பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை: முன்னேற்பாடுகள் தீவிரம்- அதிகாரிகள் ஆய்வு!

PM Modi tamil nadu visit பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தமிழ்நாடு வர உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுக்ள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று (ஏப்ரல் 3) தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்களுடனும் காணொலி காட்சி வாயிலாக நீலகிரி மாவட்ட … Read more

டெல்டா மாவட்டங்களை சீரழிக்க முயற்சி! மத்திய அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு!

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டில் அவர் கூறும் போது,  ஆன்லைன் சூதாட்டம் எதிர்ப்பு மசோதாவிற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தால் 19 பேர் உயிரிழந்ததற்கு தமிழக ஆளுநர்தான் காரணம்.  ஆன்லைன் சூதாட்டத்தால் 19 பேர் உயிரிழந்தது மட்டுமன்றி தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்கள் வீதிக்கு வந்து விட்டது என்றார்.  மின்மிகை மாநிலமாக உள்ள தமிழகத்தில் என்எல்சி … Read more

"பேச்சு மட்டும் தான், செயல் எங்கே? கலாஷேத்ரா கல்லூரி விவகாரம்.! நாதக சீமான் அட்டாக்.!

சென்னை அடையாறில் இயங்கி வரும்  பாரம்பரியமிக்க கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமை  மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக  மாணவியல் கொடுத்த புகாரை தொடர்ந்து கல்லூரி வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி வரை மூடப்பட்டிருக்கிறது. சென்னை அடையாறில் இயங்கி வரும்  கலாஷேத்ரா நடனம் மற்றும் கலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் அங்கு போகையிலும் மாணவியிடம் பாலியல் ரீதியாக தொடர் தொல்லை கொடுத்து வந்ததையடுத்து இந்தக் கொடுமைக்கு எதிராக தொடர் குரல் எழுப்பிய … Read more

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்படாது: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் உறுதி

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சுரங்கப் பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைப்பதற்கான தொடக்க கட்ட பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “இது தொடர்பாக மக்கள் பீதி அடைய வேண்டாம். … Read more

காவிரி டெல்டாவில் புதிய நிலக்கரி திட்டங்கள்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

புதிய நிலக்கரித் திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளிக்க கூடாது என்று பாமக தலைவர் கூறியுள்ளார். பாலைவனமாக மாறும் வேளாண் மண்டலம்! இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் நிலக்கரி சுரங்கங்கள் எனப்படும் பேரழிவு சக்தியின் கொடுங்கரங்கள் காவிரி பாசன மாவட்டங்களையும் இறுக்கிப் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. காவிரி படுகையில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைக்கப்படவுள்ளன. இது தடுக்கப்படாவிட்டால் வளம் மிகுந்த காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் … Read more

திருப்பத்தூர் அருகே பரிதாபம்.! 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று… தாயும் தற்கொலை முயற்சி.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவரது மனைவி ஜமுனா (33). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜமுனா கடந்த மூன்று வருடங்களாக பெரியாங்குப்பத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதையடுத்து ஜமுனா, தாய் வீட்டில் தங்கியிருப்பது தொடர்பாக … Read more

தமிழகத்தில் வார்டு மறுவரையறை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: தமிழகத்தில் வார்டு மறுவரையறை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஏப்.4) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் வார்டுகள் மறுவரையறை, மாநகராட்சி விரிவாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சருடன் ஆலோசித்த பின்பு, குழு அமைத்து வார்டுகள் மறுவரையறை செய்யப்படும்” என்று தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வரும் என்ற இபிஎஸ் … Read more

ஸ்டாலின் எடுத்த முடிவு? மேலிட உத்தரவால் அமைச்சர்கள் அதிருப்தி!

மகளிர் உரிமைத் திட்டம் கலைஞர் நூற்றாண்டான 2023ஆம் ஆண்டில் திராவிட மாதமான செப்டம்பரில் அண்ணா பிறந்தநாளான செப்.15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் கூறினார். இந்த திட்டத்துக்காக ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி பெண்கள் மாதம் 1000 ரூபாய் பெறுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். செப்டம்பர் முதல் மார்ச் வரை ஏழு மாதங்களுக்கு 7000 கோடி ரூபாய் எனும் … Read more