ஹரித்துவாரில் பாபா ராம்தேவ் யோகாசனப் பயிற்சி.. குழந்தைகள் உள்ளிட்டோர் பயிற்சியில் பங்கேற்பு

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா குரு பாபா ராம்தேவ், குழந்தைகள் உள்ளிட்டோருடன் யோகா பயிற்சிகள் மேற்கொண்டார். பதஞ்சலி யோகபீடத்தில் நடைபெற்ற நிகழ்வில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு யோகாசன பயிற்சிகளை செய்து காட்டினர். Source link

மூசோவாலாவை சுட்டு கொன்ற 2 பேர் கைது: உதவிய நபரும் சிக்கினார்

புதுடெல்லி: பஞ்சாபில் காங்கிரஸ் பிரமுகர் மூசேவாலா கொலை வழக்கு தொடர்பாக அவரை துப்பாக்கியால் சுட்ட இரண்டு பேர் உட்பட மூன்று பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்து மூசேவாலா மே 29ம் தேதி மர்மநபர்களால் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியதாக பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோயை கடந்த வாரம் போலீசார் காவலில் எடுத்து … Read more

தொடரும் 'அக்னிபாத்' போராட்டம் – முப்படை தளபதிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வரும் சூழலில் தரைப்படை, விமானப்படை, கடற்படை தளபதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டும் இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபாத் திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகின்றன. வழக்கமான ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவித சலுகைகளும் இந்த திட்டத்தின் கீழ் சேரும் அக்னி வீரர்களுக்கு கிடைக்காது என்பதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில் … Read more

காதலித்த 2 பெண்களை ஒரே நேரத்தில் கரம் பிடித்த காதலன்!!

காத்து வாக்குல ரெண்டு காதல் போன்று காதலித்த இரண்டு பெண்களையும் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா அருகே பண்டா என்ற கிராமத்தில் வசித்து வரும் சந்தீப் ஓராவன் என்பவர் குசும் லக்ரா என்ற பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவருடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். அவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு … Read more

பிரபல நடிகர் கொலை வழக்கில் சிக்கிய நெருங்கிய உறவினர்!!

சதீஷ் வஜ்ரா கன்னட திரைப்படமான லவோக்ரி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் சதீஷின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சதீஷ் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். பெங்களூரு ஆர்ஆர் நகர் பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது. வீட்டின் முன்பக்க பகுதியை சுத்தம் செய்யும் போது ரத்தக்கறை படிந்திருப்பதை பார்த்த வீட்டு உரிமையாளர் சிசிடிவி கேமராவை சோதனை செய்தார். அதில், ​நள்ளிரவு 12:30 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. வந்தவர்கள், சதீஷின் … Read more

அங்கீகரிக்கப்படாத 111 கட்சிகளின் பதிவு ரத்து – இந்திய தேர்தல் ஆணையம்

நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத 111 கட்களின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. நாடு முழுவதும் 2ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த முகவரியில் இயங்காதது, நிதி பங்களிப்பு, பொறுப்பாளர் விவரங்கள், தேர்தல் செலவுகள் உள்ளிட்ட விவரங்களை ஆணையத்திடம் தாக்கல் செய்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்யக்கோரிய உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.முப்படைகளில் 4 ஆண்டு கால சேவையில் இளைஞர்களை சேர்க்கும் வகையில் அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கும் நிலையிலும், ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட … Read more

திருவனந்தபுரம் அருகே 2 வாலிபர்கள் பலி உயிரை பறித்த பைக் ரேஸ்: நேருக்கு நேர் மோதி விபத்து

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி வாலிபர்கள் பைக் ரேஸ் நடத்துவது வழக்கம். அதன்படி வழக்கமான போக்குவரத்து சமயத்திலேயே, வாகனங்களில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ் நடத்திவந்தனர். பலமுறை பொதுமக்கள் புகார் கொடுத்தும் போலீசாரும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல சாலையில் பைக் ரேஸ் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 25க்கும் மேற்பட்ட வாலிபர்கள் சாலையில் சீறிப்பாயும் வேகத்துடன் … Read more

முதல் முறையாக கொலம்பியாவில் இடதுசாரி ஆட்சி

பொகோடா: கொலம்பியாவில் முதல் முறையாக இடதுசாரி கட்சியை சேர்ந்த முன்னாள் கிளர்ச்சியாளர் கஸ்டவோ பெட்ரோ வெற்றி பெற்றுள்ளார்.தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அங்கு கடந்த மாதம் அதிபர் தோ்தல் நடைபெற்றது. இதில், இடதுசாரி கட்சியை சோ்ந்த கஸ்டாவோ பெட்ரோ, ரியல் எஸ்டேட் அதிபர் ரோடோல்போ ஹெர்னாண்டஸ் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில், 50.48 சதவீத வாக்குகளுடன் கஸ்டாவோ வெற்றி பெற்றுள்ளார். ஹெர்னாண்டஸ் 47.26 சதவீதம் ஓட்டுகளை … Read more

அக்னி பாதை | ஜூலை முதல் விண்ணப்பிக்கலாம் – கல்வித் தகுதி, வழிமுறைகளை வெளியிட்டது ராணுவம்

புதுடெல்லி: ‘அக்னி பாதை’ திட்டத்தில் சேர அடுத்த மாதம் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படையில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் ‘அக்னி பாதை’ திட்டம், கடந்த 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. புதிய திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் அக்னி பாதை திட்டத்தில் வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: அக்னி பாதை திட்டத்தில் … Read more