டெல்லியை உலுக்கிய மற்றுமொரு சம்பவம் ..!! தலைநகரில் 15 வயது சிறுமியின் உடல் உறுப்புக்கள் திருட்டு..!!

தலைநகர் டெல்லியில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 15 வயது சிறுமி, இந்து ராவ் மருத்துவமனையில் கடந்த 21-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த 24-ம் தேதி மருத்தவர்கள் அந்த சிறுமிக்கு குடல் அழற்சி அறுவை சிகிச்சை செய்தனர். ஜனவரி 26-ம் தேதி அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இறுதிச் சடங்கு செய்யும் போது சிறுமியின் வயிற்றில் வெட்டு விழுந்ததை … Read more

ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர்.. அந்தியூர் அருகே பயங்கரம்..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணின் கழுத்தை பிளேடால் அறுத்து தப்பமுயன்ற இளைஞரை பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோ ஓட்டுநர் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில் அந்த பெண் குன்னூரை சேர்ந்த ராஹிலா என்பதும், பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. அவரது கழுத்தை அறுத்த இளைஞர் ராஹிலாவின் உறவினர் ஜீவா என்பதும், காதல் தோல்வியால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்துள்ளது. Source link

அனைவருக்கும் சமமான கல்வி முறை: ஜி-20 கல்வி மாநாட்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்

சென்னை: உலக அளவில் அடித்தட்டு மக்கள் உட்பட அனைவரும் சமமான அறிவு, திறனை பெறுவதற்கான கல்வி முறை தேவைப்படுகிறது என்று சென்னையில் நடந்த ஜி-20 மாநாட்டின் கல்விக்குழு கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார். ஜி-20 அமைப்பின் 2022-23-ம் ஆண்டு மாநாட்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகள் சார்பில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், கல்வித் துறை சார்பில் ஜி-20 முதலாவது கல்வி பணிக்குழு மாநாடு சென்னையில் … Read more

எடப்பாடி களமிறக்கிய 4 ஸ்பெஷல் டீம்… ஈரோடு கிழக்கில் அதிமுகவின் சீக்ரெட் மூவ்!

காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவும், பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பும் சற்று எதிர்பாராதவை. இதையொட்டி தமிழ்நாடு அரசியல் களம் தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு சீட்டை விட்டுக் கொடுத்து விட்டனர். அதன்பிறகு வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கூட்டணி கட்சிகளின் ஆதரவு, பிரச்சாரம், தேர்தல் பணிமனை திறப்பு என ஆளுங்கட்சி தரப்பு வேகமாக செயல்பட்டு வருகிறது. உட்கட்சி பூசல் நாளைய தினம் ஈவிகேஎஸ் … Read more

கனமழை காரணமாக இன்று(02-02-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை: கனமழை காரணமாக மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் இன்று(02-02-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று(02-02-2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல்: அடுத்தடுத்து மாற்றப்பட்ட அதிமுக பேனர் – காரணம் என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், அதிமுக இபிஎஸ் அணி தேர்தல் பணிமனையில் இருந்த பேனர் இரண்டாவது முறையாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிமனைகளை அமைத்து தீவர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே இபிஎஸ் அணி சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் செங்கோட்டையன் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி … Read more

#BREAKING : கனமழை காரணமாக.. தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!

கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று அதிகாலை முதல் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 2 … Read more

தமிழ்நாட்டில் பிப்ரவரி 5 வரை கனமழைக்கு வாய்ப்பு!!

தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு- தென் கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென் கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக,இன்று (பிப். 2) தென் தமிழ்நாடு மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழ்நாடு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, … Read more