ஒடிசா மாநிலம் பாலசோரில் விஷமுள்ள 47 பாம்புகளும் 28 பாம்பு முட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. இதில் கொடிய விஷமுடைய ராஜநாகம், கட்டுவிரியன் போன்ற விஷப்பாம்புகள் உள்ளன. கார்த்திக் சேத்தி என்பவர் பாம்பு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார். அவர் இந்தப் பாம்புகளை லாவகமாக உயிருடன் பிடித்து வருகிறார். நேற்று மிகப்பெரிய நாகப்பாம்பு ஒன்றை அவர் மீட்டு தனது பாம்புகளின் எண்ணிக்கையை 47 ஆக்கினார். சுமார் 6 அடி நீளம் 5 கிலோ எடை கொண்ட இந்த நாகம் 21 … Read more

ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக மேலும் சில மாதம் நீடிக்க சம்மதம் தெரிவித்தார் கே.கே.வேணுகோபால்

டெல்லி: ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக மேலும் சில மாதம் நீடிக்க கே.கே.வேணுகோபால் சம்மதம் தெரிவித்துள்ளார். நாளையுடன் பதவிக்காலம் மூடியிருந்த நிலையில் ஒன்றிய அரசின் கோரிக்கையை கே.கே.வேணுகோபால் ஏற்றுள்ளார்.

தையல் கடைக்காரரை கொலை செய்தது பாகிஸ்தானின் ஸ்லீப்பர்செல்களா? உளவுத்துறை பகீர் தகவல்

ராஜஸ்தானில் தையல் கடைக்காரரை கொலை செய்தது பாகிஸ்தானின் ஸ்லீப்பர்செல்கள் என்று இந்திய உளவு அமைப்புகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரைச் சேர்ந்த தையல் கடைக்காரர் கன்னையா லால் என்பவரை இரண்டு பேர் நேற்று கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். மேலும், அவரை கொலை செய்த வீடியோவையும், பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வீடியோவையும் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது ராஜஸ்தான் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் … Read more

அபார்ட்மென்ட் முதல் தனி வீடு வரை: நீலத்தடி நீர் பயனாளிகள் நாளைக்குகள் பதியாவிட்டால் நடவடிக்கை – மத்திய அரசு அதிரடி

சென்னை: நீலத்தடி நீரை பயன்படுத்தும் அனைவரும் நாளைக்குள் (ஜூன் 30) பதிவு செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் நிலத்தடி நீரை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவர்கள் கட்டயாம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீச்சல் குளம், சுரங்க திட்டங்கள், உட்கட்டமைப்பு, இண்டஸ்டரியல், … Read more