மீண்டும் சென்னையில் நள்ளிரவில் பைக் ரேஸ்…! துரத்தி பிடித்த போலீசார்…!!

சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை பகுதிகளில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட போவதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் நேற்று இரவு பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் சிலர் விலை உயர்ந்த வாகனங்களில் அதிவேகமாக, பொதுமக்களுக்கு இடையூறு செய்தப்படி வந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அண்ணாசாலையில் அதிவேகமாக வந்தவர்களை தடுத்து நிறுத்த போலீசார் முற்பட்டனர். ஆனால் அவர்கள் கையில் சிக்காமல் இளைஞர்கள் தப்பித்து சென்றனர். போலீசார் சாலையில் ஓடியபடி அவர்களை துரத்தி … Read more

அரசியல் நோக்கத்துக்காகவே ‘மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு’ கோரும் தீர்மானம்: வானதி காட்டம்

சென்னை: மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் தீர்மானம் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானம் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைக் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்த அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானத்தின் மீது … Read more

மூன்று நாள்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் ‘கூல்’ அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 5 தினங்களுக்கான (ஏப்ரல் 19 முதல் 23 வரை) வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் (ஏப்ரல் 19, 20 )தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 21ஆம் தேதி … Read more

மக்களே உஷார்! அதிகரிக்கும் கொரோனா தொற்று – ஒரே நாளில் 10,542 பேருக்கு பாதிப்பு!

Covid Cases in India Today: மீண்டும் அச்சமூட்டும் கொரோனா தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10,542 பேருக்கு பாதிப்பு. தமிழகத்தை பொறுத்த வரை ஒரே நாளில் 527 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.

#BIG BREAKING : அதிமுக – பாஜக கூட்டணி முறிந்ததா ?

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளையும் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய உள்ளது. 24ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைகள் நடந்து அன்றய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 4 இடங்கள் கேட்டு அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் பாஜக சீட் இல்லை என … Read more

கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு: மத்திய அரசை வலியுறுத்தி தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைக் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூக நீதியின் பயன்களைப் பெற, அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் இன்று முன்மொழிந்த முதல்வர் ஸ்டாலின், “மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூக நீதியை மறுப்பது சரியாகாது. … Read more

மாற்றுத் திறனாளி கிரிக்கெட் கேப்டனை அவமதித்த நடத்துநர்: அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை!

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா. இவர் நேற்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மதுரை செல்வதற்காக நேற்று (ஏப்ரல் 18) இரவு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான கழிப்பறை வசதியுடன் கூடிய எஸ்.இ.டி.சி பேருந்தில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை என கூறி பேருந்தில் ஏறக்கூடாது என கூறியுள்ளார். அப்போது சச்சின் சிவா, இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது என பதிலளத்துள்ளார். … Read more

கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: பாஜகவிற்கு எதிராக களமிறங்குகிறது அதிமுக – எடப்பாடியின் ஸ்கெட்ச் என்ன?

BJP AIADMK Breakup: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்றும், புலிகேசிநகர் தொகுதியில் அதிமுக கர்நாடக மாநிலத் தலைவர் அன்பரசன் போட்டியிடுவார் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

டாஸ்மாக்கில் கூடுதல் பீர் பாட்டில்களை கொள்முதல் செய்ய வேண்டும்..!!

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி) தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா. பெரியசாமி எழுதிய கடிதத்தில், “தற்போது கோடை வெயில் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து தேவைக்கும் குறைவாகவே பீர் பாட்டில்கள் விநியோகம் செய்வதால் டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மது பிரியர்கள், பீர் பாட்டில் கேட்டு பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  எனவே தமிழ்நாடு … Read more

15 ஆண்டுகளைக் கடந்த அரசுப் பேருந்துகள், பிற வாகனங்களை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளும், பிற ஊர்திகளும் சுற்றுச்சூழலுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, அவை அவற்றில் பயணிப்பவர்களுக்கு மட்டுமின்றி, சாலையில் செல்வோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றைக் கருத்தில் கொண்டு 15 ஆண்டுகளைக் கடந்த அரசுப் பேருந்துகளையும், பிற அரசுத் துறை ஊர்திகளையும் உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் 1500 அரசு போக்குவரத்துக்கழக … Read more