நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை கற்பிக்க கூடாது: ஒன்றிய இடைநிலை கல்வி வாரியம் எச்சரிக்கை
வேலூர்: மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களை ஏப்ரல் 1ம்தேதிக்கு முன்னதாக கற்பிக்கக் கூடாது என்று ஒன்றிய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்துள்ளது. சிபிஎஸ்இயின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளையும், பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 5ம்தேதியும் முடிகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் சிபிஎஸ்இ கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களுக்கு இப்போதே சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு கற்பிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு … Read more