இளையராஜா ஒரு மட்டமான மனிதர் : ஜேம்ஸ் வசந்தன்!!

இசைஞானி இளையராஜாவை, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஒரு மட்டமான மனிதர் என்று விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜேம்ஸ் வசந்தன், பசங்க, ஈசன் போன்ற வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில், யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இளையராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், இசையமைப்பாளர் இளையராஜா தான் என்னுடைய குரு. அவருடைய பாடல்களைக் கேட்டு … Read more

அதிமுக எம்.பி சி.வி.சண்முகத்தின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது ஏன்? – உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கம்

சென்னை: அதிமுக எம்.பி சி.வி.சண்முகத்துக்கான பாதுகாப்பை மறு ஆய்வு செய்தபோது, அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவருடைய பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான சி.வி.சண்முகம் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், “கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அன்று, என் வீட்டில் நுழைந்த மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில், … Read more

சென்னையை குறி வைத்த வானிலை… அடுத்த 5 நாட்களுக்கு மழை..! சுடசுட தகவல்..!

சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பேரையும் என சென்னை வானிலை மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், இன்று தற்போது ”அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட … Read more

50 வயது நபருக்கு 33 ஆண்டு கடுங்காவல்: போக்சோ வழக்கில் மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா அதிரடி

புதுக்கோட்டை அருகே உள்ள கைக்குறிச்சி விஜயரகுநாதபுரம் பகுதியை சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் கணேசன். இவருக்கு வயது 50. இவர் 6.6.2022 அன்று காலை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 14 வயது சிறுமியின் வீட்டிற்குள், யாரும் இல்லாத பொழுது அத்துமீறி உள்ளே நுழைந்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.  இதில் பயந்து போன 14 வயது சிறுமி தாயிடம் நடைபெற்ற சம்பவத்தை கூறவே பதறிப்போன சிறுமியின் தாய் அன்று இரவு 9 … Read more

காலி பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் ரூ.1 தரப்படும்: நெல்லை மாநகராட்சி ஆணையர்

நெல்லை: காலி பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் ரூ.1 தரப்படும் என நெல்லை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாநகராட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நெகிழி இல்லா மாநகரை உருவாக்கவும் காலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.1 வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக தச்சநல்லூர் மண்டலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்து பணம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“ராகுல் காந்திக்கு ஏன் நீதிமன்றம் தண்டனை தந்துள்ளது?”- சீமான் கேள்வி!

”அரசை விமர்சனம் செய்வது குற்றமில்லை என நீதிமன்றமே கூறி உள்ளது. அப்படி இருக்கையில் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஏன் தண்டனை தந்துள்ளது” எனக் கேள்வியெழுப்பியுள்ளார் சீமான். திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக,  காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அந்த சம்பவம் தொடர்பாக மதிமுகவினர் கொடுத்த புகாரிலான … Read more

திருப்பூர் : திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் – காதலரோடு தப்பி ஓட்டம்.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தாழைக்கரை பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதன் படி, இன்று திருமணம் நடைபெற இருந்ததால் அதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் மிக விரைவாக செய்து வந்தனர்.  இந்த நிகழ்ச்சியில், கலந்துகொள்வதற்காக உறவினர்கள் அனைவரும் வந்து இருந்தனர். இந்த நிலையில், இன்று காலை திடீரென மணப்பெண் காணாமல் போய் உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.  இதையடுத்து … Read more

பிரபல நடிகை கைது செய்யப்பட வாய்ப்பு!!

மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த கார் விபத்து தொடர்பான வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடிகை யாஷிகா ஆனந்த் தனது தோழி வள்ளிச்செட்டி பவனி, ஆண் நண்பர்கள் செய்யது, அமீர் ஆகியோருடன் காரில் புதுச்சேரி சென்று விருந்தில் பங்கேற்று விட்டு திரும்பும் போது விபத்தில் சிக்கினார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பியபோது மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த விபத்தில் தோழி … Read more

திருட்டு வழக்கில் சிக்கிய மனைவியை ஆசிட் வீசி கொல்ல முயற்சி… நீதிமன்ற வளாகத்தில் கணவனுக்கு தர்ம அடி..!

கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீசி கணவர் கொல்ல முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிட் வீசியவரை  மடக்கிப்பிடித்த வழக்கறிஞர்கள் வெளுத்தெடுத்த  பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி.. கோவை ராமநாதபுரம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி கவிதா. இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு கவிதா, பேருந்தில் பயணித்த போது கூட்ட நெரிசலை பயன்படித்தி பெண் பயணி ஒருவரிடம் இருந்து … Read more