424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் – பஞ்சாப் அரசு அதிரடி

பஞ்சாபில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 424 விஐபிக்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை அம்மாநில அரசு அதிரடியாக திரும்பப் பெற்றிருக்கிறது. பஞ்சாபில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸை தோற்கடித்து ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. முதல்வராக பகவந்த் மன் பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார். ஆம் ஆத்மி அரசு அமைந்தது முதலாக பஞ்சாபில் பல அதிரடி நிர்வாக மாற்றங்கள் அமலாகி வருகின்றன. அந்த வகையில், விஐபி கலாச்சாரத்தை ஒழிப்பதிலும் பஞ்சாப் … Read more

ஐநா.மனித உரிமைக் கவுன்சில் தலைவர் சீனாவில் சுற்றுப்பயணம்

ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிச்சேல் பாச்செலட் சீனா கடந்த 6 நாட்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்டார். சிறுபான்மையினர் மற்றும் முஸ்லீம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து அவர் கவலை தெரிவித்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் காணொலி வாயிலாக கலந்து பேசிய அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை நேரில் சந்தித்தும் உரையாடினார். சீனாவில் மனித உரிமை நிலைமையை ஆய்வு செய்ய தாம் வரவில்லை என்றும் மிச்சேல் கூறினார்.   Source … Read more

'இந்தியாவில் டெஸ்லா வாகன உற்பத்தி கிடையாது' – எலான் மஸ்க் ட்விட்டுக்கு பதிலளித்த ஓலா சிஇஓ

”டெஸ்லா கார்களை முதலில் விற்பனை செய்யவும், சர்வீஸ் செய்யவும் அனுமதிக்காத வரை இந்தியாவில் எந்த இடத்திலும் கார் உற்பத்தி ஆலையை அமைக்க முடியாது” என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். ஓலா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கி இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்குமா என ட்விட்டரில் நெட்டிசன் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த டெஸ்லா நிறுவனத்தின் … Read more

ஓசூரில் தொழிலதிபரை கத்தி முனையில் கடத்தி 10 லட்ச ரூபாய் பறித்த 3 பேர் கைது.!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழிலதிபரை கத்தி முனையில் கடத்தி 10 லட்ச ரூபாய் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அஞ்செட்டியை சேர்ந்த வெங்கோப ராவ் என்பவரை கடந்த 9ஆம் தேதி ரியல் எஸ்டேட் இடம் காண்பிப்பதாக கூறி அழைத்துச் சென்ற 3 பேர் வனப் பகுதி அருகே கத்தியைக் காட்டி மிரட்டி 10 லட்ச ரூபாய் பறித்ததாக கூறப்படுகிறது. உயிர்பயத்தால் வெங்கோபராவ் தாமதமாக புகார் அளித்த நிலையில், சம்பவம் தொடர்பாக அஞ்செட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த … Read more

இந்தியா திராவிடர்களுக்கு, ஆதிவாசிகளுக்கு சொந்தமானது- அசாதுதீன் ஓவைசி பேச்சு

மகாராஷ்டிரா மாநிலம் பாய்வாடியில் நடைபெற்ற, அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவரும், ஐதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி பேசியதாவது: இந்தியா என்னுடையதோ, தாக்கரேவின் உடையதோ, மோடியுடையதோ, அமித்ஷாவினுடையதோ அல்ல.  இந்தியா யாருக்காவது சொந்தமென்றால் அது திராவிடர்களுக்கும் , ஆதிவாசிகளுக்கும்தான். பாஜக – ஆர்.எஸ்.எஸ். ஆகியவை முகலாயர்களுக்கு பின்னர் வந்தவை.   ஆப்ரிக்கா, ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வந்த பின்னரே இந்தியா … Read more

கடந்த 8 ஆண்டு ஆட்சிக் காலத்தில் மக்களை தலைகுனிய வைக்கவில்லை: குஜராத்தில் பிரதமர் மோடி பேச்சு

ராஜ்கோட்: ‘கடந்த 8 ஆண்டுகால பாஜ ஆட்சியில், பொதுமக்களை தலைகுனிய வைக்கும் அளவுக்கு எந்த தவறும் செய்யவில்லை’ என குஜராத்தில் பிரதமர் மோடி பேசினார். குஜராத் மாநிலத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார். ராஜ்கோட் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை நேற்று திறந்து வைத்து அவர் பேசியதாவது: பாஜ  அரசு, நாட்டிற்கு சேவை செய்ய துவங்கி 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த ஆண்டுகளில், ஏழைகளுக்கு சேவை, சிறந்த நிர்வாகம் மற்றும் … Read more

மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்? – இன்று அறிவிப்பு வெளியாகிறது

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் உள்பட மாநிலங்களவையின் பல உறுப்பினர்கள் ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 1 வரை ஓய்வு பெறுகிறார்கள்.  இதையடுத்து தமிழகம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரா உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை இன்று முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்கள் குறித்து அக்கட்சியின் … Read more

விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு ஏழுமலையானை தரிசிக்க 13 மணி நேரம் காத்திருப்பு: 3 கிமீ தூரத்துக்கு வரிசை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் 13 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு திரளான பக்தர்கள்  சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானமும் தினமும் 30 ஆயிரம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் ஆகஸ்ட் மாதம் வரை விற்பனை செய்து உள்ளது. … Read more

இந்தியா-வங்காளதேசம் இடையே இன்று முதல் விரைவு ரெயில்கள் இயக்கம்

கொல்கத்தா: கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா வங்காளதேசம் இடையே மூன்று ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது இரு நாடுகளிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில், இன்று முதல் இரு நாடுகளுக்கும் இடையே  பயணிகள் ரெயில்கள் மீண்டும் மீண்டும் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்கத்தா – டாக்கா இடையே,  கொல்கத்தா மைத்ரீ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும், கொல்கத்தா – குல்னா  இடையே கொல்கத்தா பந்தன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் இன்று மீண்டும் தொடங்குகிறது என்று கிழக்கு … Read more

யாசின் மாலிக்கின் செயலை நியாயப்படுத்த வேண்டாம்: ஓஐசி.க்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி: யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை விமர்சித்த இஸ்லாமிய நாடுகள் அமைப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  தீவிரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்த வழக்கில் ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு  ஆயுள் தண்டனை விதித்து  என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் கடந்த 19ம் தேதி தீர்ப்பளித்தது. இவருக்கு தண்டனை அளிக்கப்பட்டதை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்( ஓஐசி) மனித உரிமைகள் ஆணையம் விமர்சித்து இருந்தது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து ஒன்றிய வெளியுறவு … Read more