மேல்மருவத்தூர் : ரெயிலில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் உயிரிழப்பு.!

சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் திண்டிவனம் அருகே உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதற்காக இவர் சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் பயணிகள் ரெயிலில் செல்வது வழக்கம்.  இந்த நிலையில், அவர் நேற்று வழக்கம் போல் வீட்டில் இருந்து எடுத்து செல்லும் உணவை சாப்பிட்டு விட்டு பாத்திரத்தை மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி கழுவி விட்டு ரெயிலில் ஏறுவதற்காக வந்துள்ளார்.  அப்போது திடீரென ரெயில் புறப்பட்டு … Read more

“ஒரு கட்டிடத்துக்கு அனிதாவின் பெயர் சூட்டுவதால் நீட் பிரச்சினை முடிந்துவிடுமா?” – பிரேமலதா கேள்வி

புதுக்கோட்டை: “அரியலூரில் ஒரு கட்டிடத்துக்கு அனிதாவின் பெயர் வைத்துவிட்டதால், நீட் தேர்வு தொடர்பான பிரச்சினை முடிந்துவிட்டது என்று அரசு நினைக்கிறது. இது நிச்சயமாக கண்டனத்துக்குரிய விஷயம்” என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ஆவின் பால் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசர், பால் தொடர்பான விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி, … Read more

டெல்லி புறப்படும் அண்ணாமலை: ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கிறாரா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று மோடி, அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக கார சார கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாஜகவிலிருந்து அண்னாமலையுடனான மோதலால் அவரை கடுமையாக விமர்சித்துவிட்டு வெளியேறியவர்களை எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இணைத்ததால் அண்ணாமலை தரப்பு அதிருப்தியடைந்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் உருவ படத்தை பாஜகவினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு அண்ணாமலையின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரித்தனர். … Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை புறக்கணியுங்கள் – முக்கிய தலைவர் பேச்சால் பரபரப்பு!

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை திடீரென அறிவித்து இருக்கிறார். இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது.  ஒரு தேர்தல் என்றால் வாக்காளர் பட்டியல், வேட்பாளருக்கு கால அவகாசம் உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.  திடீர் சாம்பர், ரசம் போன்று இந்த தேர்தலை அறிவித்துள்ளார்.  தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப … Read more

சொத்து பிரச்னையால் தகராறு கலெக்டர் அலுவலக வாசலில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி

நெல்லை : நெல்லை கலெக்டர் அலுவலக வாசலில் சொத்து பிரச்னை தொடர்பாக தாயும், மகளும் மண்ணெண்ணெய் ஊற்றி நேற்று தீக்குளிக்க முயன்றனர். நெல்லை கலெக் டர் அலுவலக வாயி லில் தீக்குளிப்பு முயற்சி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இச்சம்பவங்களை தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தினமும் கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே செல்பவர்களை போலீசார் விசாரணை, சோதனை நடத்தியே அனுப்பி வருகின்றனர். மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்குள், தீக்குளிப்பு … Read more

மத்திய அரசு பட்டியலில் இருந்து காணாமல்போன விருதுநகர் மெகா ஜவுளி பூங்கா

விருதுநகரில் அமையவில்லை மெகா ஜவுளி பூங்கா 4445 கோடி செலவில் அமைக்கப்படும் 7 டெக்ஸ்டைல் மெகா பூங்காக்களின் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 4445 கோடி செலவில் மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை முன்னெடுக்கும் நோக்கில் PM MITRA Parks செயல்படுத்தப்படுகிறது.முன்மொழியப்பட்ட … Read more

போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்த ரவுடி கால் உடைந்த நிலையில் கைது

போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்த ரவுடி கால் உடைந்த நிலையில் கைது Source link

ஹெலிகப்டர் விபத்தில் மரணமடைந்த மேஜர் ஜெயந்த் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் தகனம்.!

அருணாச்சலபிரதேசத்தில் உள்ள கமெங் மாவட்டம், சாங்க் கிராமத்தில் இருந்து இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று முன்தினம் காலை புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரி உள்ளிட்டோர் சென்றனர். பூம்டிலா மாவட்டம் மன்டலா பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இதையடுத்து போலீசார் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ராணுவ அதிகாரிகள் குறித்து விசாரணை … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை..!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரி ஜெயந்தின் உடல், முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. தேனி மாவட்டம் ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்த், 2010ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து மேஜராக பதவி உயர்வு பெற்றார். இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆகும் நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் நேர்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஜெயந்த் உயிரிழந்தார். நேற்று நள்ளிரவு ராணுவ விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட மேஜர் ஜெயந்தின் உடலுக்கு மதுரை ஆட்சியர் … Read more

பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: பள்ளிக்கரணை ராம்சர் ஈரநிலத்தில் கட்டிடக்கழிவுகளைக் கொட்டி ஆக்கிரமிக்கும் சதியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”இராம்சர் ஈரநிலமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்படுவதும், அங்கு 40 அடி அகல சாலை அமைக்கப்படுவதும் அதிர்ச்சியளிக்கின்றன. நீர் சூழ்ந்த நிலத்தை மீட்கவே இவ்வாறு செய்யப்படுவதாக தோன்றுகிறது. இது கண்டிக்கத்தக்கது; தண்டிக்கத்தக்கது. கட்டிடக்கழிவுகள் கொட்டப்படும் நிலம் ஒரு … Read more